search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஃபோக்ஸ்வேகன் போலோ கார்
    X
    ஃபோக்ஸ்வேகன் போலோ கார்

    மிக பிரபல காரின் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தம்

    போலோவின் 12 வருட நிறைவை கொண்டாட ஃபோக்ஸ்வேகன், போலோ லெஜண்ட் சிறப்பு லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெறும் 700 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை ரூ.10.25 லட்சமாகும்.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களில் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்ற கார் போலோ ஆகும்.

    2010ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. 3 லட்சத்திற்கும் அதிகமான போலோ கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உருவான ஹேட்ச்பேக் கார்களில் 2 ஏர் பேக்குகளுடன் வந்ததில் போலோ தான் முதன்மையானது.

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    போக்ஸ்வேகன் போலோ கடந்த 12 வருடங்களாக இந்திய சாலைகளில் ஓடி வருகிறது. இப்போது பிரேக் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

    வாடிக்கையாளர்களிடம் பல்வேறு உணர்வுகளை இந்த கார் உருவாக்கியது. ஒரு குடும்பத்தின் முதல் காராக எப்போதும் போலோ தான் இருந்திருக்கும். இதன் ஸ்போர்ட்டி டிசைன், சேஃப்டி, ஃபன் டூ டிரை அனுபவம், பில்ட் குவாலிட்டி ஆகியவை இந்த காரை அனைவருக்கும் நெருக்கமாக்கியது என கூறியுள்ளது.

    போலோவின் 12 வருட நிறைவை கொண்டாட ஃபோக்ஸ்வேகன், போலோ லெஜண்ட்  சிறப்பு லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெறும் 700 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை ரூ.10.25 லட்சமாகும்.

    இதில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் TSI பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வேர்டர் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 110PS மேக்ஸிமம் பவர், 175 Nm பீக் டார்க்கை உருவாக்கூடியது.
    Next Story
    ×