என் மலர்
கார்

லம்போர்கினி கார்
வாகன விற்பனையில் புது சாதனை படைத்த லம்போர்கினி
ஆட்டோமொபைல் லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு வாகன விற்பனையில் புது சாதனை படைத்துள்ளது.
ஆட்டோமொபைல் லம்போர்கினி நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 8405 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் சிறப்பான வருடாந்திர விற்பனையாக அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் லம்போர்கினி வாகன விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா பகுதிகளில் 12 சதவீத வளர்ச்சியை லம்போர்கினி பதிவு செய்து இருக்கிறது.

வாகனங்கள் விற்பனையை பொருத்தவரை அமெரிக்காவில் 2472 யூனிட்களும், சீனாவில் 935 யூனிட்களும், ஜெர்மனியில் 706 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் 564 யூனிட்களும், இத்தாலியில் 359 யூனிட்களை லம்போர்கினி விற்பனை செய்துள்ளது.
மாடல்களை பொருத்தவரை உலகம் முழுக்க லம்போர்கினி உருஸ் 5021 யூனிட்கள், ஹரிகேன் 2586 யூனிட்கள், அவென்டெடார் 798 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Next Story