search icon
என் மலர்tooltip icon

    கார்

    பி.எம்.டபில்யூ கார்
    X
    பி.எம்.டபில்யூ கார்

    போருக்கு செல்லும் வகையில் மாற்றப்பட்ட BMW கார்கள்- உக்ரைன் மக்களின் புதிய முயற்சி

    இந்த கார் ரஷிய டாங்கிகளை முந்தி சென்று வேகமாக தாக்கும் வல்லமை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் தொடர்ந்து 3 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவின் படையை தாக்குவதற்கு உக்கிரேனியர்கள் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஆயுதம் தயாரிக்கின்றனர்.

    இந்நிலையில் பி.எம்.டபில்யூ நிறுவனத்தின் லக்சரி காரான பி.எம்.டபில்யூ 6 சீரிஸ் கார்கள், மெஷின்கன்கள் வைக்கும் வகையில் உக்ரைனியர்களால் மாற்றப்பட்டு போரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த காரில் உள்ள இன்ஜின் வி8 வகையாக இருக்கலாம் என கருத்தப்படுகிறது. மெஷின்கன் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்தாலும் ரஷிய டாங்கிகளை வேகமாக முந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக இந்த கார் இருக்கும் என கருத்தப்படுகிறது.

    இதுபோன்ற மாற்றப்பட்ட கார்களை போலீஸாருக்கு பொதுமக்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.


    Next Story
    ×