என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம் ஓடவில்லை.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

    இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர் இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.


    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


    ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

    • கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
    • பொன்னியின் செல்வன் படம் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் வாழும் இலங்கை தொழில் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா. லைகா மொபைல் என்ற தொலை தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். உலகம் முழுக்க 17 நாடுகளில் இந்த நிறுவனம் செல்போன் சேவை இணைப்பு வழங்கி வருகிறது. உலகின் சிறந்த தொழில் அதிபர்களில் ஒருவராக சுபாஷ்கரன் தேர்வாகி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதலில் அவர் நடிகர் விஜய் நடித்த "கத்தி" படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களை தயாரித்து வருகிறார்.

    எந்திரன், கோலமாவு கோகிலா, 2.0, தர்பார் படங்கள் தயாரிப்பு மூலம் லைகா நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை ஈட்டியது. கடந்த ஆண்டு வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து வெளியிட்டது.

    பொன்னியின் செல்வன் படம் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் சினிமா படங்கள் தயாரிப்பதற்கு இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று முதலீடு செய்து இருப்பதாக கூறப்பட்டது. அந்த பண பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    இது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருந்தனர். அப்போது லைகா பட நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகளில் உரிய கணக்கு இல்லை என்று அதிகாரிகள் கருதியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் லைகா பட நிறுவன அலுவலகங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தி.நகர், அடையார், காரப்பாக்கம் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    ஒவ்வொரு இடத்திலும் 10 அதிகாரிகள் குழு சோதனையை மேற்கொண்டது. பட தயாரிப்புக்கு செலவிட்ட தொகை, முதலீடு செய்த தொகை போன்றவை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சில ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றிய முழுமையான தகவல்கள் அமலாக்கத்துறை சார்பில் இன்று மதியம் வரை வெளியிடப்படவில்லை. லைகா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வரும் லைகா பட நிறுவனம் இதுவரை இந்தியாவில் சுமார் 20 படங்களை தயாரித்து உள்ளது. அடுத்து கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை தயாரித்து வருகிறது.

    இது தொடர்பாக முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டதால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சோதனை நடை பெற்ற 8 இடங்களில் இருந்த லைகா பட நிறுவன ஊழியர்களிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
    • 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'அவ கண்ண பாத்தா' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் வடிவில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் லைகா.
    • இந்த நிறுவனம் தற்போது ’தாம் தூம் தையா’ ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் விடாமுயற்சி போன்ற படங்களை தயாரித்து வருகிறது.


    இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் 'தாம் தூம் தையா' என்ற புதிய பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜே கே, ஸ்ரியா, நாராயணன் பரசுராம், ஷாய்ஷா அகர்வால் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலை ஜிமிங் ஜி இயக்கியுள்ளார். மேலும், இந்த பாடலுக்கு ஜேகே இசையமைத்து வரிகள் எழுதியுள்ளார். வித்தியாசமாக இரண்டு மொழிகள் கலந்து உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.


    ஜிகர்தண்டா -2

    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.

    இதைத்தொடர்ந்து, ஜிகர்தண்டா படத்தின் சண்டை காட்சி ஒன்று கொடைக்கானலில் திலீப் சுப்பராயன் தலைமையில் 80 சண்டை கலைஞர்களுடன் நடைபெற்று வருவதாகவும் இந்த சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் பங்குபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.


    ஜிகர்தண்டா 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.




    • மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
    • இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘2018’.

    மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் '2018'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.


    ஜூட் ஆண்டனி ஜோசப்

    கடந்த 2014-ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஒஷானா' படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை முழு அளவில் திரையரங்கிற்கு அழைத்து வரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.


    ரோபோ ஷங்கர்

    சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.


    ரோபோ ஷங்கர்

    இந்த நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தான் நடனமாடும் வீடியோ ஒன்றை ரோபோ சங்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியுள்ளார்.  ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கரின் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த மே 5-ஆம் தேதி வெளியானது.
    • இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர் இந்தியாவில் சில மாநிலங்களில் படத்தைத் திரையிடவில்லை. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.


    ஆனாலும் இதையும் மீறி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று வரைக்கும் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள். படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளவர் அமிதாப் பச்சன்.
    • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    அமிதாப் பச்சன்

    பொதுவாக அமிதாப் பச்சன் படப்பிடிப்பிலும், பொது நிகழ்வுகளிலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் தனது வீட்டில் இருந்து ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அமிதாப் பச்சன் காரில் சென்றுள்ளார்.

    அப்போது திடீரென ஏற்பட்ட டிராபிக் ஜாமால் அவரது கார் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பிற்கு தாமதமாகி விடும் என்பதை உணர்ந்த அவர் பைக் ஓட்டி ஒருவரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.


    அமிதாப் பதிவு

    இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், "ரைடுக்கு நன்றி நண்பா. நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்கல்களை தவிர்த்தும், என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


    மார்க் ஆண்டனி

    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் சுனிலின் பகுதிகள் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • நடிகர் அஜய் தேவ்கன் தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் 'போலா' என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    மாதவன் -அஜய் தேவ்கன்

    இதைத்தொடர்ந்து, நடிகர் அஜய் தேவ்கன் 'குயின்', 'சூப்பர் 30', 'குட் பை' உட்பட பல படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

    ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, முசோரி மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


    ஜோதிகா

    நடிகை ஜோதிகா கடைசியாக 1998-ஆம் ஆண்டு வெளியான 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜ்ய தேவ்கன் - மாதவன் நடிக்கும் இப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் பிரபாஸ், ஆதி புரூஷ் என்ற படத்தில் ராமர் வேடத்தில் நடித்து உள்ளார்.
    • ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் பிரபாஸ் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.


    ஆதிபுருஷ்

    நேற்று தெலுங்கானாவில் உள்ள பத்ராச்சலம் ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் ரமாதேவியை சந்தித்து கோவில் அன்னதானத்திற்காகவும், கோசாலை விரிவாக்கத்திற்காகவும் ரூ.10 லட்சம் காசோலையை நன்கொடையாக வழங்கினார். இந்த செயல் பிரபாஸின் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    ×