search icon
என் மலர்tooltip icon

    கார்

    கியா EV6
    X
    கியா EV6

    கியா EV6 எலெக்ட்ரிக் இந்திய முன்பதிவு தேதி அறிவிப்பு

    கியா நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் கிராஸ்-ஓவர் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

    கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கியா EV6 எலெக்ட்ரிக் கிராஸ்-ஓவர் மாடல் இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி கியா EV6 மாடலுக்கான இந்திய முன்பதிவு மே மாதம் 26 ஆம் தேதி துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து கியா EV6 வெளியீடு நடைபெறும். 

    இந்திய சந்தையில் கியா EV6 மாடல் சி.பி.யு. (முழுமையாக உருவாக்கப்பட்ட மாடல்) வடிவில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தியா கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. 

     கியா EV6

    அம்சங்களை பொருத்தவரை கியா EV6 மாடல் GT-லைன் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் e-AWD சிஸ்டம், 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது காரின் திறனை 320 ஹெச்.பி., 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்த செய்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 425 கிலோமீட்டர்கள் வரை செல்லும். 

    இதே கார் 55.8 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட வேரியண்டிலும் கிடைக்கிறது. இது ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டூயல் மோட்டார் செட்டப் 235 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது.
    Next Story
    ×