search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeep Compass"

    • ஸ்போர்ட் வேரியண்டின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    • 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் கொண்டிருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது குறைந்த விலை எஸ்.யு.வி. மாடல் காம்பஸ் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு ஜூன் மாதம் வரை மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிகிறது. தற்போதைய விலை குறைப்பின் படி ஜீப் காம்பஸ் மாடலின் விலைரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    முன்னதாக ஜீப் காம்பஸ் என்ட்ரி லெவல் ஸ்போர்ட் வேரியண்ட் விலை ரூ. 20 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த காரின் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை குறைந்துள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல்: ஸ்போர்ட், லாங்கிடியூட், நைட் ஈகிள், லிமிடெட், பிளாக் ஷார்க் மற்றும் மாடல் எஸ் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் ஸ்போர்ட் வேரியண்டின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 14 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது ஜீப் காம்பஸ் மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #jeepcompass #limitededition



    ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. மாடலின் புதிய வேரியன்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் என அழைக்கப்படும் புதிய கார் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகும் ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. டாப் என்ட் வேரியன்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் வெர்ஷன் 2-வீல் டிரைவ் ஆடிடோமேடிக் வடிவிலும், டீசல் வெர்ஷன் 2-வீல் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    லிமிட்டெட் வேரியன்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் மற்ற அம்சங்களை விட புதிய லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் பல்வேறு கூடுதல் உபகரணங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டிருப்பதோடு, புதிய லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், விநியோகம் அக்டோபர் மாத முதல் வாரத்தில் துவங்குகிறது.



    புதிய ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட்டில் பானரோமா சன்ரூஃப், 18-இன்ச் அலாய் வீல்கள் கருப்பு நிறத்திலும், அலுமினியம் ஷேட் பாலிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் யுகனெக்ட் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய லிமிட்டெட் பிளஸ் மாடலில் ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோ-டிம்மிங் ரியர்வியூ மிரர் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது. புதிய உபகரணங்கள் மற்றும் அம்சங்கள் தவிர புதிய மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

    அதன்படி ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் மாடலில் 2.0-லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் டீசல் இன்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறனும், பெட்ரோல் மோட்டார் 160 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் இரண்டு இன்ஜின்களும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் விலை ரூ.21.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது. இதன் டாப்-என்ட் வேரியன்ட் விலை ரூ.22.85 லட்சம்  (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #jeepcompass #limitededition
    ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. சமீபத்தில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. #jeepcompass



    இந்தியாவில் ஜீப் காம்பஸ் பிளாக் பேக் ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகமான சில தினங்களில் ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

    வரும் வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜீப் காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் வேரியன்ட் பெயருக்கு ஏற்றார் போல் ஏற்கனவே விற்பனையாகும் ஓ வேரியன்ட்டை தழுவி உருவாக்கப்படுகிறது. இதன் விலை ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஜீப் காம்பஸ் மாடல் டூயல்-டோன் நிறங்களில் புதிய ஸ்போர்ட் தோற்றத்துடன் உருவாகியுள்ளது. இதன் சக்கரங்களிலும் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய ஸ்பை படங்களின் படி இந்த எஸ்.யு.வி. மாடலில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பானரோமிக் சன்ரூஃப், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: TeamBHP

    இத்துடன் ஓட்டுனர் மற்றும் முன்பக்க இருக்கைகளை பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்கள் ஜீப் காம்பஸ் ஓ வேரியன்ட்டில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை காம்பஸ் லிமிட்டெட் பிளஸ் மாடலிலும் பெட்ரோல் ஆட்டோ அல்லது டீசல் மேனுவல் (2wd அல்லது 4wd) ஆப்ஷனுடன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 171 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.

    பெட்ரோல் வேரியன்ட்டில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 160 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இரண்டும் டாப்-என்ட் வேரின்ட் என்பதால் டீசல் வேரியன்ட்டில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், பெட்ரோல் வேரியன்ட்டில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ×