தனுஷ் பட இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’.இப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் பட இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான்
Published on

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் தனுஷின் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com