search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓலா எலெக்ட்ரிக்"

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது S1 ஸ்கூட்டரின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
    • ஏற்கனவே இந்தியாவில் ஓலா S1 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓலா S1 புது வேரியண்ட் விலை ரூ. 80 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக S1 ப்ரோ ஸ்கூட்டருக்கு ஓலா எலெக்ட்ரிக் அறிவித்த ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் தீபாவளி வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 80 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் கிடைக்கும் 125சிசி ஸ்கூட்டர்களுக்கு இணையாக மாறி விடும்.

    ஓலா S1 தற்போதைய மாடலில் உள்ள அம்சங்கள் புது வேரியண்டிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புது வேரியண்டில் ஓலா S1 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 3 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட சிறிய பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. குறைந்த விலையை அடுத்த புதிய ஓலா S1 வேரியண்ட் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் பேஸ் வேரியண்டிற்கு போட்டியாக அமையும்.

    சமீபத்தில் தான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது. இந்த சலுகை அக்டோபர் 5 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் இந்த சலுகை தீபாவளி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் அதிரடி தள்ளுபடி வழங்குகிறது.
    • பண்டிகை காலக்கட்டத்தை முன்னிட்டு ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகை காலக்கட்டத்தை முன்னிட்டு S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்த சலுகையை ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கிறது. தள்ளுபடி சலுகையை அடுத்து ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

    முன்னதாக ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது ஓலா S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என்றே நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டருக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மேலும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. அதிரடி தள்ளுபடி மட்டுமின்றி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு நிதி சலுகைகளையும் வழங்கி வருகிறது. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதில் ஸ்கூட்டரை வாங்கிட முடியும். இதில் ஐந்து ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை தேர்வு செய்யும் போது ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இத்துடன் மாத தவணையில் வாங்கும் போது பிராசஸிங் கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாத தவணையில் வாங்குவோருக்கான வட்டி 8.99 சதவீதம் ஆகும். சமீபத்தில் தான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களுக்கு அக்சஸரீக்களை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி அறிவித்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ஓலா S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களுக்கு பண்டிகை காலத்தை ஒட்டி அக்சஸரீக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய S1 ஸ்கூட்டர் முன்பதிவு முதல் நாளிலேயே அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
    • இந்த ஸ்கூட்டரின் வினியோக பணிகள் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், தனது ஓலா S1 மாடல் விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ஓலா S1 மாடலுக்கான விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கியது.

    இந்த நிலையில், முன்பதிவு விவரங்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் ஓலா S1 ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர்களின் வினியோகம் செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முன்பதிவு ஓலா எலெக்ட்ரிக் வலைதளம் அல்லது ஓலா செயலி மூலமாகவே மேற்கொள்ள முடியும்.


    தோற்றத்தில் ஓலா S1 மற்றும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடையே எந்த மாற்றமும் தெரியாது. இரு ஸ்கூட்டர்களின் மெக்கானிக்கல் அம்சங்கள் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ஓலா S1 மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரியும், ஓலா S1 ப்ரோ மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது. ஓலா S1 ப்ரோ மாடலில் உள்ளதை விட S1 மாடலில் சிறிய பேட்டரியே வழங்கப்பட்டு உள்ளது.

    ஓலா S1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 141 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. ஓலா S1 ப்ரோ மாடல் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும். எடையும் ஓலா S1 மாடல் குறைவாகவே உள்ளது. ஓலா S1 மாடலை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரம் ஆகும். ஓலா S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களில் ஒரே மாதிரியான எலெக்ட்ரிக் மோட்டார் தான் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ஸ்கூட்டருக்கான இந்திய முன்பதிவு விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஒலா S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 99 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர்களை தொடர்ந்து ஓலா S1 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கி இருக்கிறது.

    அந்த வகையில் ஓலா S1 மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரூ. 499 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அறிமுக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஓலா S1 முன்பதிவு நடைபெறுகிறது. விற்பனை மற்றும் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்குகிறது.


    ஓலா S1 ஸ்கூட்டரை வாங்குவோர் அதற்கான கட்டணத்தை பல வழிகளில் செலுத்த முடியும். மேலும் கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உள்ளது. முன்னணி வங்கிகளுடன் சேர்ந்து மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. மாத தவணை ரூ. 2 ஆயிரத்து 999 என துவங்குகிறது. ஓலா S1 ஸ்கூட்டர் ஜெட் பிளாக், பொர்சிலெயின் வைட், நியோ மிண்ட் மற்றும் லிக்விட் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ஓலா S1 ஸ்கூட்டரில் 2.98 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 131 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். S1 ப்ரோ மாடலில் உள்ளதை போன்று இந்த மாடலில் ஹைப்பர் மோட் வழங்கப்படவில்லை. இது தவிர மற்ற அம்சங்கள் அனைத்தும் ஓலா S1 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கி வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி விட்டது.
    • மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவலையும் ஓலா அறிவித்து இருக்கிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் ஓலா S1 மாடலுக்கான முன்பதிவுகளை நேற்று (ஆகஸ்ட் 15) துவங்கி இருந்தது. மேலும் எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் அறிவித்து இருக்கிறது. இந்த கார் இந்திய சந்தையில் அதிவேகமான கார் மாடலாக இருக்கும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.

    அந்த வகையில் ஓலா எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை நான்கே நொடிகளில் எட்டிவிடும் என்றும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் உருவாக்கப்பட்டதிலேயே தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இது இருக்கும் என அவர் தெரிவித்தார். இந்த கார் ஆல் கிளாஸ் ரூஃப் மற்றும் சிறப்பான டிராக் கோ-எபிஷியண்ட் வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.


    இந்த கார் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சொந்த மூவ் ஓஎஸ் கொண்டிருக்கும். இத்துடன் உலகின் மற்ற கார்களிலும் இல்லாத வகையில் சிறப்பான டிரைவிங் திறன்களை இந்த கார் கொண்டிருக்கும். இதில் கீலெஸ் இயக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும். "இது சிறப்பான செயல்திறன், அசத்தல் டிசைன், மிகச் சிறந்த தொழில்நுட்பம் கொண்டிருக்கும்" என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    ஓலா எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை தவிர புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன ஆலையாக ஓலா பியுச்சர் பேக்டரி உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்து இருந்தார். இந்த ஆலையில் ஆண்டுக்கு பத்து லட்சம் ஸ்கூட்டர்கள், அதாவது ஒவ்வொரு இரு நொடிகளுக்கும் ஒரு ஸ்கூட்டர் வீதம் உற்பத்தி செய்ய முடியும்.

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி புது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை பகிர்ந்து இருக்கிறார்.
    • ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரண்டு அறிவிப்புகளை வெளியிட ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    ஆகஸ்ட் 15, 2021 அன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கிய ஓலா எலெக்ட்ரிக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக சில மாதங்களுக்கு முன்பே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எதிர்கால ஸ்டைலிங், இரு யு வடிவ ஹெட்லேம்ப்கள், பொனெட் நெடுக கிடைமட்ட ஸ்டிரைப் அடங்கிய செடான் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருந்தது. ஓலா பேட்ஜிங் கொண்ட இந்த கார் ஸ்ப்லிட் ஸ்டைல் எல்இடி டெயில் லேம்ப்-கள், கனெக்டிங் லைட் பார் வழங்கப்பட்டு இருக்கிறது.


    தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களின் படி ஓலா எலெக்ட்ரிக் செடான் மாடல் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோ மீட்டர் ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மேக்ஸ் மற்றும் எம்ஜி ZS EV போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் டீசர்களின் படி புது ஓலா எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. 

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏப்ரல் - மே மாதங்களில் மட்டும் ரூ. 500 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது.
    • எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் 50 சதவீத பங்குகளை ஓலா எலெக்ட்ரிக் பிடித்துள்ளது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், 2022-2023 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் மற்றும் மே 2022 மாதங்களில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ. 500 கோடி வரையிலான வருவாய் ஈட்டியதாக அறிவித்து இருக்கிறது.

    தற்போதைய நிலவரப்படி இந்த நிதியாண்டின் இறுதியில் 1 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 7 ஆயிரத்து 824 கோடி வருவாயை எட்டும் நிலையில் இருப்பதாகவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஓலா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    தற்போது ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 50 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. "வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக காட்சியளிக்கிறது. ஓலா பியுச்சர் பேக்டரியில் வாகன உற்பத்தியை சீராக இயக்க முடிகிறது."

    "இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எக்கச்சக்க முன்பதிவுகள் நடைபெற்று இருப்பதால், உற்பத்தி பணிகளை முடுக்கி விடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    • ஒலா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீட்டுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
    • இது அந்நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

    ஓலா நிறுவனம் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் செடான் மாடல் காரின் கான்செப்ட் படங்களை வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் ஓலா கஸ்டமர் டே நிகழ்வின் போது வெளியானது. இந்த நிகழ்வு பெங்களூரில் உள்ள ஆலையில் நடைபெற்றது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.


    டீசர் படங்களின் படி இந்த வாகனம் லோ-ஸ்லங் செடான் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இது ஸ்போர்ட் டிசைன், டபுள் பாரெல் ஹெட்லேம்ப்கள், அதனிடையே எல்.இ.டி. ஸ்ட்ரிப், பின்புறம் காரின் அகலம் முழுக்க எல்.இ.டி. ஸ்ட்ரிப் காணப்படுகிறது. தற்போது வெளியாக இருக்கும் புகைப்படங்களின் படி ஓலா நிறுவனம் தனது வாகனங்களில் டாப்-டவுன் வழிமுறையை பின்பற்றுவதாக தெரிகிறது.

    ஏற்கனவே ஓலா நிறுவனம் கால் டாக்சி துறையில் இயங்கி வருவதை அடுத்து, புதிய எலெக்ட்ரிக் கார்கள் கால் டாக்சிக்களாகவும் பயன்படுத்தலாம். எனினும், இது பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கிய ஓலா நிறுவனம் இதே பானியை தனது எலெக்ட்ரிக் காரிலும் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

    ×