என் மலர்
சினிமா செய்திகள்
- ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது.
- பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட்.
ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.
குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்', 'தி லஞ்ச்பாக்ஸ்', 'மசான்', 'பாக்லைட்' மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'காதல்' போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இது அவருடைய பத்தாவது திரைப்படமாகும். கடந்த பத்தாண்டுகளில் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'பேட்ட', 'இறைவி', 'மெர்குரி', 'ஜகமே தந்திரம்', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் 'ரெட்ரோ' என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல படைப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பகிர்ந்து கொண்டதாவது, "பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, "சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்" என்றார்.
சீக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, "கல்ட் மற்றும் கமர்ஷியல் என்ற இரண்டு விஷயங்களையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அவரது கதைகள் எதிர்பாராத திருப்பங்களையும் அதே சமயம் ஆழமான உணர்வுகளையும் கொண்டிருக்கும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் சரியான கதை சொல்லல் திறமையும் கொண்ட இயக்குநருடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்திருப்பது சக்திவாய்ந்த வேரூன்றிய கதைகளை, உலகளாவிய சினிமா மொழி மூலம் வெளிப்படுத்தும் சீக்கியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாஸ்க் திரைப்படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு நடிகர் கவின் பேசியதாவது:-
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன் செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர்.
வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது.
அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும்.
ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.
நவம்பர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம் என நடிகை கூறினார்.
- தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக யூ டியூபர் கூறினார்.
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.
கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
இதனையடுத்து நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் யூடியூபர் மன்னிப்பு கேட்கவில்லை என நடிகை கவுரி கூறியுள்ளார். மேலும், பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல. வருத்தத்தையோ அல்லது வெற்று வார்த்தைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டேன். கேள்வியை தவறாக புரிந்து கொண்டார், அது ஒரு வேடிக்கையான கேள்வி என மீண்டும் கூறுவதா? என நடிகை கவுரி கூறியுள்ளார்.
கொடைக்கானல் மலைப்பகுதி கிராமமான 'வட்டகானல்' பகுதியில் விளையும் போதை காளானை விற்று போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவருக்கு உறுதுணையாக துருவன் மனோ, விஸ்வந்த், சரத் ஆகியோர் இருந்து வருகின்றனர். ஒரு பிரச்சனையில் கணவனை இழந்த வித்யா பிரதீப், ஆர்.கே.சுரேசை கொலை செய்வதற்கு முயற்சி செய்து வருகிறார்.
இறுதியில் ஆர்.கே.சுரேசை வித்யா பிரதீப் கொலை செய்தாரா? வித்யா பிரதீப் கணவர் எப்படி இறந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆர்.கே.சுரேஷ் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் தனது உடல்மொழியோடு அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தின் கதாநாயகனான துருவன் மனோ நடிப்பு நேர்த்தியாக அமைந்து உள்ளது.
இளமையும் அழகுமாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பு ரசிக்க வைக்கிறது. விஷ்வந்த், வித்யா பிரதீப் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம்.
இயக்கம்
போதை காளான் பற்றிய கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பித்தாக் புகழேந்தி. காளான் பாதிப்பு குறித்த வலுவான காட்சிகள் இல்லை. எதுக்கு சண்டைபோடுகிறார்கள், யார் போடுகிறார்கள், என்ன நடக்கிறது என பல இடங்களில் திரைக்கதை குழப்பம். சுவாரசியமான காட்சிகள் மற்றும் தெளிவான திரைக்கதை இருந்திருந்தால் ரசித்து இருக்கலாம்.
இசை
மாரிஸ் விஜய் இசையில் பாடல்கள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார்.
இந்நிலையில், நடிகர் அபினய் இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
44 வயதான அபினய் வேலை இன்றி, தனியாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான செலவுகள் கூட சமாளிக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.
அபினயின் சிகிச்சைக்காக திரைத்துறையை சேர்ந்த பலரும் உதவி செய்து வந்தனர். அந்த வகையில். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறிய பாலா, அபினயை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கியிருந்தார். நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபினய், 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் தனுஷ், ஷெரின் ஆகியோருடன் நடித்த அவர், ஜங்க்ஷன் (2002), சிங்காரா சென்னை (2004), பொன் மேகலை (2005) போன்ற படங்களில் நாயகனாகவும், பின்னர் பல்வேறு படங்களில் துணை வேடங்களிலும் நடித்தார். மேலும், மலையாளத் திரையுலகிலும் பணியாற்றினார்.
நடிகராக மட்டுமின்றி, அபினய் பல்வேறு ஹீரோக்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்தார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடைசியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், தனது மகனுக்கு திரைத்துறையில் வழிவிட்டுள்ளார்.
நடிகர் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார். தான் இயக்கும் முதல் படத்தில் நடிகர் சந்தீப் கிஷனை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் தனது முதல் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் தனது முதல் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜேசன் சஞ்சயின் படத்திற்கு "சிக்மா" என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில், டியூட் படம் ரிலீஸால் தள்ளிப்போனது.
இதற்கிடையே, விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் ஹாய். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி அவ்வபோது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
இவர்களுடன் ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்த நந்தி சிலைக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர்.
பின்னர், இவர்களுக்கு சிறப்பு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் படம் தீயவர் குலை நடுங்க.
அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தீயவர் குலை நடுங்க படம் வெளியாகும் தேதி குறித்து படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, தீயவர் குலை நடுங்க படம் வரும் நவம்பர் 21ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், தீயவர் குலை நடுங்க படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் பெயர் டீசர் வெளியாகி, படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கதை நாயகியாக ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
- சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
- சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக உள்ளது.
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 'அரசன்' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மேலும் 'அரசன்' படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
'அரசன்' படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 24-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. வெற்றிமாறனுடன் முதல் படம் என்பதால் படத்திற்காக சிம்பு தீவிரமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் புதிய லுக்கில் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.
இந்நிலையில், மாஸ்க் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.
- ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.
- 1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கியவர் சுந்தர்.சி.
தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினர்.
அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படமாக இது அமைய உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் துவக்கம் தொடர்பாக ரஜினி- கமல் - சுந்தர்.சி சந்தித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்படம் 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கமல் ஹாசனின் அன்பே சிவம் படத்தையும் சுந்தர் சி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.






