இறுதிக் கட்டத்தை நெருங்கும் 'சந்திரமுகி -2' படப்பிடிப்பு

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் படம்‘சந்திரமுகி -2’.இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிக் கட்டத்தை நெருங்கும் 'சந்திரமுகி -2' படப்பிடிப்பு
Published on

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

சந்திரமுகி 2
சந்திரமுகி 2

சந்திரமுகி 2

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை 10 நாட்கள் மைசூரில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் அதன்பின்னர் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com