என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
    • அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் தொடருக்காக ரேசர் அஜித் குமார் துபாயில் இருக்கிறார். அஜித் குமாரின் ரேசிங்கை நேரில் காணவும், அவரை வாழ்த்தவும், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் துபாய் சென்று வருகின்றனர். இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார்.

    ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், அஜித் குமாரை சந்தித்தது, பந்தய களத்தில் கிடைத்த அனுபவம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "ரீடேக் இல்லை. ஸ்டன்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் இல்லை. உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மயில் மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை, இதுதான் அஜித் குமார்," என குறிப்பிட்டுள்ளார்.



    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
    • அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அஜித் குமார். நடிப்பு ஒருபக்கம், ரேசிங் ஒருபக்கம் என பம்பரமாக சுழன்று வருகிறார். அந்த வகையில், தற்போது துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகிறார். ரேசிங் ஒருபக்கம், ரசிகர்கள் ஒருபக்கம் என சமூக வலைத்தளங்களில் அஜித் குமார் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

    அடிக்கடி ரேசர் அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன் என துபாயில் தமிழ் நடிகர்கள் அஜித் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார். ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார்.
    • ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார்.

    சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கார்த்தி ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருடன் நடிகர் சூர்யா, கார்த்தி சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    • வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
    • லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கு லீடர் என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், டைட்டில் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டு நிகழ்வின் தருணங்களை பிரதிபலிக்கும் வீடியோ ஒன்றை லெஜண்ட் சரவணன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் "லீடர்" டைட்டில் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியீட்டு நிகழ்விற்கு லெஜண்ட் சரவணன் வருகை மற்றும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின் கிங்ஸ்லி . இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார். இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்.

    நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னர் விஜயுடன் 'பீஸ்ட்' மற்றும் ரஜினியுடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து இருந்தார்.

    இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், விசிக தலைவர்திருமாவளவனை ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது ரெடின் கிங்ஸ்லி குழந்தையை திருமாவளவன் தூக்கி கொஞ்சினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

    நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகி சாய் தன்ஷிகா, அடிக்கடி டிரான்ஸ்பர் பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு வந்து சேருகிறார் சாய் தன்ஷிகா. அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொலை, அடிதடி, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் தாதா கபீர் துஹான் சிங்குடன் தன்ஷிகாவுக்கு நேரடி மோதல் உருவாகிறது.

    மத்திய அமைச்சராக இருக்கும் அண்ணன் ஷாயாஜி ஷிண்டேவின் அரசியல் ஆதரவுடன் வில்லன் கபீர் சிங் அராஜகம் செய்து வருகிறார்.

    இறுதியில் கபீர் சிங் செய்யும் அராஜகங்களுக்கு தன்ஷிகா எப்படி பதிலடி கொடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகா அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிராப் ஹேர்ஸ்டைல், மிடுக்கான தோற்றம், ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, டூப் இல்லாமல் நடித்திருக்கும் சண்டை காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

    விஜயசாந்தி படங்களை நினைவூட்டும் வகையில், முழுக்க பெண் மைய ஆக்ஷன் படமாக யோகிடாவை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கவுதம் கிருஷ்ணா. ஆனால், கதையும் திரைக்கதையும் புதுமை இல்லாத வழக்கமான போலீஸ்–வில்லன் பாதையிலேயே பயணிக்கிறது. தாதா வில்லன், அரசியல் ஆதரவு, நேர்மையான அதிகாரிக்கு எதிரான சதிகள் என ஏற்கனவே பல படங்களில் பார்த்த அம்சங்களே அதிகம் இடம்பெறுகின்றன. வில்லன் கபீர் சிங், ஷாயாஜி ஷிண்டே மற்றும் பல கதாபாத்திரங்களுக்கு எதிர்பார்த்த அளவு அழுத்தமான காட்சிகள் அமையவில்லை.

    பூபதியின் ஒளிப்பதிவு மற்றும் கணேஷ் குமாரின் சண்டை அமைப்பு படத்திற்கு பலம் சேர்க்கின்றன. தீபக் தேவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மாலைமலர் ரேட்டிங்: 2 / 5

    • அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்
    • அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

    நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

    ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

    அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

    இதை தொடர்ந்து, அஜித்தை அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • இனம் புரியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்படும்.

    தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் முதன்மையானவராக வளம் வருபவர் அனிருத். அவரின் இசை இன்றி பெரிய ஹீரோக்களின் படங்கள் வருவதே இல்லை என்ற அளவுக்கு வெற்றிகரமான இசையமைப்பாளராக போட்டியின்றி திகழ்கிறார் அனிருத்.

    இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிருத், சிறுவயது நினைவை பகிர்ந்து, பணம் சம்பாதிப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

    நிகழ்வில் பேசிய அவர், சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும்போது 500 ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்படும். சில நிகழ்வுகளில் சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.

    இப்போது கோடிகளில் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும் அந்த சிறுவயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது" என்று தெரிவித்தார்.   

    • அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
    • அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

    நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

    ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

    அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்

    இதை தொடர்ந்து, அஜித்தை அபுதாபி யாஸ் மரினா சர்க்யூட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    • இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
    • இப்படத்தை கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ளனர்.

    நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ள படம் 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' . இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 20-ந்தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

    கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், மேக்னா சுமேஷ், தேவதர்ஷினி, இளங்கோ குமரவேல், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில், உதய் மகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அந்த டிரெய்லரில் மாயமான நாய் குட்டியான லக்கி அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொள்ள அதனை கதாநாயகன் மீட்பதே கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளது. 



    • இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
    • ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    நடிகர் ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவானது. இப்படத்தை 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி இருந்தார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

    தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் குவித்தது. பொங்கலையொட்டி வெளியான, சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', கார்த்தியின் 'வா வாத்தியார்' படங்களை பின்னுக்குத் தள்ளி ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

     

    இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 12-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம். 

    • 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • 2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதியன்று செய்தித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம் அவர்கள், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமான இவர், 1950 மற்றும் 1960களில் முன்னணி நாயகியாக விளங்கினார். 200-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் தாயார், மாமியார் போன்ற பல்வேறு துணை வேடங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.

    2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவராவார். 1935 ஏப் ரல் 7-ந்தேதி காரைக்குடியில் பிறந்த இவர், 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராகத் தொடங்கி, பின்னர் 1970 முதல் 1990 வரை தமிழ் சினிமா வில் மிகவும் வெற்றிகரமான வணிக இயக்குநராக உயர்ந்தார். 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களை இயக்கியுள்ளார்.

    தமிழ் திரைப்படத்துறைக்கு அளித்த பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற இவர், தமிழ் சினிமாவின் வணிக வெற்றியை தீர்மானித்த மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

    கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள எம்.என்.ராஜம், எஸ்.பி. முத்துராமன் ஆகிய இருவருக்கும் ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் முதலமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×