search icon
என் மலர்tooltip icon

    கார்

    கியா செல்டோஸ்
    X
    கியா செல்டோஸ்

    இந்தியாவில் ஒரே மாதத்தில் 18,121 யூனிட்டுகள் விற்று தீர்ந்த கார்... எது தெரியுமா?

    கியா நிறுவனம் வெளியிட்டு வரும் கார்கள், விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன.
    தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா, இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு செல்டோஸ் காருடன் தனது விற்பனையை தொடங்கியது. கியாவின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 18,121 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக கியா இந்தியா அறிவித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை விட 8.5 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த மாதத்தில் கியாவின் செல்டோஸ் 6,575 யூனிட்டுகளும், சோனெட் 6,154 யூனிட்டுகளும் விற்பனையாகி உள்ளது. கார்னிவல் லக்சரி எம்.பி.வி கார் 282 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கியா கேரன்ஸ்

    இந்நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய கேரன்ஸ் கார் விற்பனையில் புதிய இலக்கை எட்டும் என்றும், அதன் விற்பனை இந்தியாவில் கியாவின் நிலையை வலுவாக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தற்போது அனந்தபூரில் தொடங்கப்பட்டுள்ள கியா தொழிற்சாலையின் காரணமாக கார் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள செமி கண்டெக்டர் பற்றாக்குறை கார் தயாரிப்பாளர்களை பெரிதாக பாதித்து இருந்தாலும், அதனை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் கியா ஈடுபடும் எனவும் கூறியுள்ளது.

    கியாவின் கேரன் காரில் 2 பெட்ரோல் மோட்டார், 1 டீசல் மோட்டார் என 3 இன்ஜின் தேர்வுகள் தரப்பட்டுள்ளன. மேலும் இதில் பல்வேறு டிரான்ஸ்மிஷன், சீட் லே அவுட் ஆப்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
    Next Story
    ×