search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீப் இந்தியா"

    • ஜீப் மெரிடியன் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஜீப் இந்தியா நிறுவனம், ஒரு மாத காலத்திற்கு மழைகால சிறப்பு வாகன சரிவீஸ் திட்டத்தை அறிவித்தது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது மெரிடியன் 7 சீட்டர் எஸ்யுவி மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களை நிறுத்தி இருக்கிறது. ஜீப் மெரிடியன் எஸ்யுவி-இன் லிமிடெட் வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டன.

    இந்திய சந்தையில் ஜீப் மெரிடியன் லிமிடெட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 30 லட்சத்து 10 ஆயிரம், ரூ. 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஜீப் மெரிடியன் மாடல் - லிமிடெட் (O), X, அப்லேன்ட் மற்றும் லிமிடெட் பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     

    ஜீப் மெரிடியன் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் தான் ஜீப் இந்தியா நிறுவனம் ஒரு மாத காலத்திற்கு மழைகால சிறப்பு வாகன சரிவீஸ் திட்டத்தை அறிவித்து இருந்தது. இதில் வாகன பரிசோதனை, இலவச அலைன்மென்ட், டயர் மாற்றும் சேவை வழங்கப்படுகிறது.

    • ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கின்றன.
    • இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் விலை ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட் விற்பனையை அதிகாரப்பூர்வமாக நிறுத்திவிட்டது. காம்பஸ் பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜீப் இந்தியா நிறுவனம் டீசல் பவர்டிரெயின் மற்றும் மாற்று எரிபொருள் கொண்டு இயங்கும் என்ஜின் ஆப்ஷன்களில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த அறிக்கை காரணமாக ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் பெட்ரோல் வேரியண்டை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை குறைத்து இருக்கிறது. இது குறித்து ஜீப் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..

    "பிரீமியம் எஸ்யுவி பிரிவில் டீசல் என்ஜினுக்கு இன்றும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் 2.0 லிட்டர் மல்டிஜெட் டர்போ டீசல் பவர்டிரெயினை மேம்படுத்த முதலீடு செய்யும். புதிய வெர்ஷன்கள் அதிக டார்க், குறைந்த மாசு அளவுகளை வெளிப்படுத்துவதோடு, எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்."

    "எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜீப் இந்தியா திட்டமிட்டுள்ளது. அனைத்து விதமான என்ஜின் மற்றும் எரிபொருள் ஆப்ஷன்களையும் முயற்சி செய்து, பயனர்களுக்கு ஏற்ற பவர்டிரெயினை வழங்குவோம்," என்று தெரிவித்துள்ளது.

    பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தப்பட்டதை அடுத்து ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31 லட்சத்து 64 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்டில் 2.0 லிட்டர், இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 172 பிஎஸ் பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 4x4 சிஸ்டமும் வழங்கப்படுகிறது. 

    • ஜீப் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய காரில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
    • கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன.

    ஜீப் நிறுவனத்தின் இரண்டு ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி கார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. மெரிடியன் X மற்றும் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய கார்களில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    இவைதவிர கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன. புதிய ஜீப் மெரிடியன் X ஸ்பெஷல் எடிஷன் மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்கள் லிமிடெட் (O) வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் ஜீப் 4x4 செலக்-டெரைன் 4-வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

     

    இவைதவிர இரு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களிலும் சைடு ஸ்டெப், ஆம்பியண்ட் லைட்டிங், புதிய கால்மிதி, யு-கனெக்ட் 5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் தற்போது சில்வரி மூன் மற்றும் கேலக்ஸி புளூ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் பின்புறம் எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    ஜீப் மெரிடியன் X மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்களில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஜீப் நிறுவன கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • சமீபத்தில் கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து இருந்தது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யுவி-க்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி இரு கார்களின் பேஸ் வேரியண்ட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விலை அப்டேட்களுடன் புதிய கார்கள் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

    விலை மாற்றத்தின் படி ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது முந்தைய மாடல் விலையை விட ரூ. 1 லட்சம் வரை குறைவு ஆகும். இதர பெட்ரோல் மாடல்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதர டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு விட்டது.

     

    புதிய அறிவிப்பின் படி ஜீப் காம்பஸ் மாடலின் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31 லட்சத்து 64 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஜீப் மெரிடியன் மாடலை பொருத்தவரை மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு விட்டது. தற்போது ஜீப் மெரிடியன் விலை ரூ. 27 லட்சத்து 75 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 37 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்படுகிறது.
    • கிராண்ட் செரோக்கி மாடலில் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் செரோக்கி விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை தற்போது ரூ. 1 லட்சம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் கிராண்ட் செரோக்கி விலை ரூ. 78 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

    கிராண்ட் செரோக்கி மாடலில் 7-பாக்ஸ் முன்புற கிரில், கிளாம்ஷெல் பொனெட், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 5-சீட் எஸ்யுவி-யாக கிடைக்கிறது. இந்த காரில் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப் உள்ளது.

     

    ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஜீப் நிறுவனம் தனது ஜீப் ராங்ளர் மற்றும் மெரிடியன் மாடல்கள் விலையை உயர்த்தியது. இதில் மெரிடியன் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரு. 20 ஆயிரமும், ராங்ளர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டது.

    விலை உயர்வை அடுத்து இரு கார்களின் விலை தற்போது ரூ. 30 லட்சத்து 10 ஆயிரமும், ரூ. 59 லட்சத்து 05 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல் கார்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • விலை மாற்றம் ராங்ளர் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என ஜீப் தெரிவித்து இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. விலை உயர்வில் ஜீப் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி ஜீப் ராங்ளர் மாடலின் அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் வேரியண்ட் விலை முன்பை விட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் முதல் துவங்குகிறது.


    ஜீப் காம்பஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 32 லட்சத்து 22 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போதைய விலை உயர்வை அடுத்து ஜீப் காம்பஸ் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இதே ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாத வாக்கில் ஜீப் காம்பஸ் விலை முறையே ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×