search icon
என் மலர்tooltip icon

    கார்

    கியா கேரன்ஸ் கார்
    X
    கியா கேரன்ஸ் கார்

    இன்று முதல் விற்பனைக்கு வந்த கியா கேரன்ஸ் கார்- என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?

    இந்த கார் ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி, லக்சூரி ப்ளஸ் ஆகிய 5 ட்ரிம்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
    தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியாவின் புதுவித எம்பிவி காரான கேரன்ஸ் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.  இந்த காரில் பல வகையான சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இக்காருக்கான முன்பதிவு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 19,089 பேர் இந்த காரை புக் செய்துள்ளனர். இந்த காரின் விலை வெளியாவதற்கு முன்னரே பலரும் புக்கிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

    கியாவின் கேரன்ஸ் கார் ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி, லக்சூரி ப்ளஸ் ஆகிய 5 ட்ரிம்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அனைத்து வகைகளில் 6/7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும் இந்த கார் இம்பீரியல் ப்ளூ, மோஸ் பிரவுன் மற்றும் இன்டென்ஸ் சிவப்பு நிறத்துடனான ஸ்பார்க்கிளிங் சில்வர், அரோரா பிளாக் பியர்ல், கிராவிட்டி கிரே, கிளாசியர் ஒயிட் பியர்ல் மற்றும் கிளியர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

    கியா கேரன்ஸ் காரின் முகப்பு பகுதி, பின் பகுதியை அலங்கரிக்கும் விதமாக எல்இடி லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 16 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், பாடி கிளாடிங் மற்றும் குரோம் பூச்சு கொண்ட ஆக்ஸசரிஸ்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 64 நிறங்கள் கொண்ட ஆம்பியண்ட் லைட்டுகள், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்ட 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், ஓடிஏ மேப் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

    கியா கேரன் காரின் உட்பகுதி

    பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. வலுவான ஸ்டீலை கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி திறன் கொண்ட கேமராக்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், டவுன்ஹில் பிரேக்கிங் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக் சைல்டு சீட்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. 

    கொரோனா சூழலை கவனத்தில் கொண்டு வைரஸ் மற்றும் பாக்டீரியக்களை அழிக்கும் திறன் கொண்ட ஏர் ப்யூரிஃபையர், ஏர் வெண்டிலேட் வசதிக் கொண்ட  முன் பக்க இருக்கைகள், ஸ்போர்ட் / ஈகோ / நார்மல் என 3 வகை டிரைவிங் மோட்கள், கார் இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    காரின் பின்புறம் அமர்ந்துள்ள இருக்கையாளர்களும் செல்லும் வகையில் ஏசி அமைப்புகள், வசதியான இருக்கைகள், இருக்கையில் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் வசதி ஆகியவையும் உள்ளன.

    கியா கேரன்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

    இந்த காரின் அறிமுக எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 8.99 லட்சத்தில் தொடங்கி ரூ. 16.99 லட்சம் வரை உள்ளது.
    Next Story
    ×