நடக்கறது எதுவும் உனக்கு புரியலையா?... வெளியானது Fourth Floor படத்தின் டிரெய்லர்

ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நடக்கறது எதுவும் உனக்கு புரியலையா?... வெளியானது Fourth Floor படத்தின் டிரெய்லர்
Published on

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஆரி அர்ஜூனன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் பிரபலமும் ஆனார். இவர் தற்போது நடித்துள்ள படம் 'போர்த் ப்ளோர்' (Fourth Floor).

எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கி மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, கதாநாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும், பவித்ரா, இயக்குனர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒரு குடியிருப்பு தளத்தில் நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்களே கதைக்கருவாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை வருகிற 27-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், 'போர்த் ப்ளோர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தற்கொலைகளை சுற்றி நிகழும் சம்பவங்களே திரில்லராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com