என் மலர்
கார்
சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரி ஆகிவையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை மின்சார வாகனங்களை நோக்கி செலுத்துகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் கடன்களும் வழங்கப்படுகின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
ஒருவர் மின்சார வாகனம் வாங்கினால், வருமான வரி விதி 80EEB பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்கு 80C இன் கீழ் கிடைக்கும் விலக்கிலிருந்து வேறுபட்டது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும்.
இதனுடன், சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரி ஆகிவையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மின்சார வாகனங்களுக்கான கடனில் வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தின் ஆன்ரோடு விலையில் 90 சதவீதம் வரை வங்கி கடன் வழங்குகிறது.
இந்த கடனுக்கான வட்டி விகிதம் 7.05 சதவீதம் முதல் 7.75 சதவீதம் ஆகும். யூனியன் வங்கி மின்சார வாகனங்களுக்கு 10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. நான்கு சக்கர வாகனக் கடனை 84 மாதங்களிலும், இரு சக்கர வாகனக் கடனை 36 மாதங்களிலும் திருப்பிச் செலுத்தலாம். ஆக்சிஸ் வங்கி மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு சாலை விலையில் 85 சதவீதம் வரை கடனை வழங்குகிறது. இந்தக் கடனை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
டெல்லியை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் பயணிப்பதற்கு உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களுடன் இணைந்து சேவையை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் உபர் நிறுவனம் தனது பயணிகளுக்கு கட்டணத்தில் 12 சதவீதத்தை உயர்த்திள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் தற்போது இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணத்தினால் வாகன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெட்ரோ, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லியை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும், ஓலா உள்ளிட்ட பிற நிறுவனங்களும் விலையை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனம் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபில்யூ காரை பரிசளித்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Ideas2IT நிறுவனம் என்ற மென்பொருள் நிறுவனம், அதன் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்த ஊழியர்களை பாராட்டும் விதமாக 100 பேருக்கு புதிய மாருதி சுஸூகி கார்களை பரிசளித்துள்ளது.
இதுகுறித்து Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன் கூறுகையில், கார்களைப் பரிசளிப்பது குறித்து ஊழியர்களால் இணைந்து கூட்டாக முடிவு செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த கார் எங்களது ஊழியர்கள் இதுவரை செய்த பணிக்காக வழங்கப்பட்டது. ஊழியர்களுக்கான ஊக்கத் திட்டங்களின் முதல் படி தான் இந்த நடவடிக்கை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு வளர்ச்சி ஒரு பங்கை அளிக்கும் முயற்சியாக இத்தகைய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம் எனக் கூறினார்.
இந்த கார்களில் எஸ் கிராஸ் முதல் பலேனோ கார் வரை வழங்கப்பட்டுள்ளது. பரிசுபெற்ற ஊழியர்கள் சென்னையில் இருந்து மட்டுமில்லாமல் பல மாவட்டங்களிலும், சிலர் சிறிய ஊர்களையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிஸ்ஃப்ளோ என்ற நிறுவனம் 5 ஊழியர்களுக்கு பிஎம்டபில்யூ காரை பரிசளித்த நிலையில் தற்போது மற்றொரு ஐடி நிறுவனம் 100 ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளது.
இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உலகம் முழுவதும் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றன.
தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விடவும் இரண்டு மடங்கு டென்சிட்டியை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குறைந்த விலையில் இந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரிசோதனை நிலையில் உள்ள இந்த பேட்டரியை முழுதாக 15 நிமிடத்திற்கு சார்ஜ் செய்துவிடலாம் என்றும், தற்போது உள்ள பேட்டரியை விட எடை குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த பேட்டரி வழக்கமான பேட்டரிக்களை விட மக்கள் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் மக்களை மேலும் மின்சார வாகனங்களை நோக்கி செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கார்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.
சென்னையை சேர்ந்த கிஸ்ஃப்ளோ இன்கார்பரேஷன் என்ற சர்வதேச மென்பொருள் சேவை நிறுவனம் தனது 5 ஊழியர்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்புள்ள பி.எம்.டபில்யூ கார்களை பரிசளித்துள்ளது.
பிஎம்டபில்யூ 5 சீரிஸ் லக்சரி செடான் கார்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிஸ்ப்ளோ நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி இந்த பரிசு சிறந்த வஊழியர்களுக்கு தரப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் கூறியதாவது:-
பரிசளிக்கப்பட்ட 5 ஊழியர்களும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து என்னுடன் இருந்தவர்கள். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர்கள். அதிலும் சிலர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அனைத்து வகை வசதிகளும் செய்து தரப்படுகிறது. விடுமுறையை பொறுத்தவரை தனித்தனியாக ஆரோக்கிய விடுப்பு, சாதாரண விடுப்பு என்றெல்லாம் கிடையாது. ஒரே விதமான விடுப்பு தான். அவர்களுக்கு பிடித்தால் எடுத்துகொள்ளலாம். அதேபோல அலுவலகத்திற்கு வர விருப்பமில்லை என்றால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்துகொள்ளலாம். அதேபோல ஊழியர்களுக்கு அட்டெண்டஸும் பிற நிறுவனங்களை போல கிடையாது.
எங்கள் ஊழியர்களை நாங்கள் ஊக்குவிக்கும் வகையில் இவற்றை செய்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்டுள்ள எஸ்.யூ.வி ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் புதிய கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்டுள்ள எஸ்.யூ.வி ரக கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸூகியின் வாகன் ஆர் கார் 24,634 யூனிட்டுகள் விற்பனை செய்யப்ப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாருதி சுஸூகியின் டிஜையர் 18,623 யூனிட்டுகள் விற்பனை செய்யபட்டுள்ளன. அடுத்ததாக மாருதி சுஸூகியின் பலேனோ 14,520 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் அதிகம் விற்கப்பட்ட கார்களில் முதல் மூன்று இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது.
அடுத்ததாக டாடா நிறுவனத்தின் டாடா நேக்ஸன் 14,315 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. பிறகு மீண்டும் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 13623 யூனிட்டுகளும், மாருதி சுஸூகி விட்டாரா ப்ரெசா 12,439 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன. ஹுண்டாய் கிரேட்டா 10,532 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. டாடா பஞ்ச் 10,526 யூனிட்டுகளும், ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியோஒஸ் 9687 யூனிட்டுகளும், மாருதி சுஸூகி எக்கோ 9221 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.
போலோவின் 12 வருட நிறைவை கொண்டாட ஃபோக்ஸ்வேகன், போலோ லெஜண்ட் சிறப்பு லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெறும் 700 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை ரூ.10.25 லட்சமாகும்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களில் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்ற கார் போலோ ஆகும்.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. 3 லட்சத்திற்கும் அதிகமான போலோ கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உருவான ஹேட்ச்பேக் கார்களில் 2 ஏர் பேக்குகளுடன் வந்ததில் போலோ தான் முதன்மையானது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போக்ஸ்வேகன் போலோ கடந்த 12 வருடங்களாக இந்திய சாலைகளில் ஓடி வருகிறது. இப்போது பிரேக் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
வாடிக்கையாளர்களிடம் பல்வேறு உணர்வுகளை இந்த கார் உருவாக்கியது. ஒரு குடும்பத்தின் முதல் காராக எப்போதும் போலோ தான் இருந்திருக்கும். இதன் ஸ்போர்ட்டி டிசைன், சேஃப்டி, ஃபன் டூ டிரை அனுபவம், பில்ட் குவாலிட்டி ஆகியவை இந்த காரை அனைவருக்கும் நெருக்கமாக்கியது என கூறியுள்ளது.
போலோவின் 12 வருட நிறைவை கொண்டாட ஃபோக்ஸ்வேகன், போலோ லெஜண்ட் சிறப்பு லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெறும் 700 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை ரூ.10.25 லட்சமாகும்.
இதில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் TSI பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வேர்டர் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 110PS மேக்ஸிமம் பவர், 175 Nm பீக் டார்க்கை உருவாக்கூடியது.
மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8 சதவீதம் வாகனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸூகி இருக்கிறது. இந்த நிறுவனம் ஆல்டோ, எஸ் கிராஸ் என நிறைய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவனம் மீண்டும் வாகனங்களின் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. மாருதி சுஸூகியின் அனைத்து வகை வாகனங்களுக்கும் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8 சதவீதம் வாகனங்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதமும் விலை உயர்வை அறிவித்துள்ளது.
உயர்த்தப்பட்ட விலைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளன.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும் மின்சார வகானங்கள் அவ்வபோது தீப்பிடிப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மக்களை மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ElectiVa என்ற நிறுவனம் ஜூன் 1ம் தேதி முதல் இலவச சார்ஜ் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
இதன்படி டெல்லி முழுவதும் 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளன.
இந்த இலவச சார்ஜ் சேவை பொது சார்ஜிங் நிலையங்களில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து ElectiVa-ன் நிறுவனர் சுமித் தனுஷ்கா கூறுகையில், அனைத்து கமர்ஷியல் மற்றும் கமர்ஷியல் அல்லாத மின்சார வாகன பயனர்களுக்கும் இந்த இலவச சார்ஜ் வழங்கப்படவுள்ளது. இந்த முன்னெடுப்பு பெட்ரோல், டீசல் எரிபொருளில் இருந்து மின்சார வாகனத்தை நோக்கி மக்களை நகர்த்துவதற்காக செய்யப்படுகிறது.
டெல்லியில் ஒவ்வொரு 3 கி.மீட்டர்களுக்கும் இடையும் சார்ஜிங் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு டெல்லியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் அங்கு கடந்த மார்ச் மாதம் வாங்கப்பட்ட வாகனங்களில் 19 சதவீதம் மின்சார வாகனங்களே ஆகும். இதில் 10,707 வாகனங்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5,888 வாகனங்கள் இருசக்கர வாகங்களாகும் என கூறினார்.
இந்த திட்டத்தை தொடர்ந்து அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து மேலும் 100 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது டெல்லியில் 1 யூனிட் சார்ஜ் ரூ.10க்கு விற்பனையாகி வரும் நிலையில் இந்த இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது.
இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் 2021 முதல் இந்த ஆண்டு மார்ச் 2022 வரை சுமார் 10 லட்சத்திற்கும் மேலான கார்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 048 கார்கள் இந்த ஆண்டு முதல் காலாண்டில் விற்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 67 சதவீதம் அதிகம்.
டெஸ்லா மாடல் எஸ் மற்றும் டெஸ்லா மாடல் ஒய் கார்கள் கடந்த ஆண்டு 24,964 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு முதல் காலாண்டில் 14,724 யூனிட்டுகள் எஸ் மற்றும் ஒய் மாடல்களில் விற்பனையாகியுள்ளது.
உலகம் முழுவதும் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனை மற்றும் சிப் பற்றாக்குறை பிரச்சனை ஆட்டோமொபைல் சந்தையை பலவீனப்படுத்தியுள்ளது. இருப்பினும் டெஸ்லா அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஹோண்டா சிட்டி, ஹோண்டா WR-V, ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது வாகனங்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி ஹோண்டா சிட்டி கார்களுக்கு ரூ.5,396 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஜ் ஆஃபரில் வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.5000 சலுகையும், கார்பரேட் சலுகையில் வாங்குவோருக்கு ரூ.7000 கூடுதல் சலுகையும் வழங்கப்படவுள்ளது.
இத்துடன் லாயல்டி போனஸும் இந்த காருக்கு வழங்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி 5வது ஜெனரேஷன் கார் மிட் அளவு செடான் காராக இருக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் வருகிறது.
இந்த கார் சிவிடி டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. அத்துடன் அதிக இடமுள்ள, பல அம்சங்கள் நிறைந்த கேபினை வழங்குகிறது.
அதேபோல ஹோண்டா WR-V காருக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.10000 வரை வழங்கப்படுகிறது. லாயல்டி போனஸாக ரூ.5000, கார்பரேட் சலுகையாக ரூ.5000 சலுகையும் இந்த காருக்கு உண்டு.
இந்த கார் 5 பேர் அமரக்கூடிய கிராஸ் ஓவர் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த கார் 4 வேரியண்டுகளில் 2 இன்ஜின் தேர்வுகளில் வருகிறது.
ஹோண்டா நிறுவனம் ஹோண்டா அமேஸ் காருக்கும் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த காரை வாங்குபவர்களுக்கு ரூ.5000 லாயல்டி போனஸ் வழங்கப்படும். அத்துடன் கார்பரேட் சலுகை, கார் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் 13 சதவீதம் வரை புதிய வாகனத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையும் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதுப்புது கார்கள், பைக்குகளை தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன், மெர்சடிஸ் பென்ஸ், பி.எம்.டபில்யூ, டொயோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் திடீரென விலை உயர்வை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளன.
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய ஆட்டோ மொபைல் சார்ந்த பொருட்கள் விலை ஏறியதால் வாகனங்களின் விலையும் உயர்த்தப்படுவதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு ரஷியா - உக்ரைன் போர் முக்கிய பங்குவகிப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போரினால் உலக ஆட்டோமொபைல் துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும், அந்த பாதிப்பு தொடர்ந்து வளரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரஷியா உக்ரைன் போரினால் பி.எம்.டபில்யூ இரண்டு ஜெர்மன் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. பென்ஸ் நிறுவனமும் தங்களது தொழிற்சாலையில் உற்பத்தியை தாமதப்படுத்தியுள்ளது. இதுபோன்ற உற்பத்தி பாதிப்பு உலக அளவில் வாகனங்கள் வாடிக்கையாளர்கள் கைகளுக்கு சென்று சேர்வதை தாமதமாக்குவதால், வாகனங்களின் விலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர கம்ப்யூட்டர் சிப்ஸ் மற்றும் பிற கணினி பாகங்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதுவும் பழைய மற்றும் புதிய கார்களின் விலை உயர்வை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
உக்ரைன் நாடு எலக்ட்ரிக்கல் ஒயரிங் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. ரஷியாவும் கேட்டலிட்டிக் கன்வெர்டர் மற்றும் மின்சார வாகன பேட்டரிக்களுக்கான நிக்கல் உள்ளிட்ட உலோக ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடாக இருக்கிறது. இந்த இரு நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ளதால் இந்த பாதிப்பு ஆட்டோமொபைல் சந்தையையை பெரிதும் பாதித்துள்ளது.
கடந்த வருடத்தில் 13 சதவீதம் வரை புதிய வாகனத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையும் 29 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷிய உக்ரைன் பிரச்சனை நீடிக்கும் வரை இந்த விலை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.






