என் மலர்
சினிமா செய்திகள்
ஆர்யா - சாயிஷா திருமணம் மார்ச்சில் நடைபெறவிருக்கும் நிலையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலுக்கு நடிகர் ஆர்யா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். #AryawedsSayyeshaa
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மார்ச்சில் திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 10-ல் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆர்யா - சாயிஷா திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் ஆர்யா தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், தனது நண்பரும், நடிகருமான விஷாலை நேரில் சென்று அழைத்திருக்கிறார். இதுகுறித்த தகவலை நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
This pic is the closest to my heart. Unbelievable moment to hold my best friend’s @arya_offl wedding invitation .. wishing him and @sayyeshaa all the best and lots of love .. God bless ! pic.twitter.com/6rDhNwOY1V
— Vishal (@VishalKOfficial) February 27, 2019
அதில், எனக்கு நெருக்கமான புகைப்படமாக இது மாறிவிட்டது. என் நண்பன், அவனது திருமண அழைப்பிழை கொடுக்க வந்த இந்த தருணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. ஆர்யா - சாயிஷா காதலோடு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். #Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa #Vishal
`கண்ணே கலைமானே' படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KanneKalaimaane #SeenuRamasamy
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, சர்ஜூன் இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடித்த எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டார். தற்போது விக்ரம் ஸ்ரீதரன் இயக்க அஷோக் செல்வன் நடிக்கும் `ரெட் ரம்' திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குகிறார். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
We are happy to be associated with Director @seenuramasamy for our #TimelineCinemas Production No 3, After the movies #Echcharikkai & #RedRum
— TimeLine Cinemas (@TLCinemas) February 27, 2019
Cast & Crew Details will be Announced Soon!
Staytuned!@TLCinemas@SundarWap@onlynikilpic.twitter.com/v0l79KKzoD
டைம்லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. #KanneKalaimaane #SeenuRamasamy #SundarAnnamalai #TimeLineCinemas
பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி - அனகா நடிப்பில் உருவாகி வரும் `நட்பே துணை' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #NatpeThunai #HipHopAdhi
`மீசைய முறுக்கு' படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய `நட்பே துணை' என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா நடித்திருக்கிறார். சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#NatpeThunai trailer from tomorrow 🤜🤛 This is gonna be fun 🤩🤟#HHT2#AvniMovies#SundarCpic.twitter.com/XUNjz9r43v
— Hiphop Tamizha (@hiphoptamizha) February 27, 2019
கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். #NatpeThunai #NatpeThunai #HipHopAdhi
வேலூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் கேள்விக்கு பதிலளித்த சுருதிஹாசன் தான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அஜித் தான் என்று கூறினார். #ShrutiHaasan #AjithKumar
வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ரிவேரா 2019’ என்ற கலைநிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு வருகை தந்த நடிகை சுருதிஹாசன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு மிக பொறுமையாக பதில் கூறினார். தனக்கு மிகவும் பிடித்த படம் ‘மகாநதி’ என்றும், சிறந்த நடிகர் ‘கமல்ஹாசன்’ என்றும் கூறினார். மேலும் தான் நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய பணிகளில் ஈடுபடுவதைக் காட்டிலும் ‘என்டர்டெயினராக’ இருப்பதையே பெரிதும் விரும்புவதாக அவர் கூறினார்.

‘நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய படங்களில் நடிக்கும்போது, எந்த படஉலகம் உங்களுக்கு சிறந்ததாகவும், இலகுவாகவும் இருக்கிறது?’ என்று மாணவர்கள் கேட்டதற்கு, தனக்கு ‘தெலுங்கு, தமிழ், இந்தி என எந்தத் துறையாக இருந்தாலும் எந்த படமாக இருந்தாலும், நடிப்பதை தான் விரும்பிச் செய்வதாகத் தெரிவித்தார். பின்பு நடிகர் அஜித் பற்றி கேட்டதற்கு, ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும், நான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அவர்தான்’ என்றும் கூறினார். #ShrutiHaasan #AjithKumar
நடிகை ராய் லட்சுமி பற்றி கடந்த சில நாட்களாக வதந்தி ஒன்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இது தொடரும் பட்சத்தில் தான் கோர்ட்டிற்குகூட செல்வேன் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார். #RaaiLaxmi
கடந்த சில தினங்களாகவே லட்சுமிராய் பற்றி திடுக்கிட வைக்கும் கிசுகிசுவை யாரோ சிலர் பரப்பி வருகின்றனர். அவர் கர்ப்பமாக இருப்பதாக பரப்பிவிட்டிருக்கிறார்கள்.
முதலில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த லட்சுமிராய் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் கூறும்போது, ஒரு சிலர் என்னை பற்றி முட்டாள்தனமான வதந்திகளை பரப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு பலமுறை காதல் உண்டாகி பின்னர் பிரேக்அப் ஏற்பட்டிருக்கிறது.

அதற்காக என் விஷயத்தில் யார் வேண்டுமானாலும் தலையிட்டு உங்கள் இஷ்டத்துக்கு பேசலாம் என்று அர்த்தம் அல்ல. ஒரு நாள் நான் மாங்காய் சாப்பிட்டதை யாரோ ஒருவர் பார்த்திருக்கிறார். உடனே நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரப்பிவிட்டிருக்கிறார். இதை தடுத்து நிறுத்துவதற்கு நான் கோர்ட்டிற்குகூட செல்வேன்’ என்று கோபமாக கூறி இருக்கிறார். #RaaiLaxmi #PregnantRumours
பிரியா ஆனந்த் நடிப்பில் எல்கேஜி படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா ஆனந்த் அளித்த பேட்டியில், ஷங்கரிடம் உதவி இயக்குனராகவே தான் இந்தியா வந்ததாக கூறினார். #PriyaAnand
வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என வேகமாக முன்னணி நடிகையானார். சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்த அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் எல்கேஜி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் வெளிநாட்டில் வளர்ந்தவள். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவள்.
இங்கே சென்னையில் என்னுடைய தாத்தாவும், பாட்டியும் மட்டும் தான் இருக்கிறார்கள். சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. ஒரு ஹீரோ எனக்கு வாய்ப்பு கொடுத்தார், தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பதெல்லாம் எனக்கு நிகழவில்லை. எனக்கு காட்பாதர் மாதிரி யாரும் இல்லை.

சொல்லப்போனால் சினிமாவுக்கு நான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது நடிகையாக அல்ல. ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. அவருக்கு டீ, காபி கொடுக்கிற வேலை கிடைத்தால் கூட போதும் என்று, அப்படியொரு தவிப்புடன் இருந்தேன்.
ஷங்கர் சாரை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால், இப்போது ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிற நடிகையாகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். #PriyaAnand #LKG #Shankar
ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்' படத்தின் சீன ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. #MOM #Sridevi
இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது 300-வது திரைப்படமான `மாம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.
இந்த படத்தில் தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் இந்த படம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. வருகிற மார்ச் 22-ஆம் தேதி `மாம்' படம் சீனாவில் வெளியாக இருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கனவருமான போனி கபூர் கூறும்போது, "மாம் படம் ரிலீஸான எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்கு கொண்டு செல்ல, மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்து செல்வதில் பெருமைப்படுகிறோம்" என்கிறார்.
ரவி உதயவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ரஹ்மானுக்கு கிடைத்தது. #MOM #Sridevi
சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம். #Thirumanam #Cheran #Umapathi
பிரெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `திருமணம்'.
இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் சேரன். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், இசை - சித்தார்த் விபின், படத்தொகுப்பு - பொன்னுவேல் தாமோதரன், பாடல்கள் - சேரன், லலித் ஆனந், யுகபாரதி, நடனம் - சஜ்னா நஜம், ஆடை வடிவமைப்பு - கவிதா சச்சி, தயாரிப்பு - பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சேரன்.

சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்கும் சேரன் படம் பற்றி பேசும் போது,
திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும் என்று நம்புகிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. இவ்வாறு கூறினார்.
படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh #Sukanya #ThirumanamFrom1stMarch
திருமணம் டிரைலர்:
அனுஷ்காவுடன் நட்புடன் பழகி வருவதாக பிரபாஸ் கூறியுள்ள நிலையில், இருவரும் மீண்டும் நெருக்கமாகியுள்ளதாகவும், ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhas #AnushkaShetty
அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தொடர்ந்து தகவல்கள் பரவின. பிரபாஸ் தற்போது மெகா பட்ஜெட்டில் தயாராகும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் இருவரும் ஜோடியாக தெலுங்கு டைரக்டர் ராஜமவுலி இல்ல திருமணத்தில் கலந்துகொண்டது காதலை உறுதிப்படுத்துவதாக இருந்தது என்று பட உலகில் கிசுகிசுத்தனர். அனுஷ்கா சமீபத்தில் வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்துவிட்டு வந்தார். மெலிந்த அவரது புதிய தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்து ரசிகர்கள் வியந்தனர்.

காதல் கிசுகிசுக்களை இருவரும் உறுதிப்படுத்தாமலேயே உள்ளனர். பிரபாஸ் கூறும்போது, “ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஒரு நடிகரும், நடிகையும் இணைந்து நடித்தால் அவர்கள் காதலிப்பதாக பேசுவார்கள். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம்” என்றார். இதன்மூலம் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் பேச்சு கிளம்பியது.
இந்த நிலையில் பிரபாசும், அனுஷ்காவும் ஜோடியாக ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்கள். இருவரும் சேர்ந்து நடித்துள்ள படங்களை விளம்பரப்படுத்த அங்கு செல்கின்றனர். இதனால் இருவரும் காதலில் மீண்டும் நெருக்கமாகி இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. #Prabhas #AnushkaShetty
பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh
கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அனிருத் அளித்த பேட்டியில், ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

விரைவில் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறது படக்குழு. முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். பெரும்பாலான காட்சிகளை மும்பையில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நக்மா, சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வருவதாக தெரிவித்துள்ளார். #Nagma
1990-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்த நக்மா காங்கிரசில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். நீண்ட காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து நக்மா கூறியதாவது:-
“தென்னிந்திய திரையுலகில் எனக்கு நல்ல பெயர் இருந்தது. ரஜினியுடன் நடித்த பாட்ஷா மற்றும் காதலன் உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கிலும் வெளியானது. முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்து இருக்கிறேன். நான் சிறப்பாக நடனம் ஆடுவதாகவும் ரசிகர்கள் பாராட்டினார்கள்.

2002-ல் ஒரு தெலுங்கு படத்தில் ஆர்த்தி அகர்வாலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தேன். 2007 வரை பெங்காலி, போஜ்பூரி, இந்தி படங்களில் நடித்து இருக்கிறேன். அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். எல்லா மொழி படங்களிலும் நடிக்க திட்டமிட்டு உள்ளேன்.
தற்போது 2 தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதில் ஒரு படத்தில் அல்லு அர்ஜுன் அம்மாவாக நடிக்கிறேன். திரி விக்ரம் இயக்குகிறார். தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடிக்கவும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன்.” இவ்வாறு அவர் கூறினார். #Nagma
பாலிவுட் சினிமாவில் பிசியாகி இருக்கும் நடிகை டாப்சி, இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார். #Taapsee #GameOver
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த டாப்சி, தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது தமிழில் `கேம் ஓவர்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் டாப்சி அளித்த பேட்டியில் கூறியதாவது,
“நான் கதாநாயகியாக அறிமுகமானது தென்னிந்திய மொழி படத்தில் தான். பெரிய ஹிட் படங்கள் அமையாமல் போனாலும் முதலில் கதாநாயகியாக அறிமுகம் கிடைத்தது இங்குதான். தென்னிந்தியாவில் என்னை அவர்கள் வீட்டு பெண் மாதிரி ஏற்றுக்கொண்டனர். இந்தியில் வாய்ப்புகள் வந்தன. அங்கு நல்ல படங்களில் நடித்தேன். பெயரும் புகழும் கிடைத்தது.

எவ்வளவு இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு படங்களை மட்டும் விட மாட்டேன். எனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்ததே தென்னிந்திய திரையுலகம் தான். இந்தியில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தேதி ஒதுக்கி கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன். இந்த புத்தாண்டில் இருந்து தென்னிந்திய மொழிகளில் வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்து இருக்கிறேன்.”
இவ்வாறு டாப்சி கூறினார். #Taapsee #GameOver






