என் மலர்
கார்

டாடா டியாகோ
உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா டியாகோ - அதற்குள் இத்தனை யூனிட்களா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேச்பேக் மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா டியாகோ மாடல் இந்திய சந்தை உற்பத்தியில் நான்கு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. டியாகோ 4 லட்சமாவது யூனிட் சனந்த் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்திய சந்தையில் டாடா டியாகோ மாடல் 2016 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்த சமயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்த இம்பேக்ட் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டது. இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
2018 வாக்கில் இந்த மாடலுடன் டாடா டியாகோ NRG எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2020 ஆண்டு டியாகோ ஹேச்பேக் மாடல் அப்டேட் செய்யப்பட்டு பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அசத்தல் மாற்றங்களுடன் அறிமுகமானது. மேம்பட்ட டியாகோ NRG எடிஷன் 2021 வாக்கில், டாடா டியாகோ CNG மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

"இத்தகைய சாதனையை மிக குறுகிய காலக்கட்டத்தில் எட்டிய முதல் கார் என்ற வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இது வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல் ஆகும். டியாகோ மாடல் எங்களின் Turnaround 2.0 யுக்தியின் மிக முக்கிய மாடல் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டது முதல், இந்த மாடலின் விற்பனை மூலம் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்று இருக்கிறோம்."
"ஸ்டைலிஷ் லுக் மற்றும் அதிக அம்சங்களுடன் கிடைக்கும் பாதுகாப்பான கார் என்ற வகையில் இளைஞர்கள் விரும்பும் தேர்வாக இந்த மாடல் இருக்கிறது. முதல் முறை கார் வாங்குவோரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் டியாகோ மாடலை தேர்வு செய்கின்றனர்," என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விளம்பரம், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மைய பிரிவுகளின் துணை தலைவர் ராஜன் அம்பா தெரிவித்தார்.
Next Story






