search icon
என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுஸூகி
    X
    மாருதி சுஸூகி

    அதிக கார்களை ஏற்றுமதி செய்து மாருதி சுஸூகி புதிய சாதனை

    மாருது சுஸூகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்துள்ளது.
    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா, கடந்த 2021 - 22ஆம் நிதியாண்டில் 2,38,376 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. 

    அதுபோல, இந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 26,496 கார்களை மாருதி சுஸூகி ஏற்றுமதி செய்திருக்கிறது. இது மாருதி சுஸுகி வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கை ஆகும். 

    கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருது சுஸூகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. மாருதியின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


    இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் ஹிஷாசி டாக்யூச்சி கூறியதாவது:-

    இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. நான் இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளது. இந்த வளர்ச்சி தொடந்து அதிகரிக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு ஹிடாஷி டாக்யூச்சி கூறினார்.
    Next Story
    ×