search icon
என் மலர்tooltip icon

    கார்

    எம்.ஜி. ZS EV
    X
    எம்.ஜி. ZS EV

    முன்பதிவில் அசத்தும் 2022 எம்.ஜி. ZS EV - கடந்த மாதம் இத்தனை யூனிட்களா?

    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய 2022 ZS EV மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் சமீபத்தில் புதிய 2022 ZS EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய 2022 ZS EV எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

    மார்ச் மாத விற்பனையிலும் 2022 ZS EV மாடல் அமோக வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், 2022 மார்ச் மாதத்தில் 2022 எம்.ஜி. ZS EV மாடலை வாங்க ஆயிரத்து 500 பேர் மட்டுமே முன்பதிவு செய்து இருந்தனர். ஒவ்வொரு மாதமும் முன்பதிவு யூனிட்கள் அதிகரித்து வருவதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரிப்பதை உணர முடிகிறது. 

    எனினும், சீனாவில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு காரணமாகவும், செமிகண்டக்டர் பற்றாக்குறை காரணமாகவும் புதிய ZS EV மாடலின் வினியோக பணிகளில் தொய்வு ஏற்படும் என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய 2022 எம்.ஜி. ZS EV மாடல் விலை ரூ. 21 லட்சத்து 09 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 25 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    2022 எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் நிரந்தர மேக்னட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 174 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும். 

    Next Story
    ×