என் மலர்tooltip icon

    கார்

    கியா இந்தியா நிறுவனம் தனது புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் பிரீமியம் எம்.பி.வி. மாடலான கேரன்ஸ் முன்பதிவை இந்தியாவில் துவங்கியது. புதிய கேரன்ஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். முன்பதிவு கியா இந்தியா வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

    புதிய கேரன்ஸ் மாடல் கியா செல்டோஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக லைட்டிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன.

     கியா கேரன்ஸ்

    கியா கேரன்ஸ் மாடலில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் ஹூண்டாய் அல்கசார், மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6, டாடா சபாரி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய கேரன்ஸ் எம்.பி.வி. இந்தியாவில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.

    ஆட்டோமொபைல் லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு வாகன விற்பனையில் புது சாதனை படைத்துள்ளது.


    ஆட்டோமொபைல் லம்போர்கினி நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 8405 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் சிறப்பான வருடாந்திர விற்பனையாக அமைந்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் லம்போர்கினி வாகன விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா பகுதிகளில் 12 சதவீத வளர்ச்சியை லம்போர்கினி பதிவு செய்து இருக்கிறது. 

     லம்போர்கினி கார்

    வாகனங்கள் விற்பனையை பொருத்தவரை அமெரிக்காவில் 2472 யூனிட்களும், சீனாவில் 935 யூனிட்களும், ஜெர்மனியில் 706 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் 564 யூனிட்களும், இத்தாலியில் 359 யூனிட்களை லம்போர்கினி விற்பனை செய்துள்ளது.

    மாடல்களை பொருத்தவரை உலகம் முழுக்க லம்போர்கினி உருஸ் 5021 யூனிட்கள், ஹரிகேன் 2586 யூனிட்கள், அவென்டெடார் 798 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் ஜனவரி மாதத்திற்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி விவரங்களை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், அக்சஸரீஸ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவில் மஹிந்திராவின் எண்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடலான கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. ரூ. 61,055 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

     மஹிந்திரா கார்

    மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொலிரோ நியோ மாடலுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மராசோ எம்.பி.வி. மாடலுக்கு ரூ. 40,200 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. அல்டுராஸ் ஜி4 பிளாக்‌ஷிப் மாடலுக்கு ரூ. 81,500 வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 69,003 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆஸ்டர் மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்டர் மாடல் ரூ. 9.78 லட்சம், எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆஸ்டர் மாடலின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    அதன்படி எம்.ஜி. ஆஸ்டர் எஸ்.யு.வி. விலை தற்போது ரூ. 9.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.73 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     எம்.ஜி. ஆஸ்டர்

    எம்.ஜி. ஆஸ்டர் மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் பெறலாம். 1.3 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்து வரும் பெரும்பாலான மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி டியாகோ, டிகோர், நெக்சான், அல்ட்ரோஸ், ஹேரியர் மற்றும் சபாரி போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஜனவரி மாத சலுகைகளின் கீழ் அதிகபட்சம் ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஜனவரி 31, 2022 வரை மட்டுமே கிடைக்கும்.

     டாடா கார்

    டாடா டியாகோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம், 2022 மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. டிகோர் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிகோர் 2022 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    டாடா அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் தற்போது ரூ. 17,500 வரையிலான சிறப்பு சலுகைகளுடன் கிடைக்கிறது. டாடா நெக்சான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரமும், ஹேரியர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 85 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    டாடா சபாரி மாடல் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த பன்ச் மாடலுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் விலையை இம்மாதம் உயர்த்துவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் புதிய விலை அறிவிக்கப்பட்டது.

    இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 12 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு புதிய பேஸ் வேரியண்ட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பார்ச்சூனர் மாடலின் விலை ரூ. 1.10 லட்சம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     டொயோட்டா பார்ச்சூனர்

    தற்போது பார்ச்சூனர் மாடலின் விலை முன்பு இருந்ததை விட ரூ. 66 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 1.10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டொயோட்டா தற்போது விற்பனை செய்யும் அர்பன் குரூயிசர், கிளான்ஸா மற்றும் வெல்ஃபயர் போன்ற மாடல்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரு மாடல்களும் இந்தியாவில் ஜனவரி 19 ஆம் தேதி அறிமுகமாகும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது.

    அறிமுக தேதி மட்டுமின்றி டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ஒவ்வொரு பகுதி மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. தோற்றத்தில் புதிய சி.என்.ஜி. மாடல்களும் முந்தைய பெட்ரோல் வேரியண்ட் போன்றே காட்சியளிக்கும்.

     டாடா டியாகோ

    புதிய டாடா டியாகோ சி.என்.ஜி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சி.என்.ஜி. கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் செயல்திறன் பெட்ரோல் யூனிட்டை விட குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ, வெண்டோ மற்றும் டைகுன் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. மூன்று கார்களில் டைகுன் மாடல் விலை மட்டும் ரூ. 29 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்தியாவில் வோக்ஸ்வேகன் போலோ மாடல்- டிரெண்ட்லைன், கம்ஃபர்ட்லைன், ஹைலைன் பிளஸ் மற்றும் ஜி.டி. என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் ஜி.டி. லைன் விலை ரூ. 26 ஆயிரமும், மற்ற வேரியண்ட்கள் ரூ. 13 ஆயிரத்தில் துவங்கி ரூ. 19,900 வரையிலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

    வோக்ஸ்வேகன் கார்

    வெண்டோ மாடலின் கம்ஃபர்ட்லைன் மற்றும் ஹைலைன் 1.0 டி.எஸ்.ஐ. மேனுவல் வேரியண்ட்களின் விலைகள் மாற்றப்படவில்லை. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 29 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. கம்ஃபர்ட்லைன் மற்றும் ஜி.டி. பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 45,700 அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 15,700 இல் துவங்கி ரூ. 44,700 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. 
    மாருதி சுசுகி நிறுவனம் 2021 டிசம்பர் மாத வாகன விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த டிசம்பர் 2021 மாதத்தில் 1,53,149 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. உள்நாட்டில் 1,26,031 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 22,280 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

    டிசம்பர் 2021, மாதத்தில் மாருதி சுசுகியின் உள்நாட்டு விற்பனை 13 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. பயணிகள் வாகனங்களான மினி மற்றும் காம்பேக்ட் பிரிவில்- ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, ஸ்விப்ட், டிசையர், இக்னிஸ் மற்றும் பலேனோ போன்ற மாடல்கள் 69,345 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

     மாருதி சுசுகி கார்

    சியாஸ் மிட்-சைஸ் செடான் மாடல் 1,204 யூனிட்களும், யுடிலிட்டி மற்றும் வேன் பிரிவில்- ஜிப்சி, எர்டிகா, எக்ஸ்.எல்.6, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ் மற்றும் ஈகோ போன்ற மாடல்கள் 36,147 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன. 
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலிவர் சிப்சி ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். கார்கள் விற்றுத்தீர்ந்ததாக அறிவித்துள்ளார். 'ஐ.எக்ஸ். போன்றே ஐ4 மாடலும் மாத கணக்கில் விற்றுத்தீர்ந்தது. இதனால் பணி திறனை ஐந்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,' என அவர் மேலும் தெரிவித்தார். 

    ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார்கள் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக பிளக்-இன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. 2025 ஆண்டிற்குள் மற்றொரு பத்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய பி.எம்.டபிள்யூ. இலக்கு நிர்ணயித்துள்ளது.

     பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். 4

    பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். டிரைவ் 50 மாடலை முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஐ4 இ-டிரைவ் 40 மாடலை முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
    2022 ஆடி கியூ7 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஜெர்மன் நாட்டு ஆடம்பர் கார் உற்பத்தியாளரான ஆடி, கியூ7 பேஸ்லிப்ட் மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் புதிய 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது அதிக அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கியூ7 பேஸ்லிப்ட் மாடல் ஆகும்.

    2022 ஆடி கியூ7 மாடலில் 2995சிசி, வி6 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இது முந்தைய மாடலை விட 90 பி.ஹெச்.பி. அதிகம் ஆகும்.

     ஆடி கியூ7

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். இதன் 3 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜினுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 
    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் மாடல் விளம்பர படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படப்படிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹிலக்ஸ் மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஹிலக்ஸ் மாடல் வெள்ளை நிறம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஃபாக் லேம்ப்கள் இல்லாமல், வீல் ஆர்ச்களை சுற்றி பிளாஸ்டிக் கிளாடிங் காணப்படுகிறது. அந்த வகையில் விற்பனையகம் வந்துள்ள ஹிலக்ஸ் மாடல் பேஸ் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. 

     டொயோட்டா ஹிலக்ஸ்

    இதுதவிர ஹிலக்ஸ் மாடலில் கருப்பு நிற அலாய் வீல்கள், சைடு ஸ்டெப், ஓ.ஆர்.வி.எம்.கள், இண்டிகேட்டர்கள், குரோம் அம்சங்கள் உள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் படங்களில் காரின் உள்புறம் காணப்படவில்லை. புதிய ஹிலக்ஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் அல்லது 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். 

    இதே என்ஜின்கள் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் இசுசு வி கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமையும்.
    ×