search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahindra XUV 700"

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 700 மாடல் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. #XUV700



    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 கார் வை400 என்ற பெயரில் உருவாகி வருகிறது. 

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 இந்தியாவில் நவம்பர் 19ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 அல்டுராஸ் என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. வெளியான பின் மஹிந்திரா வை400 ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    சங்யாங் ரெக்ஸ்டன் மாடலை தழுவி உருவாகும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடலில் சர்வதேச வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. 18-இன்ச் ஐந்து ஸ்போக் அலாய் வீல்கள், முன்பக்கம் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் க்ரோம் அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: Drivespark.Com

    காரின் பின்புறம் மேல்பக்கம் சிறிய ஸ்பாயிலர், பம்ப்பர்களில் க்ரோம் மற்றும் ஃபைபர் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் டெயில்கேட் பவர்-ஆப்பரேட் வசதி கொண்டிருக்கிறது. மூன்றாம் அடுக்கு இருக்கைகளை மடித்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் 9.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகள், ஸ்டீரிங் வீலில் லோகோ இடம்பெற்றிருக்கிறது. எனினும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 ஸ்பை படங்களின் படி உள்புறத்தில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடலில் 2.2 லிட்டர், நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 184 பி.ஹெச்.பி. பவர், 420 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இது இரண்டு மற்றும் நான்கு சக்கரங்களில் இயங்கும் வசதியுடன் கிடைக்கும். #XUV700
    ×