என் மலர்

  கார்

  போலோ கார்கள்
  X
  போலோ கார்கள்

  இந்தியாவில் 12 ஆண்டுகளாக விற்பனையில் உள்ள பிரபல காரின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாக தகவல்- என்ன கார் தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் காரான இது இதுவரை 2.5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது.
  ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் 12 ஆண்டு காலமாக விற்பனையில் உள்ள போலோ நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு பிரீமியம் ரக ஹேட்ச்பேக் கார் வகையாகும். 

  இதுவரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் 6 தலைமுறை போலோ கார்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 6-வது தலைமுறை போலோ கார் வெளியானது.

  மஹாராஷ்டிரா மாநிலம் சக்கன் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த போலோ கார்கள் இதுவரை 2.5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. 

  போலோ கார்கள்

  விற்பனைக்கு வந்த புதிதில் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த காரின் மதிப்பு சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் சரிந்துள்ளது. மாதத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவான போலோ காரின் யூனிட்டுகளே விற்பனையாகி வருகின்றன.

  இதனால் போலோ காரின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

  மேலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், விர்சுஸ் காரை அறிமுகம் செய்து உலக அளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுவும்  போலோ காரின் உற்பத்தி பணியை நிறுத்துவதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

  இதேபோல விர்சுஸ் காரின் வருகை வெண்டோ காரின் உற்பத்தியையும் பாதிக்கலாம் என கருதப்படுகிறது.
  Next Story
  ×