என் மலர்
சினிமா செய்திகள்

என்னால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை- பட விழாவில் கண்ணீர் விட்டு அழுத விஜய் பட நடிகை
- நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்.
- நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்த அமைதியானார்.
'பத்ரி', 'ரோஜாக்கூட்டம்', 'சில்லுனு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்தவர் பூமிகா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வரும் பூமிகா 'யுபோரியா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த இதன் பட விழாவில் பூமிகா பங்கேற்று பேசும்போது ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டார்.
"இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை. நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்" என்று பேசிக்கொண்டே தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்த அமைதியானார். இது நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

'யுபோரியா' படம் சிறுமிகள்- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் பூமிகா, சாரா அர்ஜூன், பிருத்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடத்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானதை அடுத்து படவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






