என் மலர்
சினிமா செய்திகள்
பிங்க் ரீமேக்கில் நடித்து வரும் அஜித், அப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில் நீண்ட வசனம் பேசி அசத்தி இருக்கிறார். #Ajith #AK #Thala59
‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். தலைப்பு வைக்காத இந்த படத்தில், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் அஜித்தைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்பதால், ஐதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கி வருகின்றனர். ‘விஸ்வாசம்’ படமும் அங்கு படமாக்கப்பட்டது.

தற்போது நீதிமன்றம் சம்பந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் அஜித் பேசும் வகையில் நீண்ட வசனம் ஒன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திவிட்டார் அஜித் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவ்வளவு பெரிய வசனத்தை அஜித் ஒரே டேக்கில் பேசியதைப் பார்த்து, ஒட்டுமொத்தப் படக்குழுவும் எழுந்துநின்று கைதட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.
‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரித்துள்ள படம் ‘தடம்’.
இதில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். சோனியா அகர்வால், யோகி பாபு, பெஃப்சி விஜயன், மீரா கதிரவன், சாம்ஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - எஸ்.கோபிநாத், இசை - அருண்ராஜ், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், பாடலாசிரியர் - ஏக்நாத், மதன் கார்க்கி, ஒலிப்பதிவாளர் - டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன்.எஸ், ஒலிக்கலவை - கருண் பிரசாத், ரெஞ்ஜித் வேணுகோபால், கலை - ஏ.அமரன், சண்டை - அன்பறிவ், ஸ்டண்ட் சில்வா, எழுத்து, இயக்கம் - மகிழ் திருமேனி

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.
நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார்.
படம் மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep #SmruthiVenkat
தடம் டிரைலர்:
தொடரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஜவேரி, அடுத்ததாக அதர்வா மற்றும் பரத்துக்கு ஜோடியாக தமிழ் படங்களில் நடிக்கிறார். #PoojaJhaveri
தெலுங்கில் முன்னணி கதாநாயகியான பூஜா ஜவேரி தொடரி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்த அவர் தொடர்ந்து அதர்வா, பரத்துடன் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
பூஜா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற துவாரகா படம் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் தமிழில் வரும் 15-ந் தேதி வெளியாகிறது. படத்தை தமிழாக்கம் செய்து வெளியிடும் ஏ.என்.பாலாஜி அளித்த பேட்டியில் ‘விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.

தமிழில் வசனத்தை ஆண்டனி ரிச்சர்டும், பாடல்களை நெல்லை பாரதியும் எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் நேரடி தமிழ் படங்களின் பாடல்கள் அளவுக்கு சிறப்பாக அமைந்து இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.
நான் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் நிறுவன படங்களை தெலுங்கில் வெளியிட்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தேன். பின்னர் இந்த துறைக்கு வந்தேன்’ என்றார். #PoojaJhaveri #ArjunReddy #VijayDevarakonda #Atharvaa #Bharath
ராம் இயக்கிய ‘பேரன்பு’ படத்தில் ‘செத்துப்போச்சு மனசு’ பாடலின் மூலம் பிரபலமான பாடலாசிரியர் கருணாகரனை அந்த பாடலுக்காக மம்முட்டி, யுவன் ஷங்கர் ராஜா பாராட்டியிருக்கிறார்கள். #Peranbu #LyricistKarunakaran
‘பேரன்பு’ படத்தின் ‘செத்துப்போச்சு மனசு’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் வரும் `மரமான செடியைத் தோளில் எப்படிச் சுமப்பது?’ என்ற வரி படத்தின் மொத்த கதையையும் தாங்கியுள்ளது என்று மம்முட்டியும், யுவன் சங்கர் ராஜாவும் பாராட்டினார்கள்.
இந்த பாடலை எழுதிய கருணாகரன் கூறும்போது, ‘7ஜி ரெயின்போ காலனி’ பாடல்கள் என்னை புரட்டிப்போட்டு பாடலாசிரியர் ஆகும் ஆர்வத்தை ஏற்படுத்தின. ஆரம்ப காலகட்டத்துலேயே ராம் சாரிடம் பாடல் வாய்ப்பு கேட்டிருக்கேன். `நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் சண்டை வரட்டும் கருணா, பின்னர் வாய்ப்பு தருகிறேன்’ என்றார். உடனே, `அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேணாம் சார்’ என்றேன்.

அவ்வப்போது யுவன் சார் ஆபீசில் சந்திப்போம். ஒருநாள் நான் எழுதிய பாடலை அவரிடம் காட்டினேன். `அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன்’ என்றார். `பேரன்பு’ படத்துக்கு பாட்டு எழுத கூப்பிட்டபோது ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன்’ என்றார். #Peranbu #LyricistKarunakaran #Mammootty #YuvanShankarRaja
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் இணைந்த தாடி பாலாஜி, நித்யா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், நித்யாவால் தனது குழந்தையின் எதிர்காலம் பாழாவதாக தாடி பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். #ThadiBalaji #Nithya
நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
தனியார் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களை நடிகர் கமல்ஹாசன் சேர்த்து வைத்தார். சில மாதங்கள் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தற்போது மீண்டும் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் தாடி பாலாஜி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் மனைவி நித்யா போலீஸ்காரர் ஒருவருடன் சேர்ந்து தனது குழந்தையின் வாழ்க்கையை சீரழிக்கிறார்.
தன் மன உளைச்சலுக்கு போலீஸ்காரர் தான் காரணம். ஏற்கனவே அவர் மீது கொடுத்த புகாருக்கு பழிவாங்க இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை. போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தன்னுடைய குடும்பம் ஒன்று சேர வேண்டும் என தனியார் டிவிக்கு எந்த நோக்கமும் இல்லை. நித்யா டிவி நிகழ்ச்சியில் நடந்து கொண்டது அனைத்துமே நடிப்பு. டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் என்னுடைய அம்மா வீட்டிற்கு தான் சென்றேன். நித்யாவை பார்க்க செல்லவே இல்லை. என் குழந்தையை பார்க்க விடவில்லை. பணத் தேவைக்காக மட்டுமே நித்யா பேசினார்.
தன் குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒரு தந்தையாக செய்ய நான் தயாராக இருக்கிறேன், தன் குழந்தைக்கு (போஷிகா) நித்யா மற்றும் போலீஸ்காரரால் ஆபத்து உள்ளது.
நடிகர் கமல் குழந்தையின் படிப்பை கவனிக்க சொல்லி அறிவுரை கூறினார். போர்டிங் பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்க தயார்.
நான் நித்யாவிற்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். நித்யா ஜிம் பயிற்சியாளர் மற்றும் போலீஸ்காரர் கட்டுப்பாட்டில் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #ThadiBalaji #Nithya
புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் `ஜாம்பி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Zombie #YogiBabu
எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்புடன் மொத்த காட்சிகளையும் படமாக்கி முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் கிளைமாக்சுக்கு முந்தைய முக்கிய காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியான இதை ஹீலியம் விளக்கொளியில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புவன் நல்லன். சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும்படியாக காட்சிப்படுத்தப்படும் இந்த படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகி வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பிரேம்ஜி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். #Zombie #YogiBabu #YashikaAannand
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 40 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்துள்ளார். #PulwamaAttack #CRPFJawans
மும்பை:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வீர மரணம் அடைந்த அந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி உள்ளன. மேலும் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பத்தினருக்கு திரைப்படத் துறையினரும் நிதி உதவிகளை வழங்கி வருகிறார்கள். நடிகர் அமிதாப்பச்சன் ரூ. 2.1 கோடி நிதி உதவி வழங்கினார்.

நடிகர் அக்ஷயகுமார் ரூ.5 கோடி வழங்கினார். சல்மான்கான், கிரிக்கெட் வீரர் சேவாக், குத்துச்சண்டை வீரர் வீரேந்திரசிங் ஆகியோரும் நிதி உதவி வழங்கினார்கள்.
இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். அவர் ரூ.1 கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 24-ந் தேதி லதா மங்கேஷ்கரின் தந்தை இறந்த தினமாகும். இதையொட்டி ரூ.1 கோடி நிதி உதவியை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். #PulwamaAttack #CRPFJawans #LataMangeshkar
பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்ப கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் காக்குமா வீரத் திருமகனை என்று பார்த்திபன் ட்விட்டரில் கோரியுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை நேற்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம். கைதான சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமானை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்துடன் அபிநந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைராக பரவியது. அபிநந்தனை விரைவில் மீட்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
கணவனின் கடமையும்
தந்தையின் வீரமும்,
மனைவியின் மனதையும்
மகனின் கண்களையும்,
ஈரப்படுத்தாமல்
சேதப்படுத்தாமல்
எத்தனை நிமிடங்கள்
காக்கும்?
அதற்குள் காக்குமா
இந்தியா அந்த வீரத்
திருமகனை?
இவ்வாறு கூறியிருக்கிறார். #Abhinandan #BringBackAbhinandan #Parthiban
ஆடை, அதோ அந்த பறவை போல படங்களை தொடர்ந்து அமலாபால் அடுத்ததாக மலையாளத்தில் உண்மைக் கதையில் மருத்துவராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #AmalaPaul #Kedavar
‘ராட்சசன்’ படத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆடை படத்தில் அமலா பாலின் தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தி நடிகைகளை மிஞ்சும் வகையில் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக இதில் நடிக்கிறார். இந்த படம் அமலா பாலுக்கு வித்தியாசமான படமாக அமையும் என்று படக்குழு கூறியுள்ளது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தில் உள்ளன. விரைவில் அடுத்தடுத்து இவை திரைக்கு வர இருக்கின்றன.

அமலாபால் அடுத்ததாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்துக்கு ‘கேடவர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அனுஷ் பிள்ளை என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படம் திகில் கலந்த சஸ்பென்ஸ் படமாக தயாராகிறது. இந்த படம் கேரளாவில் ஒரு டாக்டர் கையாண்ட வழக்கின் உண்மை கதையாகும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்கிறது. கேடவர் படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். #AmalaPaul #Kedavar #AnushPillai
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth166 #ARMurugadoss
ரஜினிகாந்தும் ஏ.ஆர்.முருகதாசும் இணைவது கடந்த சில ஆண்டுகளாக தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது ஒரு வழியாக இருவரும் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
ரஜினி படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்கிறது. ஒரே கட்டமாக முழு படத்தையும் முடிக்க தெளிவாக திட்டமிட்டிருக்கிறார் முருகதாஸ். சந்தோஷ் சிவன் கால்ஷீட்டை முன்கூட்டியே மொத்தமாக வாங்கிவிட்டார். ரஜினி மொத்தமாக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில் அவை வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. ரஜினி ஒரு வேடத்தில் மட்டுமே நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்தது. மார்ச் இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்குகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Rajinikanth166 #ARMurugadoss
அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.
அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.
குரு என்று தனியாக யாரும் இல்லாமலே, ஆர்மோனியத்தை கற்றுக்கொள்ளத் தொடங்கினார், இளையராஜா. கொஞ்சம் பழகிய நிலையில் கச்சேரியில் அவர் வாசிப்புக்கு கிடைத்த கைத்தட்டல், இதை முழுமையாக கற்றே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அவரை உந்தித் தள்ளியது.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"கச்சேரியில் கிடைத்த கரகோஷம் எனக்குள் புது உத்வேகம் ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் நான் ஆர்மோனியம் வாசிக்கப் பழகும் நேரம் அதிகமானது.
இதில் கூட இன்னொரு வித சிக்கல் இருந்தது. வாசித்து வாசித்துப் பழகி வந்தாலும் ராகங்களின் பெயர்கள் தெரிந்தாலும், ஸப்த ஸ்வரத்தில் எது `ஸ, ரி, க' என்று தெரியாது. எந்த ஸ்ருதியில் வாசிக்கிறோமோ அதுதான் `ஸ' என்று எண்ணிக் கொள்வேன். தெள்ளத் தெளிவாக தெரியாது. ஆனால் ஒரு முறைக்கு இரு முறை ஒரு பாடலைக் கேட்டால் போதும். முழுவதையும் வாசித்து விடுவேன்.
பிராக்டீசில் அதிக கவனம் இருந்ததால் சாதாரணமாகவே என் கைவிரல்கள் ஏதாவது பாடலுக்குத்தக்கபடி அசைந்து கொண்டிருக்கும். இது நாளடைவில் அதிகமாகி, ஒரு கட்டத்தில் நெஞ்சை ஆர்மோனியக் கட்டைகளாக நினைத்து, விரல்கள் அதில் மேலும் கீழும் போய்வரும் அளவுக்கு ஐக்கியமாகிவிட்டேன்.
தூங்கும்போதும் இது தொடர, ஒரு நாள் அம்மா கவனித்திருக்கிறார். காலையில் விடிந்ததும் விடியாததுமாக என்னிடம் வந்தவர், "ஏம்ப்பா! நேத்து தூங்கும்போது உன் நெஞ்சு மேலே விரலு மேலும் கீழுமா போச்சுதே! ஏதாவது ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரி கனவு கண்டியா?'' என்று கேட்டார்.
அம்மாவை சமாளித்து அனுப்பினேன். தூக்கத்திலும் என் பிராக்டீஸ் தொடர்ந்திருக்கிறது என்பது புரிந்தது.
நாங்கள் ஒரு குழுவாக ஆரம்பித்து, எங்கள் காலடி படாத சிற்றூரே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு, எல்லா இடங்களிலும் அண்ணனோடு எங்கள் இசை ஒலித்திருக்கிறது. அப்போது நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் எண்ணப் பிரதிபலிப்பை கண்ட பிறகுதான், எந்த மாதிரியான இசை விருப்பம் அவர்களுடையது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சினிமாவுக்கு வந்த பிறகு இசையால் மக்களைக் கவர, எது எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு பிடிமானம் கிடைத்தது.
எனக்கு கிடைத்த, அதாவது தானாக அமைந்த இந்த அனுபவங்கள், உலகின் எந்தவொரு இசைக் கலைஞனுக்கும் இதுவரை கிடைத்திராது. இனிமேல் எவருக்கும் கிடைக்காது என்று கூட சொல்வேன்.
கச்சேரியில் படிப்படியாக பக்குவப்பட்டேன். வழக்கமாக கச்சேரியில் அண்ணன் பாடும் ஒரு குறிப்பிட்ட ஸ்ருதியில்தான் நன்றாக பிராக்டீஸ் செய்து வைத்திருப்பேன். அதை வேறு ஏதாவது ஸ்ருதியில் வாசிக்கச் சொன்னால் தப்பும் தவறுமாகத்தான் வரும். ஆர்மோனியத்திலோ, பியானாவிலோ ஒரு ஸ்ருதிக்கு வந்த `விரல்வித்தை' இன்னொரு ஸ்ருதிக்கு வராது.
ஆனால் எல்லா ஸ்ருதியிலும் என்னைப் பழக்க, இசையே எனக்கொரு பரீட்சை வைத்தது.
எங்கள் கச்சேரி முதல் நாள் நாகர்கோவிலில் இருக்கும். மறுநாள் ஊட்டியில் இருக்கும். நாகர்கோவிலில் இரவு 10 மணிக்கு கச்சேரி முடிந்தால் அதற்கு மேல் ஊட்டி பஸ் இருக்காது. எப்படியோ அடித்துப் பிடித்து காலை 5 மணி பஸ்சைப் பிடித்து, திண்டுக்கல், அங்கிருந்து கோவை, அங்கிருந்து ஊட்டி என்று விழுந்தடித்து மாலை ஆறுமணிக்குள்ளாக போய்ச் சேர்ந்து விடுவோம்.
பயணத்தின்போது அண்ணனால் சரிவரத் தூங்க முடியாமல் சமயத்தில் குரல் சரியில்லாமல் போகும். இப்படி குரல் சரியில்லாத நாட்களில் `ஒரு அரைக்கட்டை கம்மி பண்ணு' என்று ஸ்ருதியை குறைக்கச் சொல்வார்.
அவருக்கு பிரச்சினை இல்லை. தபேலா வாசிக்கும் பாஸ்கருக்கும் பிரச்சினை இல்லை. எந்த ஸ்ருதி என்றாலும், கட்டையை தட்டி சேர்த்து விட்டால், தபேலாவில் விரல் அசைவு மாறப்போவதில்லை. நான்தான் மாட்டிக்கொள்வேன். தப்பும் தவறுமாக அந்த கச்சேரியை எப்படியாவது சமாளித்து விட்டு, அடுத்த நாள் பகல் முழுவதும் அந்த மாறிய `ஸ்ருதி'யில் பிராக்டீஸ் செய்வேன். ஓரளவு தயார் ஆகிவிடுவேன்.
இப்படியே கொஞ்ச நாள் ஓடும். பிறகு இன்னும் அரைக் கட்டை குறையும். அதிலும் இதே கதைதான்.
இதற்குள் புதிய பாடல்கள் ஏதாவது எழுதிச் சேர்த்தால், குறைந்த ஸ்ருதியிலேயே பிராக்டீஸ் செய்து கரெக்டாக ரெடியாகி இருப்பேன். அன்றைக்கென்று பார்த்து அண்ணன் "ஸ்ருதியை, பழைய ஸ்ருதிக்கு ஏற்றி வை'' என்பார்.
வம்புதான். மறுபடி அவசர கதியில் பதட்டமும் பரபரப்புமாய் `மாற்றல்' வேலையை தொடர்வேன்.
இன்றைக்கு என்னுடைய பல பாடல்களில் உருகி, கண்ணீர் விட்டு, துன்பமடைந்து, ஆறுதலடையும் ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இசையால், ஸ்ருதியால், வாசிக்க இயலாமையால் நான் எவ்வளவு துன்பப்பட்டு, தூக்கம் கெட்டு நொந்திருந்தேன் என்பது உங்களில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பெரும்பாலும் எங்கள் கச்சேரியில் சினிமா டிïன்களில்தான் அண்ணன் பாடல் எழுதிப்பாடுவார். இடையிடையே அவர் இசையமைத்த பாடல்களும் இடம் பெறும்.
என் வாழ்வில் அதிகப் படிப்பினைகள் தொடங்கிய நேரம் இதுதான் என்பேன்.
அண்ணனின் இசை நிகழ்ச்சிகளை மதுரை மாவட்ட கம்ïனிஸ்டு கட்சி அலுவலகம்தான் முடிவு செய்யும். கிரி என்பவர் அதை உறுதி செய்வார். அதன் பிறகே கச்சேரி நடக்கும். இதனால் கச்சேரி நடத்துவதில் ஒரு ஒழுங்கு ஏற்பட்டது. ஒரு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் ஆறேழு இடங்களில் கச்சேரி நடந்தால், அடுத்த வாரம் இன்னொரு மாவட்டம்.
தொடர்ந்து இப்படி இரண்டு மாவட்டங்களில் 15 நாட்கள் கச்சேரி செய்து விட்டு, அடுத்த கச்சேரிக்கான இடைவெளி நேரத்தில் எங்கள் ஊருக்கு (பண்ணைபுரம்) வந்து போவோம்.
அந்த நேரத்தில் அண்ணன் தன்னிடம் இருக்கும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பார். அம்மா அதை வீட்டுச் செலவுக்கு வைத்துக்
கொள்வார்கள்.அண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் சில நேரங்களில் அம்மாவிடம் பணம் கொடுக்க மறந்தோ அல்லது முடியாமலோ போனால் அம்மா வருந்துவார். ஒரு கட்டத்தில் இந்த வருத்தம், கோபத்தில் கொண்டு விட்டது. அண்ணன் பணம் கொடுக்காத ஒரு நாளில் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் வாக்குவாதம் வலுத்து, மனத்தாங்கலில் முடிந்த நேரத்தில், "இனி உன் பணத்தை என்னிடம் தரவேண்டாம். கச்சேரிக்காக நீ வாங்கும் பணத்தில் பாஸ்கருக்கும், ராஜையாவுக்கும் உள்ள பங்கை மட்டும் கொடுத்தால் போதும்'' என்று சொல்லி விட்டார்
அம்மா.அண்ணனுக்கும் அது நியாயமாகப் பட்டதால், அடுத்த கச்சேரியில் இருந்து அது அமுலுக்கு வந்தது. பாஸ்கருக்கும் எனக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு என்று ஒதுக்கப்பட்டது. அது பாஸ்கர் கையில் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஊர் வரும்போது அதை அம்மாவிடம் பாஸ்கர் கொடுத்துவிடுவான்.

ஆர்யா - சாயிஷா திருமணம் மார்ச்சில் நடைபெறவிருக்கும் நிலையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலுக்கு நடிகர் ஆர்யா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். #AryawedsSayyeshaa
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச்சில் திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 10-ல் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆர்யா - சாயிஷா திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் ஆர்யா தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலை நேரில் சென்று அழைத்திருக்கிறார். இதுகுறித்த தகவலை நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
This pic is the closest to my heart. Unbelievable moment to hold my best friend’s @arya_offl wedding invitation .. wishing him and @sayyeshaa all the best and lots of love .. God bless ! pic.twitter.com/6rDhNwOY1V
— Vishal (@VishalKOfficial) February 27, 2019
அதில், எனக்கு நெருக்கமான புகைப்படமாக இது மாறிவிட்டது. என் நண்பன், அவனது திருமண அழைப்பிழை கொடுக்க வந்த இந்த தருணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்யா - சாயிஷா காதலோடு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa #Vishal