என் மலர்
சினிமா

ஷங்கரிடம் உதவி இயக்குனராகவே இந்தியாவுக்கு வந்தேன் - பிரியா ஆனந்த்
பிரியா ஆனந்த் நடிப்பில் எல்கேஜி படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரியா ஆனந்த் அளித்த பேட்டியில், ஷங்கரிடம் உதவி இயக்குனராகவே தான் இந்தியா வந்ததாக கூறினார். #PriyaAnand
வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என வேகமாக முன்னணி நடிகையானார். சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்த அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் எல்கேஜி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் வெளிநாட்டில் வளர்ந்தவள். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவள்.
இங்கே சென்னையில் என்னுடைய தாத்தாவும், பாட்டியும் மட்டும் தான் இருக்கிறார்கள். சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. ஒரு ஹீரோ எனக்கு வாய்ப்பு கொடுத்தார், தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பதெல்லாம் எனக்கு நிகழவில்லை. எனக்கு காட்பாதர் மாதிரி யாரும் இல்லை.

சொல்லப்போனால் சினிமாவுக்கு நான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது நடிகையாக அல்ல. ஷங்கர் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. அவருக்கு டீ, காபி கொடுக்கிற வேலை கிடைத்தால் கூட போதும் என்று, அப்படியொரு தவிப்புடன் இருந்தேன்.
ஷங்கர் சாரை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனால், இப்போது ஐந்து மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிற நடிகையாகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். #PriyaAnand #LKG #Shankar
Next Story