டிரெண்டிங்கான மஞ்சுவாரியர் மூக்குத்தி

மஞ்சுவாரியர் மலையாள திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். மஞ்சுவாரியர் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் தனுஷ்கோடிக்கு தனியாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்கான மஞ்சுவாரியர்  மூக்குத்தி
Published on

தென்னிந்திய திரை உலகில் தனித்துவமான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருப்பவர் மஞ்சுவாரியர். 47 வயதிலும் அதே அழகு, அதே இளமை கொண்டு தனக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வரும் மஞ்சுவாரியர் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மஞ்சுவாரியர் மலையாள திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். மஞ்சுவாரியர் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் தனுஷ்கோடிக்கு தனியாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மஞ்சுவாரியர் பாரம்பரிய அழகின் அடையாளமான மூக்குத்தி அணிந்து கேரள உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மூக்குத்தியை மூக்குக்கு கீழ் பகுதியில் அணிந்து முக அழகை வெளிப்படுத்தியுள்ள மஞ்சுவாரியரின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காகி வருகிறது.

ஆடம்பரம் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் மஞ்சுவாரியர் அணிந்திருந்த மூக்குத்தி பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com