search icon
என் மலர்tooltip icon

    கார்

    டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக்
    X
    டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக்

    ஆட்டோமேட்டிக் வேரியண்டில் வெளியாகும் டாடா ஆல்ட்ரோஸ்

    டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் கார் XT,XZ,XZ+ என்ற மூன்று ட்ரிம்களில் வெளிவரவுள்ளது.
    டாடா நிறுவனம் புதிய டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் காரை வரும் மார்ச் 21-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் பிரீமியம் ஆல்ட்ரோஜ் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும்.

    இது XT,XZ,XZ+ என்ற மூன்று ட்ரிம்களில் வெளிவரவுள்ளது.

    இந்த காரில் முந்தைய காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர ஹார்மன் ஸ்டீரியோ சிஸ்டம், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 16 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைமெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

    இந்த கார் 1.2 பெட்ரோல் பவர்ட்ரெயின் இன்ஜினை கொண்டுள்ளது. இது 85bhp/113Nm-ஐ உருவாக்ககூடியது. மேலும் இந்த கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகியவற்றிலும் வருகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்  இன்ஜின் 108bhp/140Nm, 1.5 டீசல் மோட்டார் 289bhp/200Nm டார்க்கை உருவாக்கக்கூடியது.

    இந்த டாடா ஆல்ட்ரோஸ் கார் மேன்வல் கார்களை விட அதிக விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×