search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஜீப் காம்பஸ்
    X
    ஜீப் காம்பஸ்

    திடீரென கார் மாடல் விலையை மாற்றியமைத்த ஜீப்

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
     

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. 2022 ஆண்டில் முதல் முறையாக விலை உயர்வை ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. விலை உயர்வின் படி ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள், டிரையல்ஹாக் வேரியண்ட் உள்பட ரூ. 25 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வு கணமாக ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 04 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் டிரையல்ஹாக் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடல் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

     ஜீப் காம்பஸ்

    இதில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4x4 சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. தோற்றத்தில் ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடலில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு, முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ரி-வொர்க் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் பூட் மற்றும் முன்புற ஃபெண்டரில் டிரையல்-ரேட் செய்யப்பட்ட பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் ஸ்டாண்டர்டு மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 161 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.சி.டி. யூனிட், டீசல் என்ஜினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் செட்டப் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
    Next Story
    ×