search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahindra eXUV300"

    மஹிந்திரா நிறுவனத்தின் eXUV300 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் தனது முழு எலெக்ட்ரிக் மாடலான eXUV300 இந்தியாவில் தற்போதைய நிதியாண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் 2023 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    முன்னதாக மஹிந்திரா தனது ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பிரீ-ப்ரோடக்‌ஷன் வடிவில் காட்சிப்படுத்தி இருந்தது. மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பட்டியலில் eXUV300 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் 16 புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. 

     மஹிந்திரா eXUV300

    புது வாகனங்களில் எட்டு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்கள், எட்டு இலகு ரக வர்த்தக வாகனங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர மேலும் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா சமீபத்திய டீசரில் அறிவித்து இருந்தது. இத்துடன் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB பிளாட்பார்ம் உபகரணங்களை தனது வாகனங்களில் பயனபடுத்த மஹிந்திரா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

    முந்தைய கான்செப்ட் மாடல்களின் படி மஹிந்திரா eXUV300 மாடல் அதன் பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது காஸ்மெடிக் மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    ×