search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஓலா S1 ப்ரோ
    X
    ஓலா S1 ப்ரோ

    சஸ்பென்ஷன் உடைந்ததற்கு இது தான் காரணம் - ஓலா எலெக்ட்ரிக் அதிரடி

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சஸ்பென்ஷன் உடைந்து விழுந்த சம்பவங்களுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களின் முன்புற சஸ்பென்ஷன் உடைந்து போவது சமீபத்தில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி இருந்தது. பலர் தங்களின் ஓலா ஸ்கூட்டரில் பயணிக்கும் போது பாதி வழியிலேயே சஸ்பென்ஷன் இயங்காததால் விபத்தில் சிக்கியதாக குற்றம்சாட்டி வந்தனர். 

    இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் விபத்துக்கள் தான் சஸ்பென்ஷன் இயங்காமல் போனதற்கு காரணம் என தெரிவித்து இருக்கிறது. 

     ஓலா

    “வாகன பாதுகாப்பு மற்றும் தரம் ஓலா நிறுவனத்தின் மிக முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. இன்று ஓலா நிறுவனத்தின் 50 ஆயிரம் ஸ்கூட்டர்கள் சாலையில் சென்று வருகின்றன. இதுவரை ஓலா ஸ்கூட்டர்கள் 45 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளன. முன்புற போர்க் உடைந்து போவதாக சமீபத்திய சம்பவங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விபத்துக்கள் தான் காரணம். எங்களின் ஸ்கூட்டர்கள் மிக கடினமான பரிசோதனைகளை பல்வேறு சூழல் மற்றும் இந்தியாவின் வித்தியாசமான சாலைகளில் எதிர்கொள்கின்றன.” என்று ஓலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    முன்னதாக, ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென முன்புற சஸ்பென்ஷன் யூனிட் இயங்காமல் போனது என குற்றம் சாட்டி உள்ளார். இதை அடுத்து ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் வாடிக்கையாளரான ஸ்ரீநாத் மேனன் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் வேலை செய்யவில்லை என வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.  
    Next Story
    ×