என் மலர்
கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இதனை முன்னிட்டு படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸாகும் நிலையில் புதிய ட்ரெய்லரை இன்று மாலை 7 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.
- சிறை படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
- விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சிறை' படத்தின் டிரெய்லர் வரும் 12ம் தேதி பிற்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிறை திரைப்படம் டிசம்பர் 25 முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது
'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடனாக பெற்ற ரூ.21 கோடியை ஞானவேல் ராஜா திருப்பிச் செல்லும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.
திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி பணத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
- இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 29 என்று பெயரிடப்பட்டுள்ளது.
- அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி-54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
பெரும் பொருட்செலவில் பரபரப்பான கதை களத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்தது.
திரைப்படத்தின் பெரும் பகுதி முடிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று அதிகாலை கோவிலுக்கு வருகை தந்தனர்.
அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் வழிபாட்டு பூஜையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் ராஜா கலந்து கொண்டனர்.
- திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார்
- ஸ்ரேயாவிக்ரு தற்போது பெண் குழந்தை உள்ளது.
நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார். இந்நிலையில், அண்மையில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தமிழ் திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்தார். தற்போது நான் வயலன்ஸ் படத்தில் கனகா பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியிருந்தார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.
- படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார்.
பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் '96' படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்'' என்றார்.
- சென்னை, மங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
- படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜூடன் இணைந்து அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை விமர்சையாக நடைபெற்றுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாகியாகவும் யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.
இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'வா வாத்தியார்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாகிறது.
- தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமாக கார்த்தி இப்படத்தில் நடித்துள்ளார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
இப்படம் கார்த்தியின் 26-வது படமாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'வா வாத்தியார்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் வா வாத்தியார் பட தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது தெலுங்கில் பேசிய கார்த்தி, 'சூர்யா ஐதராபாத்தில் தான் சூட்டிங்கில் உள்ளார்' என்று கூற ரசிகர்கள் கைதி 2 என்ற கூச்சல் இட்டனர். இதனை தொடர்ந்து கைதி 2 விரைவில் வரும் என்று கார்த்தி பதில் அளித்தார்.
- 'அரசன்' படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோ வரவேற்பை பெற்றது.
- அரசன் படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ளது
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ளது
இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது.
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 'அரசன்' படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோ வரவேற்பை பெற்றது.
'அரசன்' படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றனர்.
- பவனுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார்.
- தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த முழு பாடலும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்தில் பவன் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், பவனுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷால் தத்லானி இதை பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த முழு பாடலும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
- அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்றது.
விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன், உதயநிதியின் பொதுவாக எம் மனசு தங்கம், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த விஷயம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்ததை உறுதி செய்தனர். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நிவேதா மற்றும் ராஜ் ஹீத் இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து அந்த புகைப்படங்களை தற்போது நீக்கியுள்ளனர். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் unfollow செய்துள்ளனர். இதனால் திருமணம் நின்றுபோனதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்ற நிலையில் அதே பாணியில் நிவேதா திருமணமும் நின்றதாக பலர் புறணி பேசி வருகின்றனர்.








