என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் 'ஜெய ஜெய ஜெய ஹே'படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'குருவாயூர் அம்பல நடையில்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.


    குருவாயூர் அம்பல நடையில்

    இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தனர். படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.


    குருவாயூர் அம்பல நடையில் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதனை நடிகர் பிரித்விராஜ் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • சமந்தா -விஜய் தேவரகொண்டா இணைந்து தற்போது ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


    குஷி

    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    விஜய் தேவரகொண்டா பதிவு

    இப்படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்பாடலின் படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு தெரியாமல் விஜய் தேவரகொண்டா வீடியோ எடுத்துள்ளார். இதனை அவர் ஒரு தொகுப்பாக தயார் செய்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் இடையேயான அன்பும் நட்பும் அழகாக வெளிபடுவதாக ரசிகர்கள் சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளன. 


    • நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் நைட்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட் நைட்

    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் மணிகண்டன், விஜய் சேதுபதி சொல்லி நான் கேட்காமல் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "சமீபத்தில் நான் பிரச்சினையில் இருக்கும் போது திடீரென விஜய் சேதுபதி அண்ணா என்னை தொலைபேசியில் அழைத்து நான் மும்பையில் இருக்கிறேன். நீ சோகமாக இருப்பது போல் எனக்கு தோன்றியது அதனால் தான் அழைத்தேன் என்று கூறினார். அப்போது என் கஷ்டத்தை கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி எந்த பிரச்சினை என்றாலும் இரண்டு நாட்கள் தான் இருக்கும் மூன்றாவது நாள் அது சரியாகிவிடும் என்று என்னை தேற்றினார். இப்போது வரை அவர் எது சொல்லியும் நான் கேட்காமல் இருந்ததில்லை" என்று கூறினார்.

    • ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த மே 5-ஆம் தேதி வெளியானது.
    • இப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது. நடந்தது உண்மையா அல்லது கற்பனையா என்பதைத்தாண்டி ஒரு கதையாக இந்தப்படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். திரையிட்ட இடங்களில் ஓரளவுக்கு வசூலை கொடுத்து வருகிறது.


    தி கேரளா ஸ்டோரி

    இந்த நிலையில் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:- இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளித்துள்ளது என்றால் அதை நிச்சயம் ஏற்று கொள்ளத்தானே வேண்டும்.

    ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பினரை தவிர வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என நினைக்கிறன். அப்படி அது உங்களை பாதிப்பதாக நினைத்தால் நீங்கள் தான் தீவிரவாதி என்று பேசியிருக்கிறார்.

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை -2'.
    • இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


    1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.


    இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.


    ஆர்யா பதிவு

    இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா உடற்பயிற்சி செய்து தனது உடலை மெருகேற்றி வருகிறார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இப்படம் இன்று 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியானது.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.



    இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்காள அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம்' திரையரங்குகளுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குவது அரசின் கடமை என்று நீதிபதிகள் கூறிய நிலையில், தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மே 15 -ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர்.
    • இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.


    பார்த்திபன்

    சில தினங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த ஆண்டு புதிய படம் இயக்கவுள்ளதாக பார்த்திபன் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், இப்படத்தின் பணியில் பார்த்திபன் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், படப்பிடிப்பிற்கான இடங்கள் பார்ப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் தாடி பாலாஜி.
    • இவர் சின்னத்திரைப் போல வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி லக்ஷயா ஸ்ரீயை நடிகர் தாடி பாலாஜி அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.


    தாடி பாலாஜி

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி கூறியதாவது, லக்ஷயா ஸ்ரீயை நேரில் சந்தித்து வாழ்த்துகிறேன் என்று கூறினேன். அதன்படி நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டேன். அவரது கல்விக்கான சிறிய உதவிகளை நான் செய்கிறேன் என்று கூறியுள்ளேன். தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை கொண்டு வருகிறார்கள்.

    இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் நான் அரசியலுக்கு வருவேன், வந்தால் நல்ல விஷயங்கள் பல செய்வேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஆசை இல்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் நான் வேலை செய்ய தயாராகவுள்ளேன் என்று கூறினார்.

    • பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.
    • இவருக்கு கவிஞர் வைரமுத்து நேரில் சென்று தங்கப் பேனாவை பரிசளித்தார்.

    பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார். மாணவி நந்தினிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, அவர் பெற்ற தங்கப் பேனாவை பரிசளிப்பதாக கவிதையின் வாயிலாக தெரிவித்திருந்தார்.


    மாணவி நந்தினிக்கு தங்க பேனா பரிசளித்த வைரமுத்து

    இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசளித்தார். மேலும் மாணவி நந்தினிக்கு தனது வாழ்த்துக்களை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். இந்நிலையில், தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திண்டுக்கல்

    ஏழை வீடு

    எளிய குடில்

    எட்டுக்கெட்டு அறை

    இங்கிருந்து வென்ற

    நந்தினிக்குத்தான்

    தங்கப் பேனா சேர்கிறது

    பட்ட பாடுகளை

    பெற்ற வெற்றிகளைப்

    பள்ளிகளுக்குச் சென்று

    சொல்லிக்கொடு மகளே

    வெற்றியைத் தாண்டித்

    தோற்றவர்களைத்

    தத்தெடுங்கள் ஆசிரியர்களே

    தோற்று வெல்பவர்க்கும்

    பரிசு தருவேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.
    • இந்த வரிசையில் விஜய்யும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய்காந்த், சரத்குமார், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜய் தற்போது இணைந்துள்ளார். இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவருக்கு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் ரசிகர்களின் ஆதரவு காரணமாக அவர் அரசியலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஷாலே அரசியலுக்கு வரும்போது.. விஜய் வருவதற்கு என்ன..? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.


    விஜய் -விஷால்

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாரும் அரசியல் செய்யலாம். விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறுகிறார். ஆனால் விஷால் நான்கு, ஐந்து படங்களில் நடித்ததும் நான் தான் அடுத்த முதல்வர் என்று கட்சி ஆரம்பித்தார். ஆனால் அந்த கட்சி எங்கு போனது என்று தெரியவில்லை.

    கமல்ஹாசன் கூட கட்சி ஆரம்பிக்கும் போது மக்கள் நீதி மய்யம் என்று கூறினார். ஆனால், தற்போது நீதி ,மய்யம் எல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. விஜய்யின் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இளைஞர்களை அவர் ஈர்த்துள்ளார். அவர் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.

    • தர்புகா சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் முதல் நீ முடிவும் நீ.
    • இப்படத்தில் இடம்பெற்ற முதல் நீ முடிவும் நீ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'கிடாரி', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவரும் நடிகருமான தர்புகா சிவா இயக்கி இசையமைத்த படம் முதலும் நீ முடிவும் நீ. இதில் கிஷன் தாஸ், அம்ரிதா மாண்டரின், பூர்வா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளைஞர்களின் உணர்வுகளையும், இன்றைய சிறுவர்களின் மன நிலையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற முதல் நீ முடிவும் நீ பாடல் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது.


    முதல் நீ முடிவும் நீ

    முதல் நீ முடிவும் நீ

    இந்நிலையில் முதல் நீ முடிவும் நீ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தாமரை எழுத்தில் சித் ஸ்ரீராம், தர்புகா சிவா குரலில் வெளியான இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.



    • நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால், சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
    • இவருக்கு தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

    பிரபல இந்தி நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். இவர் ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட் உள்ளிட்ட படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டி.வி தொடர் படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக ஜெனிபர் மிஸ்ட்ரி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் தாரக் மேத்தா கா ஊல்தா சாஸ்மா என்ற தொடரில் நடித்தபோது பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன். அந்த தொடரின் தயாரிப்பாளர் அசித்மோடி மற்றும் இரண்டு பேர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர். நான் உடன்படவில்லை.

    பலமுறை என்னை ஆசைக்கு இணங்க அணுகினார். தொடரில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று பொறுமையாக இருந்தேன். கடைசியாக வேறு வழி இல்லாமல் அந்த தொடரில் இருந்து வெளியேறினேன். சில பெண்கள் அவர்களின் விருப்பங்களுக்கு இணங்கினர். தொடரில் வேலை பார்த்த எல்லோரையும் கொத்தடிமைபோல் நடத்தினர்'' என்றார். இவரின் இந்த புகார் தற்போது பரபரப்பாகி உள்ளது.

    ×