என் மலர்
கார்
கடந்த காலாண்டில் விற்பனையான கார்களில் 40 சதவீத புதிய கார்கள் மின்சாரம் அல்லது ஹைப்ரிட் வகை கார்களாகவே இருந்துள்ளன.
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து புதிய புதிய மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்கின்றன. ஏற்கனவே பெட்ரோல், டீசலில் உற்பத்தி செய்யப்பட்ட மாடலில் மின்சார வெர்ஷனையும் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் முதல் முதலாக பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரி முதல் பிரான்ஸ் நாட்டில் மின்சார வாகனங்கள்ள் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரசாங்கமும் மானியம் உள்ளிட்டவற்றை வழங்கி வருவதால் மக்கள் மின்சார வாகனங்களில் அதிகம் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த காலாண்டில் விற்பனையான கார்களில் 40 சதவீத புதிய கார்கள் மின்சாரம் அல்லது ஹைப்ரிட் வகை கார்களாகவே இருந்துள்ளன. 38 வகை கார்கள் பெட்ரோல் வகை மாடல்களாக இருந்துள்ளன.
கடந்த மாதம் அதிகம் விற்ற மின்சார கார்களின் முதலிடத்தில் டெஸ்லா மாடல் 3 இருந்துள்ளது, ரெனால்டின் டாசியா, ஸ்டெல்லாண்டிஸின் பியேகியாட் 208 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பிரான்ஸில் உள்நாட்டு தயாரிப்பாக சிட்ரியான், ஜெர்மன் கார் தயாரிப்புகளான பிஎம்டபில்யூ, ஆடி, மெர்சடிஸ் ஆகியவற்றின் கார்களும் அதிகம் விற்கப்பட்டுள்ளன.
மேலும் பிரான்சில் புதிய கார்கள் விற்பனை கடந்த காலாண்டில் 20 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள செமி கண்டெக்டர்கள் சிப் பற்றாக்குறை தான் என கூறப்படுகிறது.
ஃபிரான்ஸில் பெட்ரோல் கார் விற்பனையை மின்சார வாகனங்கள் முந்தினாலும் அந்நாட்டில் டீசல் வாகனங்களே அதிகம் விற்கப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட 16.5 சதவீதம் சந்தை பங்கை டீசல் கார்கள் முதல் காலாண்டில் வைத்திருந்தன. தற்போதும் வைத்துள்ளன. ஆனால் இன்னும் 3 ஆண்டுகளில் மின்சார கார் விற்பனை டீசல் கார்களையும் முந்தி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருது சுஸூகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி இந்தியா, கடந்த 2021 - 22ஆம் நிதியாண்டில் 2,38,376 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
அதுபோல, இந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 26,496 கார்களை மாருதி சுஸூகி ஏற்றுமதி செய்திருக்கிறது. இது மாருதி சுஸுகி வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கை ஆகும்.
கடந்த 1986-ம் ஆண்டு முதல் வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் மாருது சுஸூகி நிறுவனம் இதுவரை 22.5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. மாருதியின் கார்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் ஹிஷாசி டாக்யூச்சி கூறியதாவது:-
இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. நான் இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்றுமதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளது. இந்த வளர்ச்சி தொடந்து அதிகரிக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு ஹிடாஷி டாக்யூச்சி கூறினார்.
Global NCAP அமைப்பு இந்த காரின் பாதுகாப்புக்கு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய ரெனால்ட் கிகர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் 3-வது கார் இதுவாகும்.
இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் கார் கருப்பு நிறத்திலான டாப் ரூப்பைக் கொண்ட இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கும் ரெனால்ட் கிகருக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.
சிறிய எஸ்யூவி டர்போ ரக காரான இதில் புதிய டெயில்கேட் மற்றும் குரோம் வேலைப்பாடு, முன்பக்கத்தில் ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் டர்போ டோர் டீக்கால்ஸ் ஆகியவை உள்ளன. இந்த காரில் 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் சிவப்பு வீல்கேப்களுடன் வருகின்றன.
இந்த காரில் மல்டி சென்ஸ் டிரைவிங் மோடுகள் மற்றும் PM2.5 அட்வான்ஸ்டு அட்மாஸ்பியர் ஃபில்டரை உள்ளடக்கிய லேட்டஸ்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 60/40 ஸ்பிலிட் ரியர் சீட் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உள்ளது.
மேலும் இந்த புதிய ரெனால்ட் சிகர் கார் இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது. 1.0-லிட்டர் எனர்ஜி இன்ஜின் மேனுவல் மற்றும் ஈஸி-ஆர் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இன்ஜின் மேனுவல் மற்றும் எக்ஸ்-டிரானிக் சிவிடி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலில் இந்த கார் 20 கிலோ மீட்டர் மைலேஜுக்கு மேல் தரும் என கூறப்படுகிறது.
இந்த காரில் 2 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், சென்சிங் டோர் அன்லாக் மற்றும் ஸ்பீட் சென்சிங் டோர் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக Global NCAP அமைப்பு இந்த காரின் பாதுகாப்புக்கு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
இந்த காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.84 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் பழைய கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட கார்களே அதிகம் விற்பனை ஆகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 10 சதவீதம் வரை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயன்படுத்தப்பட்ட கார்கள் தற்போது கிடைப்பதே அரிதாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிகரிக்கும் பணவீக்கம், வேலைவாய்ப்பு குறித்த பிரச்சனைகள் ஆகிய காரணங்களால் புதிய கார்கள் வாங்கப்படுவது குறைவதனால் பழைய கார்களை விற்க யாரும் முன்வருவதில்லை என்பதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸூகியின் நிர்வாக இயக்குநர் ஷாசங் ஸ்ரீனிவாட்சா கூறுகையில், வாடிக்கையார்கள் புது கார் ஒன்றை வாங்க வேண்டும் என பணம் சேர்த்து அல்லது கடனுக்கு விண்ணப்பித்து பணம் கைக்கு வந்தவுடன் வாங்க வரும்போது அந்த காரின் விலை ஏறி விடுகிறது. இதனால் அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது தான் சுலபமாக இருக்கிறது. மேலும் பெரும்பாலான மாநிலங்கள் பழைய கார்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வருவதால் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் ஒருவர் பழைய காரை விற்றுவிட்டு புதிய காரை வாங்குவது 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை அதன் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 5 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக 2 லட்சம் யூனிட்டுகள் எஸ்.யூ.வியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சுமார் 10,119 காரை அமெரிக்காவில் திரும்ப பெற்றுள்ளது. தயாரிப்பின் போது ரியர் சஸ்பென்ஷனில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2022-ம் ஆண்டு டிகுவான், 2022 டாவோஸ் ஆகிய காம்பெக்ட் கிராஸ் ஓவர் கார்கள் மேற்கூறிய தயாரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ரியர் சஸ்பென்ஷன் பிரச்சனையால் பின்பக்கம் உள்ள இடது அல்லது வலது பக்கம் உள்ள கினக்குல்கள் உடைந்துக்கொள்கின்றன.
திரும்ப பெறப்பட்ட கார்களில் 6 சதவீதம் பின்பக்க கினக்கில் பிரச்சனைகளே காரணம் என கூறப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரச்சனை குறித்து தகவல் அனுபி வருகிறது. குறிப்பாக டிகுவான், டாவோஸ் வாகனம் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளன. பிரச்சனை எதுவும் இருந்தால் கூடுதல் செலவு எதுவும் இல்லாமல் இரண்டு கினக்கில்களும் மாற்றித்தரப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவை தாண்டி பிறநாடுகளுக்கும் இந்த பிரச்சனை இருக்குமா என சரிபார்க்கப்படுகிறது.
அதேபோல கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக் பிரச்சனை காரணமாக 2 லட்சம் யூனிட்டுகள் எஸ்.யூ.வியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து இந்திய மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.
இந்நிலையில் உலக அளவில் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் இந்திய மின்சார வாகன சந்தையில் களமிறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதானி குழுமம் நிறுவ திட்டமிட்டுள்ளது.
அதானி குழுமமும், பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸும் சேர்ந்து முதல் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷனை அகமதாபாத்தில் நிறுவியுள்ளன. மேலும் நாடு முழுவதும் 1500 மின்சார வாகனங்களை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
தேவையை பொறுத்து கூடுதலாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னோடி நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னோடியாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கிறது.
இந்நிலையில் இந்த நிறுவனம் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட 947 கார்களை திரும்ப பெற்றுள்ளது. இதற்கு காரணம் பின்புறத்தை காட்டும் இமேஜ் டிஸ்பிளே தாமதமாக செயல்படுவது தான் என கூறப்படுகிறது.
காரை ரிவர்ஸ் செய்யும்போதே டிஸ்பிளேவில் காட்டப்படாமல், சிறிது நேரம் கழித்து காட்டப்படுகிறது. இது ஓட்டுநருக்கு தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கார் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்பதால் அத்தனை கார்களையும் திரும்ப பெற்றுள்ளோம் என டெஸ்லா விளக்கமளித்துள்ளது.
டெஸ்லா கார்களில் ஆட்டோபைலட் கம்ப்யூட்டர் 2.5 என்ற மென்பொருளின் மூலம் பின்புற டிஸ்பிளே வேலைசெய்கிறது. இந்த மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அப்டேட்டை வெளியிடவும் டெஸ்லா முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் பி.எம்.டபில்யூ, ஆடி, மெர்சடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஜப்பானிய கார் நிறுவனமான டயோட்டா அனைத்து கார்களின் விலையை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து கார்களின் விலையும் 4 சதவீதம் ஏற்றப்படவுள்ளது.
சமீபத்தில் பி.எம்.டபில்யூ 3.5 சதவீதம் விலை உயர்வை அறிவித்தது. அதை தொடர்ந்து ஆடி, மெர்செடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏப்ரல் 1 முதல் விலை உயர்வை அறிவித்துள்ளன. இந்நிலையில் டயோட்டாவும் இன்று விலை உயர்வை அறிவித்துள்ளது.
இன்புட் காஸ்ட் அதிகரித்துள்ளதால் இந்த விலையேற்றம் செய்யப்படுவது கட்டாயமாகியுள்ளதாக டயோட்டா தெரிவித்துள்ளது. இந்தியாவில் டயோட்டா நிறுவனம் ஃபார்டுனர், இனோவா கிரிஸ்டா, கேம்ரி, வெல்ஃபயர், அர்பன் க்ரூசர் மற்றும் கிளான்ஸா ஆகிய 6 கார்களை விற்பனை செய்துவருகிறது.
குறிப்பாக டயோட்டாவின் கிளான்சா சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகமானது. இந்நிலையில் புதிய மாடல் ஒன்றையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த கார் டயோட்டாவின் ஹிலக்ஸ் பிக்அப் டிரக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதமே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் அடுத்த மாதம் வெளியாகும் என கருதப்படுகிறது.
ஏற்கனவே கியா ஈவி6 உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள காரிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.
கியா நிறுவனம் விரைவில் கியா ஈவி6 என்ற புதிய மின்சார கார் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கார் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கியா ஈவி6 உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள காரிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இதன்படி ஈவி6 58.0 kWh யூனிட் மற்றும் 77.4 kWh யூனிட் என்ற இரண்டு பேட்டரி வேரியண்டுகளில் வெளி வருகிறது.
58.0 kWh பேட்டரியில் 168kW பின்பக்க மோட்டார் தரப்பட்டிருக்கும். இது 168 ஹார்ஸ்பவரை உருவாக்கக்கூடியது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 373 கி.மீ வரை செல்லும் என கூறப்படுகிறது. மற்றொரு வேரியண்டான 77.4kWh பேட்டரி கொண்ட காரில் 168kW பின்பக்க மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 225 ஹார்ஸ்பவரை உருவாக்ககூடியது. இந்த கார் 500 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஈவி6 காரில் 2900mm வீல் பேஸ் வழங்கப்பட்டிருக்கும், டேஷ்போர்டில் 2 ஸ்கிரீன்கள் தரப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்கீரினில் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டமும், இரண்டாவது ஸ்க்ரீனில் டிஜிட்டல் டயலும் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.25.5 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.
உலகில் உள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டன.
இந்நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இரண்டு பேர் அமரும் வகையில் பறக்கும் மின்சார கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது.
மேலும் வரும் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த காரை இணையதளத்திலேயே விர்சுவல் ஷோரூம் மூலம் தெளிவாக பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி மோட்டார் நிறுவனம் MG e-Pay என்ற ஒன்ஸ்டாப் கார் நிதி இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக கார் கடன் பெறலாம்.
இந்த இணையதளத்திற்காக எம்.ஜி மோட்டார் நிறுவனம் பலதரப்பட்ட வங்கிகளுடன் இணைந்து செயல்படவுள்ளது. தற்போது வரை ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, கோடாக் மகிந்திரா பிரைம் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை எம்.ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
பலதரப்பட்ட வங்கிகள் இணைவதால் பலவிதமான வட்டிகளில், சலுகைகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கடன் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். வெறும் 5 கிளிக்குகளில், 5 படிநிலைகளில் வாடிக்கையாளர் உடனடி செயல்முறை மூலம் கார் லோன் பெற்றுவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடன் பெற்றவுடன் காரை ஆன்லைனிலேயே புக் செய்ய முடியும். இதைத்தவிர கார் உதிரி மாகங்கள், காப்பீடுகள் ஆகியவற்றையும் இந்த இணையதளத்தில் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.
இத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த காரை இணையதளத்திலேயே விர்சுவல் ஷோரூம் மூலம் தெளிவாக பார்வையிடும் வசதியையும் எம்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது எம்.ஜி நிறுவனம் ஹெக்டார், ஹெக்டார் பிளஸ், ஆஸ்டோர், குளோஸ்டோர் மற்றும் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ZS EV ஆகிய கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை கார்களை ஸ்கோடா இந்தியா தயாரித்து வழங்கும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளார்.
இந்தியா மலிவு விலை மின்சார வாகன உற்பத்தியின் மையமாக விரைவில் மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்தியில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்குகிறது.
உலகம் முழுவதும் பல பகுதிகளில் மலிவு விலை மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. அந்த தேவையை இந்தியாவில் இருந்து நாங்கள் பூர்த்தி செய்வோம். 2030-ம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் அதிக அளவில் புழக்கத்திற்கு வரும் என பலரும் கூறுகின்றனர். இன்னும் 2 ஆண்டுகளில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிக்கப்போகிறது.
மக்களுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை மின்சார கார்களை ஸ்கோடா இந்தியா தயாரித்து வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






