search icon
என் மலர்tooltip icon

    கார்

    கியா கரென்ஸ் CNG
    X
    கியா கரென்ஸ் CNG

    விரைவில் இந்தியா வரும் கியா கரென்ஸ் CNG?

    கியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய CNG காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்.பி.வி. மாடலை இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்து இருந்தது. கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சிகர விலையில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து கியா கரென்ஸ் மாடலை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருந்தனர். 

    பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து இந்த மாடல் விலையில் ரூ. 70 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், கியா நிறுவனம் தனது கரென்ஸ் மாடலின் CNG வேரியண்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்பை புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

     கியா கரென்ஸ் CNG
    Photo Courtesy:V3Cars.com

    அதன்படி கியா கரென்ஸ் பூட் பகுதியில் CNG சிலிண்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வெளிப்புறம் பியூவல் லிட் அருகில் கியாஸ் செலுத்துவதற்கான குழாய் காணப்படுகிறது. இத்துடன் குவாட்டர் கிளாஸ் லேபல் இடம்பெற்று இருப்பதால், இது கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட வேரியண்ட் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்திய சந்தையில் கியா கரென்ஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5 லிட்டரெ என்ஜின் பிரீமியம் மற்றும் பிரெஸ்டிஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 1.4 லிட்டர் என்ஜின் பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் பிளஸ், லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸமிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய கரென்ஸ் CNG மாடல் அனைவருக்கும் விற்பனை செய்யப்படுமா அல்லது வாடகை கார் ஓட்டுனர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Next Story
    ×