என் மலர்

  ஆட்டோமொபைல்

  ஒரே மாதத்தில் 13,000 யூனிட்கள் முன்பதிவான மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300
  X

  ஒரே மாதத்தில் 13,000 யூனிட்கள் முன்பதிவான மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300  மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  அதிகமானோர் முன்பதிவு செய்திருக்கும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை வாங்க பயனர்கள் மூன்று வாரங்களுக்கு காத்திருக்க வேண்டி இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 W4, W6, W8 மற்றும் W8 OPT நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.  மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 1.2 லிட்டர் யூனிட் 110 பி.ஹெச்.பி., 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 115 பி.ஹெச்.பி., 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இருவித என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

  புதிய எக்ஸ்.யு.வி.300 காரின் ஆட்டோமேடிக் வெர்ஷனை சோதனை செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இந்த வெர்ஷன் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்னணி இடம் பிடித்திருக்கிறது.

  புதிய மஹிந்திரா காம்பேக்ட் எக்ஸ்.யு.வி. கார் இந்தியாவில் விற்பனையாகும் மொத்தம் எஸ்.யு.வி. கார்களில் 40 சதவிகித பங்கு வகிப்பதாக மஹிந்திரா தெரிவித்திருக்கிறது.
  Next Story
  ×