என் மலர்tooltip icon

    கார்

    லெக்சஸ் கார்
    X
    லெக்சஸ் கார்

    பெட்ரோல், மின்சாரம் எதில் வேண்டுமானாலும் ஓட்டலாம்- இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார்

    இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கார் மார்ச் 9-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
    ஜப்பானை சேர்ந்த லெக்சஸ் நிறுவனம், லெக்சஸ் என்எக்ஸ் 350எச் என்ற காரை விரைவில்  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

    இந்த கார் பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த காரில் பெட்ரோல் மோட்டாருடன், மின்சார மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மோட்டாருக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு சிறிய பேட்டரி பேக் ஒன்றையும் வழங்கியுள்ளது.

    இந்த காரி எக்ஸ்க்யூசைட், லக்சரி, எஃப் ஸ்போர்ட் உள்ளிட்ட 3 வேரியண்டுகளில் வருகிறது.

    லெக்சஸ் கார்

    இந்த காரில் 2.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து மின்சார மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளதால் இரண்டும் சேர்ந்து 235 எச்.பி ஆற்றலை தரும் என கூறப்படுகிறது. 

    இது தவிர இந்த காரில் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டர், ஸ்மார்ட் போன் இணைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. 

    இந்த காரின் விலை ரூ.58.13 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.63.57 லட்சம் வரை இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த கார் மார்ச் 9-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×