என் மலர்
கார்
இந்த சர்வீஸ் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி மாருதி சுஸூகியின் கார்களின் இன்ஜின்களில் தண்ணீர் தேங்குதல் அல்லது என்ஜின் செயலிழப்பு அல்லது கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல்-டீசல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை வெறும் ரூ.500 மட்டும் செலுத்தி சரி செய்துகொள்ள முடியும்.
இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக அதிக நெரிசல், கலப்பட எரிபொருள் உள்ளிட்ட காரணங்களால் கார்களின் இன்ஜின் பழுதடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகளை குறைந்த செலவில் சரி செய்யும் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளோம்.
மாருதி சுஸூகியின் வேகன்ஆர், ஆல்டோ போன்ற கார்களின் இன்ஜின் பழுதுபார்க்க, வாடிக்கையாளர்கள் ரூ.500 மட்டும் செலுத்தினால் போதும்.
இவ்வாறு கூறியுள்ளது.
இந்த சர்வீஸ் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் ரஷிய டாங்கிகளை முந்தி சென்று வேகமாக தாக்கும் வல்லமை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் தொடர்ந்து 3 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவின் படையை தாக்குவதற்கு உக்கிரேனியர்கள் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஆயுதம் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் பி.எம்.டபில்யூ நிறுவனத்தின் லக்சரி காரான பி.எம்.டபில்யூ 6 சீரிஸ் கார்கள், மெஷின்கன்கள் வைக்கும் வகையில் உக்ரைனியர்களால் மாற்றப்பட்டு போரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த காரில் உள்ள இன்ஜின் வி8 வகையாக இருக்கலாம் என கருத்தப்படுகிறது. மெஷின்கன் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்தாலும் ரஷிய டாங்கிகளை வேகமாக முந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக இந்த கார் இருக்கும் என கருத்தப்படுகிறது.
இதுபோன்ற மாற்றப்பட்ட கார்களை போலீஸாருக்கு பொதுமக்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
#Ukraine: A open top BMW 6 series with a NSV 12,7x108 heavy machine gun mounted - is not something you see everyday. pic.twitter.com/wWGrg5ddEU
— 🇺🇦 Ukraine Weapons Tracker (@UAWeapons) March 14, 2022
டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் கார் XT,XZ,XZ+ என்ற மூன்று ட்ரிம்களில் வெளிவரவுள்ளது.
டாடா நிறுவனம் புதிய டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் காரை வரும் மார்ச் 21-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் பிரீமியம் ஆல்ட்ரோஜ் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும்.
இது XT,XZ,XZ+ என்ற மூன்று ட்ரிம்களில் வெளிவரவுள்ளது.
இந்த காரில் முந்தைய காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர ஹார்மன் ஸ்டீரியோ சிஸ்டம், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 16 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைமெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த கார் 1.2 பெட்ரோல் பவர்ட்ரெயின் இன்ஜினை கொண்டுள்ளது. இது 85bhp/113Nm-ஐ உருவாக்ககூடியது. மேலும் இந்த கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகியவற்றிலும் வருகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 108bhp/140Nm, 1.5 டீசல் மோட்டார் 289bhp/200Nm டார்க்கை உருவாக்கக்கூடியது.
இந்த டாடா ஆல்ட்ரோஸ் கார் மேன்வல் கார்களை விட அதிக விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காருடன் ஆக்டேவியா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ரெனால்ட் கைகர் உள்ளிட்ட பல கார்கள் போட்டியிட்டன.
இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022 விருதை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் வென்றுள்ளது.
இந்த காருடன் எம்ஜி அஸ்டர், ஸ்கோடா ஆக்டேவியா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ரெனால்ட் கைகர், டாடா பன்ச், ஃபோர்ஸ் கூர்கா, மாருதி சுஸுகி செலிரியோ, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆகியவை போட்டியிட்டன.
இவற்றில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் 2-வது இடத்தையும், டாடா பன்ச் கார் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்கள் மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தையும், டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி ரகத்தையும் சேர்ந்தது.
மகிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.12.95 லட்சமாகும், இதன் டாப் வேரியண்டின் விலை ரூ.23,79 லட்சமாகும். ஃபோக்ஸ்வேகன் டைகும் காரின் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து ஆரம்பித்து ரூ.18 லட்சம் வரை உள்ளது. டாடா பன்ச் காரின் விலை ரூ.5.65 விலையில் தொடங்கி ரூ.9.49 லட்சம் வரை உள்ளது.
இந்த வாகனம் அதிக மின்சாரத்தை உருவாக்கக்கூடிய தன்மையுடன், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட்டில் வரும் என கூறப்படுகிறது.
உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஈடு செய்வதற்கு மாற்று எரிபொருளை பயன்படுத்தும் வகையில் வாகனங்களை உருவாக்க மாருதி சுசூகி திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து 2024-25 ஆண்டுகளில் புதிய மின்சார எஸ்.யூ.வி ரக வாகனங்களை அந்நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக வலிமையான ஹைபிரிட் இன்ஜின் கொண்ட எஸ்.யூ.வி கோப் ரக காரை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வாகனத்திற்கு YTB என குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது. YTB மூலம் எரிபொருளை நிறைய சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த YTB கியா சோனட் மற்றும் ஹுண்டாய் வென்யூ ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாகனம் அதிக மின்சாரத்தை உருவாக்கக்கூடிய தன்மையுடன், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட்டில் வரும் என கூறப்படுகிறது.
இதைத்தவிர மாருதி சுசூகி நிறுவனம் 6 புதிய எஸ்.யூ.வி ரக கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 6 மாடல்களில் 2 எஸ்.யூ.வி மாடல்களை சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கவுள்ளன. மேலும் மாருதி சுசூகி புதிய பிரெசா 4 மீட்டர் எஸ்.யூ.வி வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சுசூகி டொயோட்டோவின் மிட் அளவுள்ள எஸ்.யூ.வி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக ரஷியாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ஜாகுவார், லேண்ட் ரோவர், மெர்செடிஸ் பென்ஸ், ஃபோர்ட், பி.எம்.டபில்யூ ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.
இதையடுத்து வெளிநாட்டு அந்நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷியா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.

இதையடுத்து ஹுண்டாய் நிறுவனம், போரின் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளன.
ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷியா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரஷியாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்துள்ளது.
ரஷிய- உக்ரைனுக்கு எதிரான போரினால் உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களின் விலையும் அதிகரிக்கப்போகிறது.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 2 வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போரின் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வை எட்டியுள்ளன. இந்நிலையில் தற்போது ஆட்டோமொபைல் துறையில் மூலப் பொருட்களின் விலையும் தொடந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய போர் காரணமாக நிக்கலின் விலை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. லித்தியத்தின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது.
இதனால் மின்சார கார்கள் தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சார கார்களின் விலையை ஏற்ற வேண்டிய சூழலுக்கு டெஸ்லா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஷியா - உக்ரைன் போரினால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உலக அளவில் உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் மின்சார வாகனங்கலை நோக்கி செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ரஷிய போரினால் மின்சார கார்களின் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செயலியில் உள்ள மை கியா ரிவார்ட்ஸ் என்ற அம்சத்தில் நாம் பெறும் வெகுமதிகளை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்திகொள்ளலாம்.
கியா நிறுவனம் ‘மை கியா’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கியாவின் சேவைகளை இந்த செயலியின் மூலம் பெற முடியும்.
இத்துடன் கியா வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி, சிறப்பு சலுகைகள், தள்ளுபடிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத்தவிர கியா மொபைல் செயலியில் வாகனத்தை சர்வீஸ் செய்யும் தேதியை நினைவுப்படுத்தல், டிஜிட்டல் வாலட், வாகன பராமரிப்பு குறித்த ஆலோசனைகள், டீலர்களை கண்டறியும் அம்சம் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியாவின் புது வாகனம் வெளியாகும்போது சோதனை ஓட்டம், வீடியோ ஆலோசனை ஆகியவையும் இதில் வழங்கப்படும்.
இந்த செயலியில் உள்ள ”மை கியா ரிவார்ட்ஸ்” என்ற அம்சத்தில் நாம் பெறும் வெகுமதிகளை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்திகொள்ளலாம்.
இந்த செயலி மூலம் இதுவரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்துள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர் பேசியுள்ளார்.
ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த நிறுவனம் தற்போது செமி-ஆட்டோனமஸ் டிரைவிங் மென்பொருளை மின்சார வாகன நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. இது தவிர் தற்போது எஃப்.எஸ்.டி எனப்படும் முழுதாக தானியங்கி முறையில் ஓடும் கார்களையும் உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியதாவது:-
எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் மக்கள் பயனிப்பதை எளிதாக்கும் என்பதால், மக்கள் கூடுதலாக வாகனங்களை வாங்க முற்படுவர். இதனால் சாலையில் செல்லும் வாகனங்களும் அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் தானியங்கி கார்கள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வேதனையை குறைக்கும்.
இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர் பேசியுள்ளார்.
இந்த புதிய நிறுவனம் இந்த ஆண்டே தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானை சேர்ந்த இரண்டு பெரிய நிறுவனங்களான சோனியும், ஹோண்டாவும் இணைந்து புதிய மின்சார வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன்மூலம் நவீன தொழில்நுட்பத்துடனான மின்வாகனங்களை தயாரிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளன.
ஜாயிண்ட் வெஞ்சர் அடிப்படையில் தொடங்கப்படும் இந்த நிறுவனத்தில் வாகன உற்பத்தியோடு, அதிக திறன் வாய்ந்த மின்வாகன பேட்டரிக்களையும் விற்பனை செய்யப்போவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய நிறுவனத்தை இந்த ஆண்டே தொடங்குவதற்கு இரு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.

இந்த புதிய நிறுவனத்தில் ஹோண்டா நிறுவனம் வாகன பாகங்கள் தயாரிப்பு, விற்பனைக்கு பிறகான சேவை உள்ளிட்டவைகளை பார்த்துகொள்ளும். சோனி நிறுவனம், இமேஜிங், சென்சார், தொலைத்தொடர்பு, நெட்வொர்க், கேளிக்கை ஆகியவற்றில் தனது தொழிநுட்பத்தை வழங்கும்.
இந்த ஆண்டே நிறுவனம் தொடங்கப்பட்டாலும் புதிய நிறுவனத்தின் முதல் ஈ.வி மாடல் வாகனம் 2025-ம் ஆண்டில் தான் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த புதிய நிறுவனத்தில் திட்டமிடுதல், டிசைன், விற்பனை ஆகியவை நடைபெறும் என்றும், உற்பத்தி ஹோண்டாவின் உற்பத்தி நிலையங்களில் தான் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் சலுகை, ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி என ரூ.35,000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இதன்படி, ஹோண்டா சிட்டி 5-வது ஜெனரேஷன் காருக்கு ரூ.10,000 வரை ரொக்கத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சிற்கு ரூ.7000 வரை போனஸ் என மொத்தம் ரூ.35,596 வரை தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஹோண்டா சிட்டி 4-வது ஜெனரேஷன் காருக்கு பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸும், ரூ.7,000 வரையிலான ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும், ரூ.8,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ.20,000 வரை தள்ளுபடி விலை வழங்கப்படுகிறது.
ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.5,000 தள்ளுபடி, பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சில் ரூ.7,000, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 என தள்ளுபடியாக மொத்தம் ரூ.33,158 வரை வழங்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனம் அதன் எஸ்யுவி ஹோண்டா WR-V காருக்கு மொத்தம் ரூ. 26,000 வரை தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.10,000 வரை, பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை, ஹோண்டா கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.7,000 வரை, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 வரை வழங்கப்படுகிறது.
ஹோண்டா அமேஸ் காருக்கு மொத்தமாக ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ரூ.6,000 வரை ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.4,000 ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த தள்ளுபடி மார்ச் 31, 2022 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3 அல்லது ரூ.4 என்ற விலையில் சார்ஜ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஹோப்சார்ஜ் என்ற நிறுவனம் வீட்டிற்கே வந்து மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வேகமாக சார்ஜ் வழங்கும் சேவையை தொடங்கியுள்ளோம். நகரத்தின் எந்த பகுதியிலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் சார்ஜ் வழங்கப்படும். தற்போது குர்கானில் மட்டும் சோதனை முறையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
இந்த சேவையில் 1 kWh சார்ஜ் ரூ.20-க்கு வழங்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3 அல்லது ரூ.4-க்கு சார்ஜ் வழங்கப்படும். எங்கள் சேவையை பயன்படுத்துவதற்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ஸில் செயலிகளும் இருக்கிறது.
சோதனைக்கு பிறகு முக்கிய நகங்களில் இந்த சேவை வழங்கப்படும்.
இவ்வாறு ஹோப்சார்ஜ் நிறுவனம் கூறியுள்ளது.






