search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹிந்திரா"

    மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜூன் மாதத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. தற்போது பிரீ-ப்ரோடக்‌ஷன் யூனிட்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இதன் ப்ரோடக்‌ஷன் ரெடி வெர்ஷன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ N

    முற்றிலும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஜூன் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ N அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய மாடல், ஸ்கார்பியோ கிளாசிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்து உள்ளது. 

    புதிய 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் 2.0 லிட்டர் M-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 4x4 வெர்ஷனும் வழங்கப்படலாம். 
    மஹிந்திரா நிறுவனத்தின் eXUV300 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் தனது முழு எலெக்ட்ரிக் மாடலான eXUV300 இந்தியாவில் தற்போதைய நிதியாண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் 2023 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    முன்னதாக மஹிந்திரா தனது ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பிரீ-ப்ரோடக்‌ஷன் வடிவில் காட்சிப்படுத்தி இருந்தது. மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பட்டியலில் eXUV300 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் 16 புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. 

     மஹிந்திரா eXUV300

    புது வாகனங்களில் எட்டு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்கள், எட்டு இலகு ரக வர்த்தக வாகனங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர மேலும் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா சமீபத்திய டீசரில் அறிவித்து இருந்தது. இத்துடன் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB பிளாட்பார்ம் உபகரணங்களை தனது வாகனங்களில் பயனபடுத்த மஹிந்திரா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

    முந்தைய கான்செப்ட் மாடல்களின் படி மஹிந்திரா eXUV300 மாடல் அதன் பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது காஸ்மெடிக் மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ பிக் அப் டிரக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் விலை ரூ. 7 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பொலிரோ சிட்டி பிக்அப் மாடலில் 1500 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது. 

     மஹிந்திரா பொலிரோ பிக் அப் டிரக்

    இதன் முந்தைய மாடலை விட புதிய பொரிலோ சிட்டி பிக்அப் டிரக் மாடலில் சிறிய பொனெட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பிக்அப் டிரக்-ஐ குறுகிய பகுதிகளிலும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும். புதிய பொலிரோ சிட்டி மாடலில் 2.5 லிட்டர் m2Di டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 65 பி.ஹெச்.பி. பவர், 195 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பிக்அப் டிரக் லிட்டருக்கு 17.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்அப் டிரக் மாடலின் ஓட்டுனர் இருக்கை அருகில் அகலமான இருக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு கிலோமீட்டர் வரையிலான வாரண்டி கொண்டிருக்கிறது. 
    ×