search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்
    X
    ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்

    லிட்டருக்கு 24.5 கி.மீ. மைலேஜ் வழங்கும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் - இந்தியாவில் அறிமுகம்..!

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

    ஹோண்டா சிட்டி மாடல் டாப் எண்ட் ZX வேரியண்டில் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. 

     ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்

    ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் 97 பி.ஹெச்.பி. பவர், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள இரு மோட்டார்களில் ஒன்று இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் போன்று செயல்படும். 

    இரண்டாவது மோட்டார் முன்புற ஆக்சில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 108 பி.ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
    Next Story
    ×