என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படக்குழு

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படக்குழு


    சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நஷ்ரத் பரூச்சா.
    • இவர் நடிப்பில் சத்ரபதி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நஷ்ரத் பரூச்சா அவர் நடித்த சத்ரபதி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    நஷ்ரத் பரூச்சா 

    பாலிவுட்டில் நடிகைகள் அணு குமுறை குறித்து அவர் கூறியதா வது:- நடிகைகள் முதலிடத்தில் வர வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இப்படி வருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எதனால் இந்த அர்த்தமற்ற போட்டி என்பது எனக்குத் தெரியவில்லை.

    நான் நடிக்க வந்தபோது போஸ்டர்களில் என் முகம் அழகாக இருக்காது என்று சொல்லி என்னை நீக்கியிருக்கிறார்கள். படம் எடுக்கிறார்களா அல்லது போஸ்டர்கள் தயாரிக்கிறார்களா என்று தெரியவில்லை. போஸ்டர்களில் மட்டும் வைத்து படத்தை ஓட்ட முடியாது. இதனால்தான் நான் இந்தியில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் நஷ்ரத் பரூச்சா 

    • நடிகர் ஜெய் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘தீராக்காதல்’.
    • இப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.


    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து, 'தீராக் காதல்' திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது. மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளைஞனின் கதையை வெளிப்படுத்துவது போல உருவாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து யூ -டியூபில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகர் சரவணன் தனது இடத்தை மீட்டு தருமாறு அமைச்சர் தாமோ அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    • இதையடுத்து சரவணனின் ஆதரவாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடையை திறைந்து பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    90-களில் பல திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் சினிமாவில் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் யு.டி.எஸ். என்று சொல்லப்படும் உபயோகிக்கும் இடம் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.

    இந்த இடத்தை அந்த பகுதியில் இருக்கும் இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த இடத்தில் கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக் கொண்டதாகவும் அதற்கான வரியையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.


    சரவணன் -தாமோ அன்பரசன்

    ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தனது இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    இந்தநிலையில் அமைச்சரின் உத்தரவை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இரண்டு கடைகளையும் போலீசார் பாதுகாப்புடன் திறந்து உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கடை நடிகர் சரவணனுக்கு உரிமையானது என்று நோட்டீஸ் ஒட்டினர். இதனைக் கண்டித்து இராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஜெபமணி, நடிகர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக பேசினர்.


    சூர்யா ஸ்ரீ

    இதையடுத்து சரவணின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ , சரவணன் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யாஸ்ரீ , ''காதலித்து தன்னை திருமணம் செய்து கொண்ட சரவணன், சில ஆண்டுகளுக்கு முன் மவுலிவாக்கத்தில் தான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து வீடு வாங்கினார். வாங்கிய வீட்டை அவரது பெயரில் பதிவு செய்து கொண்டார்.

    பட வாய்ப்பு இல்லாத போது, தனது சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட சரவணன் பிக்பாஸ் சென்று வந்த பிறகு கையில் பணம் வந்தவுடன், ஸ்ரீதேவி என்ற பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக சரவணன் 30 அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுகிறார். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

    • பிரபல நடன இயக்குனர் ஷெரீஃப் ஜூபாப் நடன செயலியை தொடங்கியுள்ளார்.
    • உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.

    'சூது கவ்வும்' தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.


    தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.

    ஜூபாப் செயலி குறித்து பேசிய ஷெரீஃப், "உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு, ஒரு நாளைக்கு வெறும் ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கி உள்ளோம்" என்று கூறினார்.

    • நடிகர் அருள்நிதி தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • பரினிதி சோப்ரா -ராகவ் சத்தாவின் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • இதற்காகவே பிரபலமான சமையல் கலைஞர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.

    நடிகை பரினிதி சோப்ரா, ராகவ் சத்தா இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு அது தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திருமணத்தில் கரண் ஜோகர்,சானியா மிர்சா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சியில் சிறப்பு உணவு வகைகள் பரிமாறப்பட இருக்கின்றன. இதற்காகவே பிரபலமான சமையல் கலைஞர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.


    ராகவ் சத்தா -பரினிதி சோப்ரா

    இந்த திருமண நிகழ்வை வழக்கம்போல் பிரபலமான ஓடிடி தளம் ஒளிபரப்ப உரிமம் கேட்டு வருகிறது. ஆனால் பரினிதி சோப்ரா தரப்பில் நண்பர்களுக்கு பலத்த கெடுபிடிகளை போடநேருமே என்று யோசிப்பதாக கூறப்படுகிறது. நீண்டநாள் காதலர்கள் திருமணத்தில் இணைவதையடுத்து பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

    • நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடந்து வருகிறது.

    நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடந்து வருகிறது.


    கங்குவா படக்குழுவினருடன் சூர்யா -ஜோதிகா

    படப்பிடிப்பிற்கு இடையே தனது மனைவி ஜோதிகா மற்றும் படக்குழுவினருடன் நடிகர் சூர்யா கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசித்தார். தற்போது சுற்றுலா பயணிகள் அதிகமாக கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் அவர்கள் பார்வையில் படாதபடி அதிகாலை நேரங்களில் பிரையண்ட் பார்க் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானலுக்கு வரும் போதெல்லாம் இயற்கை அழகை கண்டு ரசிப்பது புதுவித அனுபவத்தை தருவதாகவும், எத்தனை முறை ரசித்தாலும் கண்களுக்கு சலிப்பை தராத இயற்கை காட்சிகள் இங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

    • இயக்குனர் சுதிப்தோசென் 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தை எடுத்தார்.
    • இதில் கேரளாவில் இருந்து இந்து, கிறிஸ்தவ பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுதீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

    கேரள மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்ற சில இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது.

    இந்த தகவலின் அடிப்படையில் இயக்குனர் சுதிப்தோசென் 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தை எடுத்தார். இதில் கேரளாவில் இருந்து இந்து, கிறிஸ்தவ பெண்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டு, அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.


    இதற்கு கேரளா, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என சில அமைப்புகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். என்றாலும் எதிர்ப்பை மீறி கடந்த 5-ந் தேதி இந்த படம் நாடு முழுவதும் வெளியானது.

    இந்த நிலையில் கேரளாவில் உள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை எனப்படும் கே.சி.பி.சி.யின் செய்தி தொடர்பாளர் பாதிரியார் ஜேக்கப் பாலக்கப்பிள்ளி கூறியதாவது:- 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தை திரைக்கதை எழுதியவரின் கலையாகவே பார்க்க வேண்டும். இந்த படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும், அவர்களின் அமைப்பும் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்தி உள்ளது. எனவே இதனை வகுப்பு வாதத்தின் அடிப்படையில் மதிப்பிட முடியாது.



    கேரளாவில் காதல் வலையில் பெண்களை சிக்க வைத்து அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்ட உண்மையை மறுக்க முடியாது. ஆனால் காதல் திருமணத்திற்கு பிறகு கட்டாய மதமாற்றம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆதரவு அளித்திருப்பது கேரளா வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஃபர்ஹானா'.
    • இப்படம் நேற்று (மே 12) திரையரங்குகளில் வெளியானது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'ஃபர்ஹானா' திரைப்படம் நேற்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.



    இந்நிலையில், 'ஃபர்ஹானா' திரைப்படத்தை நடிகர் கார்த்திக் பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் நமது உறவுகளில் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. 'ஃபர்ஹானா' திரைப்படம் முழு அனுபவத்தையும் தீவிரமாக படம்பிடித்துள்ளனர். அழகான உரையாடல்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பு அருமை. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் -2 திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்தார். இந்த படத்தில் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு மலேசியாவில் நடந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அப்போது தகவல்கள் வெளியானது.


    இந்த நிலையில் நடிகை காவ்யா தாப்பர் மலேசியாவில் நடந்த பிச்கைக்காரன் -2 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளார். அப்போது நடந்த திகில் அனுபவத்தை அவர் உணர்ச்சிவசப்பட விவரித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் நடந்தது. அங்குள்ள லங்காவி கடற்கரையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நானும், விஜய் ஆண்டனியும் ஒரு படகில் கடலில் சென்று கொண்டிருந்தோம். அப்போது இன்னொரு படகு எங்கள் படகு மீது திடீரென மோதியது.இதில் படகில் இருந்த நானும், விஜய் ஆண்டனியும் கடலில் விழுந்தோம். நீரில் விழுந்ததும் எனக்கு எதுவும் தெரியவில்லை.


    ஒரு நிமிடம் சுதாரித்த பின்னர் விஜய் ஆண்டனியை பார்த்தேன். அவர் நீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அவருக்கு நீச்சல் தெரியவில்லை. எனவே அவரை காப்பாற்ற அவர் அருகில் நீந்தி சென்றேன். அதற்குள் படக்குழுவினரும் அங்கு வந்து விட்டனர். அவர்கள் உதவியுடன் விஜய் ஆண்டனியை மீட்டு படகில் ஏற்றினோம்.

    பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நீண்ட நேரத்திற்கு பிறகே கண்விழித்தார். அதன்பின்பே எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மூக்கில் எலும்பு முறிவும், நெற்றியில் காயமும் இருந்தது. இதற்காக எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடலில் விழுந்த போது நான் மரணத்தின் எல்லைக்கு சென்று வந்ததை உணர்ந்தேன். இப்போது அதை நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. மனசு படபடக்கிறது. இந்த விபத்தும், இதில் ஏற்பட்ட அனுபவமும் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. எனது முகத்தில் விபத்தால் ஏற்பட்ட வடுக்கள் உள்ளன. அவை எனக்கு இந்த விபத்தின் நினைவை வாழ்நாள் முழுக்க நினைவுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் 'ஜெய ஜெய ஜெய ஹே'படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.


    குருவாயூர் அம்பல நடையில்

    இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தனர். படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.


    குருவாயூர் அம்பல நடையில் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதனை நடிகர் பிரித்விராஜ் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    ×