என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.
    • இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ்

    உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 'மாமன்னன்' படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.


    மாமன்னன்

    மாமன்னன்

    இந்நிலையில், 'மாமன்னன்' படத்தில் வடிவேலு பாடியுள்ள பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பாடல் வரும் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு இப்பாடலை பாடியுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.


    லால் சலாம்

    லால் சலாம்

    இந்நிலையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மும்பையில் ரஜினிகாந்த் தொடர்பான சண்டைக்காட்சி படப்பிடிப்பு 3 நாட்கள் நடைபெற்றதாகவும், அடுத்த சண்டை காட்சி படப்பிடிப்பு மைசூரில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், பைக் ஓட்டியிடம் லிப்ட் கேட்டு பயணம் சென்றார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை அவர் பதிவிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

    நடிகர் அமிதாப் பச்சன் சமூக ஊடகத்தில் தனது பணி சார்ந்த விசயங்கள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அவ்வப்போது ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் படப்பிடிப்பின்போது, காயம் ஏற்பட்டு அதற்காக ஓய்வில் இருந்த அவர், அதன்பின் அதில் இருந்து மீண்டு வந்து உள்ளார். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதுபற்றிய விவரங்களையும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


    பைக்கில் சென்ற அமிதாப் பச்சன்
    பைக்கில் சென்ற அமிதாப் பச்சன்

    இந்நிலையில், பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே... உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள். தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்டின் உரிமையாளருக்கு எனது நன்றிகள் என பதிவிட்டிருந்தார். இதனை பலரும் இணையத்தில் வைரலாக்கினர்.


    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்


    எனினும், இந்த பதிவை கவனித்து சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட், கிழக்கு பெங்களூரு என்ற பெயரில் டுவிட்டரில் பகிர்ந்த தகவலானது, நடிகர் அமிதாப் பச்சனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில், வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன்.
    • இவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    போர் தொழில் போஸ்டர்

    அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


    • விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.
    • இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பிச்சைக்காரனான யோகிபாபு க்யூ ஆர் கோடு வைத்து பிச்சை எடுக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.




    • ரஜினிகாந்த்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வருண் சக்கரவர்த்தி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.

    சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,

    வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் கவுதம் கார்த்திக் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கிரிமினல்’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.


    கிரிமினல் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதனை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த படம், 'தி கேரளா ஸ்டோரி'.
    • இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்த படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


     'தி கேரளா ஸ்டோரி'

    இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர் இந்தியாவில் சில மாநிலங்களில் படத்தைத் திரையிடவில்லை. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.


    அதா சர்மா பதிவு

    இவ்வாறு பல எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில் சமீபத்தில் படத்தில் நடித்திருந்த அதா சர்மாவுக்கு விபத்து ஏற்பட்டது. அவர் விபத்தில் சிக்கிய தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதுபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் சதி வேலையாக இருக்கக்கூடும் என்று தொடர்ந்து அதாசர்மாவை இணையத்தில் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் அதா சர்மா இது தற்செய்லாக நடந்த விஷயம்தான் விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும் பயம்கொள்ள வேண்டாம். தொடர்ந்து என்னை போனில் விசாரித்தவர்களுக்கும் நன்றி என்று கூறி பதிவிட்டிருக்கிறார். ஆனாலும் அவரது பாதுகாப்பை இன்னும் பலப்படுத்திக் கொள்ளச் சொல்லி ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    • இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்'.
    • இப்படம் கடந்த டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.


    அவதார் தி வே ஆப் வாட்டர்

    13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.


    அவதார் தி வே ஆப் வாட்டர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம் வருகிற ஜுன் 7-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. திரைப்படம் வெளியாகி பல மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • இயக்குனர் அஹம்மது கபீர் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் "கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" .
    • கிரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த வெப்தொடருக்கு ஆஷிக் ஐமர் கதை எழுதியுள்ளார்.

    ஜூன், மதுரம் படங்களை இயக்கிய இயக்குனர் அஹம்மது கபீர் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் "கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" . பர்ஸ்ட் பிரிண்ட் ஸ்டுடியோஸ் (First Print Studios) சார்பில் ராகுல் ரிஜி நாயர் தயாரித்துள்ள இந்த வெப்தொடரில் லால், அஜு வர்கீஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    கிரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த வெப்தொடருக்கு ஆஷிக் ஐமர் கதை எழுதியுள்ளார். மேலும், ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார், மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த வெப் தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    சிக்கலான சவால் மிகுந்த வழக்கை காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை சுற்றியே இந்த வெப்தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப்தொடர் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    "கேரளா க்ரைம் பைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" வெப்தொடர் மலையாளத்தின் முதல் வெப்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    விஜய்

    இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68-வது படத்தை 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவார் என கூறப்பட்டது. இதற்கு முன்பு இப்படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது. யார் இயக்கினாலும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் நடிகர் ஜீவா தயாரிப்பார் எனவும் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய்யுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம் ஓடவில்லை.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

    இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர் இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.


    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


    ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

    ×