search icon
என் மலர்tooltip icon

    கார்

    டாப் கிளாஸ் கார்கள்
    X
    டாப் கிளாஸ் கார்கள்

    இந்தியாவில் இந்த மாதம் அறிமுகமாவுள்ள டாப் கிளாஸ் கார்கள்

    மெர்சிடிஸ், பி.எம்.டபில்யூ, லெக்சஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் கிளாஸ் கார்களை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோமொபைல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாதாரண காரில் இருந்து பிரீமியம் கார்கள் வரை விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதன்படி ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா காரை வரும் 3-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 1.5 லிட்டர் வெர்ஷன் காரான இதற்கு ரூ.10 லட்சத்து 69 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார், ஆக்டீவ் சிலிண்டர் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் கார் வரும் 3ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதிக லக்சூரி அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள கார் இரு விதமான ட்ரிம்களில், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்சுஸ் காரை இந்த மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரை எம்க்யூபி ஏ0 ஐஎன் பிளாட்பாரத்தில் வைத்து உள்ளூரிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 

    லெக்சஸ் நிறுவனம் என்எக்ஸ் 350எச் ஃபேஸ்லிஃப்ட் காரை  மார்ச் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இக்காரின் விலை பற்றி விபரம் இன்னும் அறிவிக்கப்படதா நிலையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.ஜி நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான எம்ஜி இசட்எஸ் இவி காரை இந்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் பழைய வெர்ஷனில் இருந்து மாற்றப்பட்ட முன்-பின் பம்பர்கள், ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா ஹைலக்ஸ்

    பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்4 சொகுசு காரை இந்த மாதத்தில் வெளியிடவுள்ளது. இதற்கான டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த கார் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

    டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் ரக வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இக்காருக்கு ரூ. 1 லட்சம் என்ற முன் தொகையில் புக்கிங் நடைபெற்று வருகிறது. இக்காரில் 2.8 லிட்டர் டீசல் மோட்டார் கொண்டுள்ளது.
    இது 201 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனையும் கொண்டுள்ளது. இது தவிர டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரையும் அறிமுகம் செய்யவுள்ளது.
    Next Story
    ×