என் மலர்
கார்
இந்த காரின் இன்ஜின் 89 hp பவர், 113 Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது.
மாருதி சுஸூகியின் 2022 பலேனோ அறிமுகம் செய்யப்பட்ட ஒருமாதத்தில் 50,000 யூனிட்டுகள் முன்பதிவை பெற்றுள்ளதுல். இந்த பைக்கின் விலை ரூ.6.35 லட்சத்தில் தொடங்கி, ரூ.9.49 லட்சம் வரை உள்ளது.
மாருதி பலேனோ இந்தியாவில் அதிகம் விற்கப்படும் 5 கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காருக்கான சந்தா விலை ரூ.13,999-ல் இருந்து தொடங்குகிறது.
2022 மாருதி சுஸூகி பலேனோ ஹாட்ச்பேக் புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகிறது. இதில் மாருதி சியாஜ் போன்ற எல்.இ.டி ஹெட்லேம்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இதில் 10 ஸ்போக் அல்லோய் வீல்கள், ஹெச்.டி டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ+, 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த காரின் இன்ஜின் 89 hp பவர், 113 Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது.
பயணிகள் வீடியோக்களை பார்க்கும்போது ஓட்டுநர் தொந்தரவு அடைந்து கவனம் சிதறாமல் இருக்க இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெர்செடிஸ் - பென்ஸ் நிறுவனம் புதிய EQS மின்சார எஸ்.யூ.வி ரக கார் ஒன்றை ஏப்ரல் மாதம் 19-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிகள் ஓட்டுநரை தொந்தரவு செய்யாமல் வீடியோக்களை பார்க்கும் புதிய அம்சம் ஒன்றையும் அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளது.
இந்த காரில் 56 இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் அதிஅற்புதமான டிஜிட்டல் அனுபவத்தை பெற முடியும். மேலும் 12.3 இன்ச் OLED டிஸ்பிளேவில் முன்பக்கத்தில் அமர்ந்துள்ள பயணி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
பயணிகள் ஹெட்போன்களை அணிந்து கொண்டு ஓட்டுநருக்கு தொந்தரவு இல்லாமல் வாகனத்தை ஓட்டலாம். அதேசமயம் மற்றொரு புதிய தொழில்நுட்பம் ஒன்றும் இந்த காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஓட்டுநர் பயணிகளுடைய திரையில் உள்ள வீடியோக்களை பார்க்க நினைத்தால் தானாக திரை மங்கிவிடும். அதுமட்டுமில்லாமல் ஓட்டுநரின் கண்கள் செல்லும் திசையை கண்காணிக்கும் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.
பயணிகள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த கார்களில் XM மற்றும் XZ+ வேரியண்டுகளை மகாராஷ்டிரா அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் பெறலாம்.
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மின்சார காரான டாடாவின் நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி கார்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் தற்போது XM, XZ+, XZ+ Lux, XZ+ Dark மற்றும் XZ+ Lux Dark என்ற 5 வேரியண்டுகளில் வருகிறது. இந்த 5 மாடல்களின் விலைகளும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
நெக்ஸானின் XM வேரியண்டின் விலை ரூ.14.29 லட்சத்தில் இருந்து ரூ.14.54 லட்சமாக உள்ளது. XZ+ வேரியண்டின் விலை ரூ.15.70 லட்சத்தில் இருந்து ரூ.15.95 லட்சமாக உள்ளது. XZ+ Lux வேரியண்டின் விலை ரூ.16.70 லட்சத்தில் இருந்து 16.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. XZ+ Dark வேரியண்டின் விலை ரூ.16.04 லட்சத்தில் இருந்து ரூ.16.29 லட்சமாகவும், XZ+ Lux Dark வேரியண்டின் விலை ரூ.16.90 லட்சத்தில் இருந்து ரூ.17.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் டாடா லாங் ரேஞ்ச் நெக்ஸான் எலக்ட்ரிக் கார் ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வேரியண்ட் 40kWh பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30.2kWh பேட்டரி பேக் மூலம் 312 கி.மீ தூரம் செல்ல முடியும் என்ற நிலையில் 40kWh பேட்டரி பேக் மூலம் 400 கி.மீ ரேஞ்சை எட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார்களில் XM மற்றும் XZ+ வேரியண்டுகளை மகாராஷ்டிரா அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் பெறலாம்.
இந்தியாவில் லக்சரி மாடல் மின்சார கார்களே உள்ளதால் குறைந்த விலையில் கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி தள்ளியுள்ளது. இந்தியாவிலும் பலர் மின்சார இருசக்கர வாகனங்கள், கார்களை நோக்கி செல்கின்றனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் மின்சார வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் ஜப்பானின் முன்னணி நிறுவனமான சுஸூகி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் ரூ.9800 கோடி முதலீட்டை மின்சார வாகன உற்பத்திகாக செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மாருதி சுஸூகி தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிக்களை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதுகுறித்து சுஸூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் அதிக அளவில் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் பலரும் மின்சார வாகனங்களை நோக்கி திரும்பியுள்ளனர். மின்சார கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் பலவும் அதிக விலை உள்ள லக்சரி மாடலாகத்தான் இருக்கிறது. இதன்விலையே ரூ.1 கோடியில் இருந்து தான் தொடங்குகிறது.
ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டும் தான் மக்கள் வாங்கக்கூடிய விலையில் மின்சார கார்களை உருவாக்கி வருக்கின்றன. இந்நிலையில் மாருதி சுஸூகி அந்த இடத்தை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையில் கார்களை நிர்ணயித்தால் மட்டுமே இந்தியாவில் வரவேற்பு கிட்டும். அந்த வேலையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது மாருதி சுஸூகியின் வேகன் - ஆர் மாடலை மின்சார காராக அறிமுகம் செய்ய சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற மாடல்களும் மின்சார வேரியண்டுக்கு மாற்றப்படும்.
இவ்வாறு மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது.
இந்த சர்வீஸ் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி மாருதி சுஸூகியின் கார்களின் இன்ஜின்களில் தண்ணீர் தேங்குதல் அல்லது என்ஜின் செயலிழப்பு அல்லது கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல்-டீசல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை வெறும் ரூ.500 மட்டும் செலுத்தி சரி செய்துகொள்ள முடியும்.
இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக அதிக நெரிசல், கலப்பட எரிபொருள் உள்ளிட்ட காரணங்களால் கார்களின் இன்ஜின் பழுதடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகளை குறைந்த செலவில் சரி செய்யும் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளோம்.
மாருதி சுஸூகியின் வேகன்ஆர், ஆல்டோ போன்ற கார்களின் இன்ஜின் பழுதுபார்க்க, வாடிக்கையாளர்கள் ரூ.500 மட்டும் செலுத்தினால் போதும்.
இவ்வாறு கூறியுள்ளது.
இந்த சர்வீஸ் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் ரஷிய டாங்கிகளை முந்தி சென்று வேகமாக தாக்கும் வல்லமை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் தொடர்ந்து 3 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவின் படையை தாக்குவதற்கு உக்கிரேனியர்கள் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஆயுதம் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் பி.எம்.டபில்யூ நிறுவனத்தின் லக்சரி காரான பி.எம்.டபில்யூ 6 சீரிஸ் கார்கள், மெஷின்கன்கள் வைக்கும் வகையில் உக்ரைனியர்களால் மாற்றப்பட்டு போரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த காரில் உள்ள இன்ஜின் வி8 வகையாக இருக்கலாம் என கருத்தப்படுகிறது. மெஷின்கன் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்தாலும் ரஷிய டாங்கிகளை வேகமாக முந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக இந்த கார் இருக்கும் என கருத்தப்படுகிறது.
இதுபோன்ற மாற்றப்பட்ட கார்களை போலீஸாருக்கு பொதுமக்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
#Ukraine: A open top BMW 6 series with a NSV 12,7x108 heavy machine gun mounted - is not something you see everyday. pic.twitter.com/wWGrg5ddEU
— 🇺🇦 Ukraine Weapons Tracker (@UAWeapons) March 14, 2022
டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் கார் XT,XZ,XZ+ என்ற மூன்று ட்ரிம்களில் வெளிவரவுள்ளது.
டாடா நிறுவனம் புதிய டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் காரை வரும் மார்ச் 21-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் பிரீமியம் ஆல்ட்ரோஜ் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும்.
இது XT,XZ,XZ+ என்ற மூன்று ட்ரிம்களில் வெளிவரவுள்ளது.
இந்த காரில் முந்தைய காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர ஹார்மன் ஸ்டீரியோ சிஸ்டம், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 16 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைமெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த கார் 1.2 பெட்ரோல் பவர்ட்ரெயின் இன்ஜினை கொண்டுள்ளது. இது 85bhp/113Nm-ஐ உருவாக்ககூடியது. மேலும் இந்த கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகியவற்றிலும் வருகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 108bhp/140Nm, 1.5 டீசல் மோட்டார் 289bhp/200Nm டார்க்கை உருவாக்கக்கூடியது.
இந்த டாடா ஆல்ட்ரோஸ் கார் மேன்வல் கார்களை விட அதிக விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காருடன் ஆக்டேவியா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ரெனால்ட் கைகர் உள்ளிட்ட பல கார்கள் போட்டியிட்டன.
இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022 விருதை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் வென்றுள்ளது.
இந்த காருடன் எம்ஜி அஸ்டர், ஸ்கோடா ஆக்டேவியா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ரெனால்ட் கைகர், டாடா பன்ச், ஃபோர்ஸ் கூர்கா, மாருதி சுஸுகி செலிரியோ, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆகியவை போட்டியிட்டன.
இவற்றில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் 2-வது இடத்தையும், டாடா பன்ச் கார் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்கள் மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தையும், டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி ரகத்தையும் சேர்ந்தது.
மகிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.12.95 லட்சமாகும், இதன் டாப் வேரியண்டின் விலை ரூ.23,79 லட்சமாகும். ஃபோக்ஸ்வேகன் டைகும் காரின் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து ஆரம்பித்து ரூ.18 லட்சம் வரை உள்ளது. டாடா பன்ச் காரின் விலை ரூ.5.65 விலையில் தொடங்கி ரூ.9.49 லட்சம் வரை உள்ளது.
இந்த வாகனம் அதிக மின்சாரத்தை உருவாக்கக்கூடிய தன்மையுடன், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட்டில் வரும் என கூறப்படுகிறது.
உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஈடு செய்வதற்கு மாற்று எரிபொருளை பயன்படுத்தும் வகையில் வாகனங்களை உருவாக்க மாருதி சுசூகி திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து 2024-25 ஆண்டுகளில் புதிய மின்சார எஸ்.யூ.வி ரக வாகனங்களை அந்நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக வலிமையான ஹைபிரிட் இன்ஜின் கொண்ட எஸ்.யூ.வி கோப் ரக காரை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வாகனத்திற்கு YTB என குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது. YTB மூலம் எரிபொருளை நிறைய சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த YTB கியா சோனட் மற்றும் ஹுண்டாய் வென்யூ ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாகனம் அதிக மின்சாரத்தை உருவாக்கக்கூடிய தன்மையுடன், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட்டில் வரும் என கூறப்படுகிறது.
இதைத்தவிர மாருதி சுசூகி நிறுவனம் 6 புதிய எஸ்.யூ.வி ரக கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 6 மாடல்களில் 2 எஸ்.யூ.வி மாடல்களை சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கவுள்ளன. மேலும் மாருதி சுசூகி புதிய பிரெசா 4 மீட்டர் எஸ்.யூ.வி வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சுசூகி டொயோட்டோவின் மிட் அளவுள்ள எஸ்.யூ.வி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக ரஷியாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ஜாகுவார், லேண்ட் ரோவர், மெர்செடிஸ் பென்ஸ், ஃபோர்ட், பி.எம்.டபில்யூ ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.
இதையடுத்து வெளிநாட்டு அந்நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷியா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.

இதையடுத்து ஹுண்டாய் நிறுவனம், போரின் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளன.
ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷியா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரஷியாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்துள்ளது.
ரஷிய- உக்ரைனுக்கு எதிரான போரினால் உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களின் விலையும் அதிகரிக்கப்போகிறது.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 2 வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போரின் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வை எட்டியுள்ளன. இந்நிலையில் தற்போது ஆட்டோமொபைல் துறையில் மூலப் பொருட்களின் விலையும் தொடந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய போர் காரணமாக நிக்கலின் விலை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. லித்தியத்தின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது.
இதனால் மின்சார கார்கள் தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சார கார்களின் விலையை ஏற்ற வேண்டிய சூழலுக்கு டெஸ்லா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஷியா - உக்ரைன் போரினால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உலக அளவில் உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் மின்சார வாகனங்கலை நோக்கி செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ரஷிய போரினால் மின்சார கார்களின் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செயலியில் உள்ள மை கியா ரிவார்ட்ஸ் என்ற அம்சத்தில் நாம் பெறும் வெகுமதிகளை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்திகொள்ளலாம்.
கியா நிறுவனம் ‘மை கியா’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கியாவின் சேவைகளை இந்த செயலியின் மூலம் பெற முடியும்.
இத்துடன் கியா வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி, சிறப்பு சலுகைகள், தள்ளுபடிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத்தவிர கியா மொபைல் செயலியில் வாகனத்தை சர்வீஸ் செய்யும் தேதியை நினைவுப்படுத்தல், டிஜிட்டல் வாலட், வாகன பராமரிப்பு குறித்த ஆலோசனைகள், டீலர்களை கண்டறியும் அம்சம் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியாவின் புது வாகனம் வெளியாகும்போது சோதனை ஓட்டம், வீடியோ ஆலோசனை ஆகியவையும் இதில் வழங்கப்படும்.
இந்த செயலியில் உள்ள ”மை கியா ரிவார்ட்ஸ்” என்ற அம்சத்தில் நாம் பெறும் வெகுமதிகளை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்திகொள்ளலாம்.
இந்த செயலி மூலம் இதுவரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்துள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.






