என் மலர்
சினிமா செய்திகள்
- ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ‘பைசன்’ படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17-ந்தேதி வெளியான 'பைசன்' படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது. இந்த நிலையில், 'பைசன்' திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள்.
- வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இதுதவிர 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் கவனம் ஈர்த்துள்ளது.
அதில் அவர், ''இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது.
தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த கடன் பிரச்சனை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக்கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்'' என்று விஜய் சேதுபதி பேசினார்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
- மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள கோவிந்தாவுக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் கோவிந்தா உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 61 வயது.
வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நிலையில் மும்பையில் உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள கோவிந்தாவுக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, கோவிந்தாவின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பவன் கல்யாணுடன் ‘உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார்.
- தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'தெலுசு கடா'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அடுத்து அவர் பவன் கல்யாணுடன் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தவிர, சமீபத்தில் அவருக்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ராஷி கன்னா ஆரம்பத்தில் அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியநிலையில், தற்போது அவர் பின்வாங்கி விட்டாராம். ஏற்கனவே முன்னணி நடிகை ஒருவர் விலகியதைத் தொடர்ந்து, தற்போது ராஷி கன்னாவும் பின்வாங்கி இருக்கிறார்.
அவர் நடிக்க மறுத்தது 70 வயதான தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரின் படத்தில் தான் என்று பேசப்படுகிறது.
- படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
- மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி "மிடில் கிளாஸ்" என்ற புதிய படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நடுத்தர குடும்பங்களின் இன்னல்களை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- முன்னதாக நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசனுக்கு (2016) வழங்கப்பட்டது.
- சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.

கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
வரும் நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
- நம் அனைவரின் இதயங்களையும் வென்ற சிறந்த நடிகர், குங்ஃபூ போர்வீரன், சிரிப்பின் மன்னன் ஜாக்கி சான் இன்று காலமானார்" என்று கூறப்பட்டது.
- அவரது குடும்ப உறுப்பினர்கள் இதை உறுதிப்படுத்தியதாக அந்தப் பதிவில் கூறப்பட்டது.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்த சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான்(71 வயது) இறந்துவிட்டதாக நேற்று முன் தினம் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் ஜாக்கி சான் புகைப்படத்துடன் இருந்த அந்த பேஸ்புக் பதிவில், "உலக சினிமாவில் மிகவும் பிரியமான நபர், நம் அனைவரின் இதயங்களையும் வென்ற சிறந்த நடிகர், குங்ஃபூ போர்வீரன், சிரிப்பின் மன்னன் ஜாக்கி சான் இன்று காலமானார்" என்று கூறப்பட்டது.
அவரது குடும்ப உறுப்பினர்கள் இதை உறுதிப்படுத்தியதாக அந்தப் பதிவில் கூறப்பட்டது.
இருப்பினும், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும், அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே சமூக ஊடகங்களில் ரசிகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். "பேஸ்புக் ஏன் ஜாக்கி சானைக் கொல்ல முயற்சிக்கிறது?" என்று ஒரு பயனர் கேலியாக வினவியுள்ளார்.
தற்போது 'நியூ போலீஸ் ஸ்டோரி 2', 'ப்ராஜெக்ட் பி' மற்றும் 'ஃபைவ் அகெய்ன்ஸ்ட் எ புல்லட்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். 'ரஷ் ஹவர் 4' படத்திலும் அவர் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் உறவினராவார். பவிஷ் அடுத்ததாக அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகேஷ் ராஜேந்திரன் 'போகன்' மற்றும் 'பூமி' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தை தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பெயரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நாளை 5 மணிக்கு அறிவிக்கிறார்.
காதல் கலந்த கமர்ஷியல் கதையாக உருவாகும் இப்படத்தில் நாகா துர்கா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இதன் ஒளிப்பதிவாளராக பி.ஜி. முத்தையா, எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக மகேந்திரன் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர். பவிஷ்– நாகா துர்கா ஆகியோருடன் முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.
படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. அத்துடன் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியான நிலையில், 2ஆவது சிங்கிள் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் சேர்ந்து தயாரிக்கும் படம் மை டியர் சிஸ்டம். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு சகோதரியாக மம்தா மோகன் நடிக்கிறார்.
இது ஒரு கலகலகப்பான குடும்ப பொழுதுபோக்கு மற்றும் எமோசன் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை பிரபு ஜெயராம் இயக்கி வருகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை தொடர்ந்து, தனது 54-ஆவது படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். தனுஷ்-க்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து தனது இந்தி திரைப்படத்தின் ப்ரோமோசனுக்காக தனுஷ் மும்பை சென்றுள்ளார்.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'தேரே இஷ்க் மே'. முன்னணி பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 28-ம்தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தனது 54ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இந்தி படம் ப்ரோமோசனுக்காக மும்பை சென்றுள்ளார்.
- அன்பு மயில்சாமியும், பிருந்தா கிருஷ்ணனும் காதலிக்கிறார்கள்.
- காதலியை துஷ்ட சக்தியிடம் இருந்து காப்பாற்றும் காட்சிகளில் அன்பு மயில்சாமி நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். tantra, tantra review, தந்த்ரா, தந்த்ரா விமர்சனம்
அன்பு மயில்சாமியும், பிருந்தா கிருஷ்ணனும் காதலிக்கிறார்கள். அந்த ஜோடியின் திருமணப் பேச்சு வார்த்தையின்போது குறுக்கே வருகிற, துஷ்டசக்தியை சுமந்திருக்கும் ஒரு பெண், 'பிருந்தா சாக வேண்டியவள், சீக்கிரமே சாகப் போகிறாள்' என்று சொல்லி அதிர்ச்சி தருகிறாள்.
அவள் ஏன் அப்படி சொன்னாள் என்பது பற்றி பிருந்தாவின் அப்பா, அம்மாவிடம் விசாரிக்கும்போது பிருந்தா அவர்களுடைய மகளே இல்லை என்பதும், அவளுடைய தந்தை செய்த பாவச் செயலுக்காக ஒரு சக்தி பிருந்தாவை பழி வாங்கக் காத்திருப்பதும் தெரியவருகிறது.
இறுதியில் பிருந்தா கிருஷ்ணன் யாருடைய மகள், பழிவாங்கக் காத்திருக்கும் சக்தியிடமிருந்து பிருந்தாவை காப்பாற்ற முடிந்ததா? காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அன்பு மயில்சாமி, மாமாவுடன் சேர்ந்து குடித்துவிட்டு ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டும் இருக்கும் கதாபாத்திரம். காதலியை துஷ்ட சக்தியிடம் இருந்து காப்பாற்றும் காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். பிருந்தா கிருஷ்ணன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதல் உணர்வை, பய உணர்வை போதுமான அளவில் வெளிப்படுத்துகிறார்.
மனித உயிர்களைப் பலியிட்டு புதையலை அடையத் துடிக்கும் மந்திரவாதியாக வருகிற நிகாரிகாவின் நடிப்பு, இன்னொரு மந்திரவாதியாக வருகிற ஜாக்கும் மிரட்டுகிறார்கள். நிழல்கள் ரவி, சசிகுமார் சுப்ரமணியன் ஜாவா சுந்தரேசன், மனோபாலா, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
இயக்கம்
ஒரு புதையல், அதை அடையத் துடிக்கும் மந்திரவாதி என ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதில் காதல், காமெடி என கமர்சியல் அம்சங்களை கலந்து அமானுஷ்ய திரில்லர் அனுபவம் தந்திருக்கிறார் இயக்குநர் வேதமணி. 'நல்லதும், கெட்டதும் நிறைந்திருப்பதுதான் உலகம்' என்பதை சொல்ல வந்திருக்கிறார். திரைக்கதை வலுவில்லாமல் செல்வதால் ரசிக்க முடியவில்லை.
இசை
கணேஷ் சந்திரசேகர் இசை ஹாரர், திரில்லர் கதைக்கேற்றவாறு பயணித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஹாசிப் எம் இஸ்மாயில் ஒளிப்பதிவு சுமார் ரகம்.






