என் மலர்
கார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்கள் புதிய நிறத்தில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் மற்றும் சபாரி மாடல்களை வெல்வெட் கிரீன் நிறத்தில் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார்களில் பிளாக் ரைனோ பேட்ஜ்கள் பொருத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
புதிய வெல்வெட் கிரீன் நிற வேரியண்ட் லிமிடெட் எடிஷனாக விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரின் உள்புறமும் டூயல் டோன் ஷேட் வழங்கப்படும் என தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சபாரி மாடல்களில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்கள் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசில்லா போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தொடர் வரவேற்பு காரணமாக மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன முதலீட்டில் பத்து சதவீத தொகையை தனது லாஸ்ட்-மைல் மொபிலிட்டி பிரிவில் ஒதுக்கீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் மஹிந்திரா எலெக்ட்ரிக் உற்பத்தி திறனை இருமடங்கு அதிகரித்து மூன்று மற்றும் நான்கு சக்கரங்கள் கொண்ட குவாட்ரிசைக்கிள் பிரிவில் மொத்தம் ஆறு புதிய வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் 14-இல் இருந்து 15 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து 2023 நிதியாண்டில் இந்த எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க மஹிந்திரா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. எனினும், தற்போதுள்ள செமிகண்டக்டர் குறைபாடு எதிர்காலத்தில் மேலும் மோசமடையாமல் இருக்க வேண்டும்.
இந்த நிதியாண்டு மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் லாஸ்ட் மைல் மொபிலிட்டி பிரிவில் 7 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து உள்ளது. விலை உயர்வு காரணமாக கார்களின் விலை தற்போதைய விலையில் இருந்து இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை அதிகமாகிறது. விலை உயர்வு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
விலை உயர்வில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் மட்டும் இடம்பெறாது. சமீபத்தில் தான் டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக இந்த மாடலின் விலை அடுத்த மாதம் உயர்த்தப்படாது என தெரிகிறது. இந்த ஆண்டு வோக்ஸ்வேகன் நிறுவனம் டி ராக், டைகுன் மற்றும் டிகுவான் பேஸ்லிப்ட் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது.

விரைவில் வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் விர்டுஸ் என அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வென்யூ பேஸ்லிப்ட் மாடல் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகின.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வென்யூ என்-லைன் மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது. ஸ்பை படங்களில் புதிய காரின் பின்புறம் முற்றிலுமாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் டெயில்கேட், புதிய பம்ப்பர் மற்றும் புது டெயில்-லைட் வழங்கப்படுகிறது.

இத்துடன் குரோம்-பிளேட் செய்யப்பட்ட டுவின் எக்சாஸ்ட் பைப்கள், அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. காரின் முன்புறத்தில் மேம்பட்ட கிரில், புதிய பம்ப்பர், ஹெட்லைட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஹூண்டாய் வென்யூ மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300, கியா சொனெட், நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலின் காத்திருப்பு காலம் மேலும் அதிகரித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அதிக பிரபலமாகி விட்டது. இதுவரை புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
எனினும், இந்த காரின் உற்பத்தி எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க சுமார் 1.5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எக்ஸ்.யு.வி.700 எம்.எக்ஸ். பெட்ரோல் வேரியண்டை பெற 25 முதல் 27 வாரங்கள் வரையிலும், ஏ.எக்ஸ்.7 லக்சரி பேக் மாடலை பெற அதிகபட்சம் 75 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

செமிகண்டக்டர் சிப் குறைபாடு காரணமாக எக்ஸ்.யு.வி.700 காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. காரை வேகமாக டெலிவரி பெற மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் சில அம்சங்கள் இன்றி பெற்றுக் கொள்ள கேட்டுக்கொண்டு வருகிறது. இவ்வாறு செய்யும் போது காரை சற்று முன்னதாக பெற முடியும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ.கியூ.எஸ். மாடல் பாதுகாப்பு சோதனையில் அசத்தி இருக்கிறது.
2021 மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.எஸ். மாடல் யூரோ என்கேப் (NCAP) பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. ஆடம்பர எலெக்ட்ரிக் செடான் மாடலான இ.கியூ.எஸ். பெரியவர்கள் பயணிக்கும் பாதுகாப்பில் 96 சதவீதம் புள்ளிகளையும், குழந்தைகள் பயணிக்கும் போது 91 சதவீத புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.
இந்த ஆண்டு யூரோ பாதுகாப்பு சோதனையில் பங்கேற்ற எந்த கார் மாடலும் இத்தனை புள்ளிகளை பெறவில்லை. 2480 கிலோ எடை கொண்டிருக்கும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் சேஃப்டி அசிஸ்ட் பிரிவில் 80 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடம்பர எலெக்ட்ரிக் செடான் மாடல் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

புதிய எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இந்த கார் இ.கியூ.எஸ்.450 மற்றும் இ.கியூ.எஸ்.580 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 333 ஹெச்.பி. திறன், 523 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும்.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அமேஸ் காம்பேக்ட் செடான் மாடல் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் மாடல் உள்நாட்டில் இதுவரை 4.6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2018 ஆண்டில் அமேஸ் இரண்டாம் தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா அமேஸ் மாடலை வாங்கியவர்களில் 20 சதவீதம் பேர் சி.வி.டி. டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்துள்ளனர். 40 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்கியவர்கள் ஆகும். மற்ற மாடல்களை போன்றே அமேஸ் மாடலும் ஹோண்டாவின் ராஜஸ்தான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

அமேஸ் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 90 பி.ஹெச்.பி. திறன், 110 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 99 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் ஹோண்டா அமேஸ் மாடல் மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஆடி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கியூ7 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.
2022 ஆடி கியூ7 மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய பி.எஸ்.6 புகைவிதிகள் அமலுக்கு வந்த போது ஆடி கியூ7 சீரிஸ் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2021 ஆடி கியூ5 மாடலை போன்றே புதிய கியூ7 மாடலும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இதில் 3 லிட்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட்கள், பம்ப்பர் மற்றும் ஏர் டேம்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் டேஷ்போர்டு டுவின்-ஸ்கிரீன் எம்.எம்.ஐ. டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் 10.1 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, 8.6 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. முன்னதாக புதிய ஆடி கியூ7 மாடலின் உற்பத்தி பணிகள் ஔரங்காபாத் ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
டொயோட்டா நிறுவனமும் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டாவும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதையே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்துள்ளன.
சமீப மாதங்களில் டொயோட்டா நிறுவனம் சில புது மாடல்கள் மற்றும் பேஸ்லிப்ட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி சிறிய மற்றும் எஸ்.யு.வி. மாடல்களை பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் வினியோக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதே நிலை அடுத்த ஆண்டும் தொடரும் என கூறப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு சமீபத்திய பண்டிகை கால விற்பனை மோசமாக நடைபெற்றது என ஆட்டோமொபைல் டீலர் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விற்றுத்தீர்ந்தது.
பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை இந்த வாரம் தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதற்குள் இந்த கார் விற்றுத்தீர்ந்தது என பி.எம்.டபிள்யூ. அறிவித்து இருக்கிறது. ஆன்லைனில் நடைபெற்ற முன்பதிவில் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தது என பி.எம்.டபிள்யூ. இந்தியா தெரிவித்தது.
இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இரண்டாம் கட்ட முன்பதிவுகள் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்குகிறது.

"இத்தகைய வரவேற்பை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதல் நாளிலேயே அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்துள்ளன. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யை வாங்க நினைக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஆயத்தமாகி வருகிறோம்," என பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா தெரிவித்தார்.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்திய உற்பத்தி விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட கோடியக் மாடலின் உற்பத்தியை மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் ஆலையில் துவங்கியது. இந்தியாவில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர் 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

தோற்றத்தில் ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பிளாக்டு-அவுட் பட்டர்ஃபிளை கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டில் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், பிளாக் ஒ.ஆர்.வி.எம்.கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில்-லைட்கள் உள்ளன.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய குஷக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் குஷக் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமான சில மாதங்களிலேயே குஷக் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமான முதல் மாடல் குஷக் ஆகும். ஸ்கோடா குஷக் கேண்டி வைட், பிரிலியண்ட் சில்வர், ஹனி ஆரஞ்சு, கார்பன் ஸ்டீல் மற்றும் டொர்னாடோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி 1 லிட்டர் டி.எஸ்.ஐ. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.






