என் மலர்
கார்

ஹோப்சார்ஜ்
வீட்டிற்கே வந்து மின்வாகனங்களுக்கு சார்ஜ் சேவை- இந்தியாவில் தொடக்கம்
இந்த சேவையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3 அல்லது ரூ.4 என்ற விலையில் சார்ஜ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஹோப்சார்ஜ் என்ற நிறுவனம் வீட்டிற்கே வந்து மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வேகமாக சார்ஜ் வழங்கும் சேவையை தொடங்கியுள்ளோம். நகரத்தின் எந்த பகுதியிலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் சார்ஜ் வழங்கப்படும். தற்போது குர்கானில் மட்டும் சோதனை முறையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
இந்த சேவையில் 1 kWh சார்ஜ் ரூ.20-க்கு வழங்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3 அல்லது ரூ.4-க்கு சார்ஜ் வழங்கப்படும். எங்கள் சேவையை பயன்படுத்துவதற்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ஸில் செயலிகளும் இருக்கிறது.
சோதனைக்கு பிறகு முக்கிய நகங்களில் இந்த சேவை வழங்கப்படும்.
இவ்வாறு ஹோப்சார்ஜ் நிறுவனம் கூறியுள்ளது.
Next Story