search icon
என் மலர்tooltip icon

    கார்

    2022 ஆடி கியூ7
    X
    2022 ஆடி கியூ7

    2022 ஆடி கியூ7 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    ஆடி நிறுவனத்தின் புதிய 2022 கியூ7 மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் 2022 ஆடி கியூ7 மாடலை பிப்ரவரி 3 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கியூ7 ஃபேஸ்லிப்ட் வடிவில் இந்தியா வருகிறது. முன்னதாக இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, இதன் விவரங்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

    இந்திய சந்தையில் இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் அறிமுகமாக இருக்கும் 2022 ஆடி கியூ7 மாடல் புது என்ஜின் கொண்டிருக்கிறது. புது  மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாடலில் புது டிசைன் கொண்ட முன்புறம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆடி பாரம்பரிய டே-டைம் ரன்னிங் லைட்கள், புது டிசைன் கொண்ட கிரில், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் உள்ளன.



    இத்துடன் புது பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக், புது அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் புதிய ஆடி கியூ7 மாடலில் டுவீக் செய்யப்பட்ட எல்.இ.டி.  டெயில் லைட்கள் மற்றும் குரோம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன. உள்புறத்தில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அடுக்கு இருக்கையில் உள்ள பயணிகளுக்காக டேப்லெட் போன்ற திரைகள் உள்ளன. 

    2022 ஆடி கியூ7 மாடலில் 3 லிட்டர் வி6 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. திறன், 500  நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்  வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    Next Story
    ×