என் மலர்

  நீங்கள் தேடியது "Tata Tiago"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை கடந்திருக்கிறது. #TataTiago  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ காரின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி டாடா டியாகோ கார் இந்தியாவில் சுமார் இரண்டு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்தியாவில் ஏப்ரல் 2016 இல் அறிமுகமான டாடா டியாகோ கார் கொடுக்கும் விலைக்கு தரமான ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டியாகோ கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் பழைய ஃபார்மிற்கு வந்ததை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.  டாடா டியாகோ கார் சமீபத்தில் XZ+ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் டியாகோ XZ+ வேரியண்ட் விலை ரூ.5.57 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய வேரியண்ட்டில் டாடா மோட்டார்ஸ் 7.0 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 15-இன்ச் அளவில் அலாய் வீல்களை வழங்கியிருக்கிறது.

  டாடா டியாகோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அந்த வகையில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது. 

  இந்த என்ஜின்கள் முறையே 85 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறனும் 70 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் AMT வேரியண்ட் ஆப்ஷனும் கிடைக்கிறது. 
  ×