என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் அஜய் தேவ்கன் தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் 'போலா' என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    மாதவன் -அஜய் தேவ்கன்

    இதைத்தொடர்ந்து, நடிகர் அஜய் தேவ்கன் 'குயின்', 'சூப்பர் 30', 'குட் பை' உட்பட பல படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

    ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, முசோரி மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


    ஜோதிகா

    நடிகை ஜோதிகா கடைசியாக 1998-ஆம் ஆண்டு வெளியான 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜ்ய தேவ்கன் - மாதவன் நடிக்கும் இப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் பிரபாஸ், ஆதி புரூஷ் என்ற படத்தில் ராமர் வேடத்தில் நடித்து உள்ளார்.
    • ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.


    ஆதிபுருஷ்

    நேற்று தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் ரமாதேவியை சந்தித்து கோவில் அன்னதானத்திற்காகவும், கோசாலை விரிவாக்கத்திற்காகவும் ரூ.10 லட்சம் காசோலையை நன்கொடையாக வழங்கினார். இந்த செயல் பிரபாஸின் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'பர்ஹானா' திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
    • பர்ஹானா படத்திற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பர்ஹானா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'பர்ஹானா' திரைப்படம் (மே 12) திரைக்கு வந்தது. இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னை, தி.நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பர்ஹானா படத்திற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம்‘மாவீரன்’.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    மாவீரன்

    மாவீரன்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.


    மாவீரன்

    மாவீரன்

    இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு படக்குழ் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் சரிதா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
    • இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


    எல்.ஜி.எம் - தோனி

    எல்.ஜி.எம் - தோனி

    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.


    எல்.ஜி.எம் 

    எல்.ஜி.எம் 

    இந்நிலையில் 'எல்.ஜி.எம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் நதியா இடம்பெற்றிருக்கும் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • சின்மயி-ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்தாக அறிவிக்கப்பட்டது.
    • தற்போது சின்மயி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.



    சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆனதையடுத்து சமீபத்தில் சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.



    இந்நிலையில் சின்மயி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழு வீச்சில் வந்துள்ளது. கட்டிடங்களில் அதைத் தடுக்க நாம் என்ன செய்யலாம்?. இதை எப்படி சமாளிப்பது. கைக்குழந்தைகளை மோசமாக கடித்து விடுகிறது என்று பதிவிட்டு, குழந்தையை கொசு கடித்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் படம்‘சந்திரமுகி -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2

    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை 10 நாட்கள் மைசூரில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் அதன்பின்னர் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’.
    • இப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்தது.




    இந்நிலையில் தனுஷின் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த மாமன்னன் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


    மாமன்னன்

    மாமன்னன்

    நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், இதில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • சித்தார்த் நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டக்கர்'.
    • 'டக்கர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மரகத மாலை' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 'டக்கர்' திரைப்படம் வருகிற மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


    டக்கர்

    டக்கர்

    இந்நிலையில் டக்கர் படத்தின் இடம்பெற்றுள்ள 'மரகத மாலை' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. உமா தேவி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார், விஜய் யேசுதாஸ், சின்மயி ஸ்ரீபாதா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஹிப்ஹாப் ஆதி தற்போது நடித்துள்ள படம் 'வீரன்'.
    • இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி உள்ளது.

    மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    பப்பர மிட்டாய் - வீரன்

    பப்பர மிட்டாய் - வீரன்

    இந்த நிலையில், 'வீரன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ள இந்த பாடலை வைசாக் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'வீரன்' திரைப்படம் வருகிற ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×